Rasi Palan Today: இந்த 5 ராசிக்கு சத்திய சோதனை... 6 ராசிக்கு அத்தனையும் சாதனை... இன்றைய ராசிபலன்கள் இதோ!
Today Rasi Palan | இன்றைய ராசிபலன் 28 ஜனவரி 2022: இன்றைய நல்ல நேரம் முதல், எந்த ராசிக்கு நல்லா இருக்கும் என்பதை துல்லியமாக தொகுத்து வழங்குகிறோம்!
நல்ல நேரம்:
காலை- 9 மணி முதல் 10 மணி வரை
மாலை- 4:30 மணி முதல் 5:30 மணி வரை
கெளரி நல்ல நேரம்
இரவு - 6:30 மணி முதல் 7:30 மணி வரை
பகல்- 10:30 மணி முதல் 12 மணி வரை
குளிகை:
பகல் 7:30 மணி முதல் 9 மணி வரை
எம கண்டம்:
மாலை 3 மணி முதல் 4:30 மணி வரை
சூலம், பரிகாரம்:
மேற்கு , வெல்லம்
சந்திராஷ்டமம்:
பரணி
இன்றைய ராசிபலன்கள்:
மேஷம்:
உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்படும். வீண் கோபங்கள் எழலாம். உடன் பணிபுரிபவர்கள் எரிச்சலூட்டுவார்கள். வர வேண்டிய கடன் பாக்கிகள் தாமதம் ஆகலாம். வீண் அலைச்சல் ஏற்படும். பொறுமையோடு செயல்பட வேண்டிய நாள்.
ரிஷபம்:
அமைதியான மனநிலை ஏற்படும். எதிர்ப்புகள் பூர்த்தியாகும். நண்பர்கள் ஆறுதல் கிடைக்கும். உறவு வழி பிரச்சனைகள் தீர்ந்து அமைதி நிலவும். பெற்றோர் வழி மருத்துவ செலவுகள் வந்து போகும். கோயில் வழிபாடு பலன் தரும்.
மிதுனம்:
எதிர்பார்த்த பண வரவு இருக்கும். பணியில் மனநிறைவு இருக்கும். உயர் அதிகாரிகள் பாராட்டுவார்கள். மாணவர்கள், இளைஞர்களுக்கு நினைத்தது கிடைக்கும். பெற்றோரிடத்தில் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.
கடகம்:
வீண் செலவுகள் வந்து சேரும். அலைச்சல், மனஉளைச்சல் ஏற்படுத்தும் நாள். முடிந்தவரை உங்கள் வேலையை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். கல்வி பயிலும் மாணவர்களுக்கு வேலை அதிகரிக்கும். குடும்பத்தலைவிகள் நிறைய பொறுமை காக்க வேண்டும்.
சிம்மம்:
கடந்த சில நாட்களாக இருந்த போராட்டம் நீங்கும். உங்களுக்கான வெற்றி நாள் இன்று. நீங்கள் போடட திட்டங்கள் கைகூடும். உறவினர்கள், உடன்பிறந்தோர் கை கொடுப்பார்கள். கோபத்தை குறைத்தால், இன்னும் நட்பு வட்டாரம் பெருகும்.
கன்னி:
உங்கள் பணி மீது பெருமை வந்து சேரும். உங்களுக்கான பொறுப்புகள் சிறப்பாக முடிப்பீர்கள். உங்கள் நலனில் அக்கறை காட்டுவோர் சந்திப்பு கிடைக்கும். நல்லவர்களை அடையாளம் காண்பீர்கள். குடும்ப வழி சச்சரவுகள் வந்து விலகும்.
துலாம்:
எதிர்பார்த்த நன்மைகள் கை கூடும். முடிந்தவரை உடல்நலனில் அக்கறை செலுத்தவும். சுறுசுறுப்பாக செயல்படவும். குடும்பத்தார் அரவணைப்பு இருக்கும். குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல் ஏற்படலாம். நீண்டநாள் கனவுகள் நிறைவேற வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம்:
நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். வங்கி கடன் பாக்கிகள் அடைப்பீர்கள். புதிய கடன் வாங்கவும் வாய்ப்புள்ளது. பண வரவு இருக்கும். அதே நேரத்தில் செலவுகள் வரலாம். சுற்றுலா, பயணம் என மனம் மகிழ்ந்திருப்பீர்கள். வெளியூர் பயணம் தவிர்க்க முடியாது.
தனுசு:
தன வரவு தாராளம் இருக்கும். முடிந்தவரை பணம் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. மற்றவர்களை ஏளனமாக எண்ண வேண்டாம். உடன் பணிபுரிபவர்களை அரவணைத்து செல்லவும். எதிர்பார்ப்புகள் இல்லாமல் பணியாற்றினால், கைமேல் பலன் கிடைக்கும்.
மகரம்:
கேளிக்கை, விருந்து, சுபநிகழ்ச்சியில் பங்கேற்று மகிழ்வீர்கள். சுபமான நாளாக இன்றைய நாள் இருக்கும். நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். சுபச்செலவுகள் வரும். இல்லத்தில் நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது.
கும்பம்:
தொழிலில் கடுமையான போட்டி இருக்கும். லாபம் பெற போராட வேண்டியிருக்கும். போட்டிகளை கடந்து பணவர பெறுவீர்கள். மாணவர்கள் கல்வி மேலோங்கும். இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்திகள் வரலாம். புதிய வாகனம் வாங்க வாய்ப்புள்ளது.
மீனம்:
இன்று நீங்கள் நிறைய பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள். அவசரத்தால் வீண் செலவுகளை சந்திக்க நேரிடலாம். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். அதை நிறைவேற்ற சிரமப்படுவீர்கள். பிறர் பணிகளில் தலையிட வேண்டாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்