மேலும் அறிய

27 நட்சத்திரக்காரர்களுக்கான பரிகார கோயில் ஒரே இடத்திலா..? எங்கு இருக்கு தெரியுமா..?

ஒருவர் ஜாதகத்தில் ஒரு கிரகம் அமர்ந்திருக்கக் கூடிய நட்சத்திரமே அந்த கிரகத்தை இயக்கக்கூடிய வல்லமை பெற்றது.

12 ராசி கட்டம் 27 நட்சத்திரங்களை கொண்ட மண்டலத்தில் ஒவ்வொரு ஜாதகரும் ஒவ்வொரு ராசியில் அமர்ந்திருப்பார்கள். குறிப்பாக ராசிக்கு ஒரு நட்சத்திரம் நட்சத்திரத்திற்கு நான்கு பாதம் என 108 பாதங்கள் உண்டு.

ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களுக்கும் வெவ்வேறு விதமான தோஷங்கள் அமைந்திருக்கும் குறிப்பாக ஒரு ஜாதகருக்கு ஆறாம் வீட்டில்  அமர்ந்திருக்கக் கூடிய கிரகம் எந்த நட்சத்திரம் வாங்கி இருக்கிறது, அந்த நட்சத்திரம் ஜாதகருக்கு நோய் உண்டாக்க கூடும்  அல்லது ஆறாம் அதிபதி எந்த நட்சத்திரத்தில் ஏறி இருக்கிறாரோ அந்த நட்சத்திரம் ஜாதகருக்கு நோய் எதிரிகளை உருவாக்கக்கூடும் .

இப்படியாக ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஏதாவது ஒரு வகையில் ஜாதகருக்கு தொடர்பு உண்டு. இப்படி கர்மாவின் அடிப்படையில் எந்த நட்சத்திரம் ஜாதகருக்கு பிரச்சனை பண்ணாலும் அதற்கான கோவில்கள் உண்டு. அந்த ஸ்தலத்திற்கு சென்று வழிபடுவதன் மூலம் ஜாதகருக்கு ஏற்படக்கூடிய இன்னல்களை நாம் தீர்க்கலாம்.

கிரகங்களும் அதற்கான கோவில்களும் :

 ஒவ்வொரு ஜாதகத்திலும் ஒன்பது கோள்கள் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்திருக்கும். அப்படி அமர்ந்திருக்கக்கூடிய இடம் ஜாதகருக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ கூட அமையக்கூடும். அப்படி கிரகங்கள் சாதகமாக அமைந்துவிட்டால் ஜாதகருக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்க்கை சுமூகமாக போகும்.

ஆனால் அதுவே ஜாதகருக்கு பாதகமான சூழ்நிலையை கிரகங்கள்  ஏற்படுத்தினால் அதற்கான பரிகார ஸ்தலங்களுக்கு சென்று வர வேண்டும் . உதாரணத்துக்கு மிதுன லக்னத்தில் ஒரு ஜாதகர் பிறந்து எட்டாம் பாவத்தில் சனி நீச்சமாக இருந்து சனி திசை நடக்குமாயின், ஜாதகர் கடுமையான கெடு பலன்கள் சந்திப்பார். அப்படி கெடு பலன்கள் அவர் சந்திக்காமல் இருக்க நிச்சயமாக சனி பகவான் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல, குரு  ஜாதகத்தில் வலிமை இழந்து நீர்ச்சகெதியில் மகர ராசியில் பிரவேசிக்கும் போது ஜாதகர் குரு திசையில் மிகப்பெரிய அவமானங்களையும் கஷ்டங்களையும் விபத்து கண்டங்களிலும் சந்திக்க நேரிடும். அப்படி சந்திக்காமல் இருப்பதற்கு குரு ஸ்தலங்களுக்கு சென்று குருபகவானை வழிபட வேண்டும். இப்படி கிரகங்களினால் ஏற்படுகின்ற தோஷங்களுக்கு கிரகங்களின் தீர்வு காண கோவில்களை கண்டுபிடித்து எப்படி போகிறோமோ அதேபோல ஒவ்வொரு கிரகங்களும் அமர்ந்த நட்சத்திரத்தின் குறிப்பிட்ட நட்சத்திர கோவில்களுக்கு சென்று வருவது சாலச் சிறந்தது .

நட்சத்திரங்களும் அதற்கான பரிகார கோவில்களும் :

ஒருவர் ஜாதகத்தில் ஒரு கிரகம் அமர்ந்திருக்கக் கூடிய நட்சத்திரமே அந்த கிரகத்தை இயக்கக்கூடிய வல்லமை பெற்றது. அப்படி இருக்கும் சமயத்தில் அந்த நட்சத்திரத்திற்கான பரிகார கோவில்களுக்கு சென்று வர வேண்டும் . ஒருவருடைய ஜாதகத்தில் கேது உத்திர நட்சத்திரத்தில் அமர்ந்திருக்குமாயின் நிச்சயமாக சிவன் கோவிலுக்கு அல்லது சூரிய பகவான் வழிபாடு மிகச் சிறந்தது . நட்சத்திரங்களுக்கான கோவில்களை தனித்தனியே கண்டுபிடிப்பதை விட 27 நட்சத்திரங்களுக்கும் ஒரே ஒரு கோவில் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது .

27 நட்சத்திர கோவில் எங்கு உள்ளது..?

தமிழ்நாட்டில் 27 நட்சத்திரங்களுக்கும் சேர்த்து ஒரு கோவில் உள்ளது அந்த கோவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வில்வாரணி என்ற இடத்தில் இருக்கும்  முருகப்பெருமானுடைய சுப்பிரமணி சுவாமி திருக்கோவில் . இதை 27 நட்சத்திர கோவில் என்றும் அழைப்பார்கள். இங்கு உங்களுடைய ஜாதகத்தில் எந்த நட்சத்திரத்தால் உங்களுக்கு தோஷம் ஏற்பட்டிருந்தாலும், அதுக்கான பரிகாரமாக வில்வாரணையில் இருக்கக்கூடிய நட்சத்திர கோவிலுக்கு வந்து நீங்கள் முருகப்பெருமான் அதாவது சிவபெருமானின் வடிவில் இருக்கக்கூடிய முருக  பெருமானை நீங்கள் வணங்கி வந்தால் உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மிகப்பெரிய தோஷங்கள் விலகி நன்மை உண்டாகும் .

கோவில் அமைப்பு எப்படி இருக்கும் ?

பல படிகளைக் கொண்ட இந்த கோவிலை நீங்கள் மலை மீது சென்று முருகப்பெருமானை தரிசிக்க வேண்டும். அதுவும் கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமானின் அருளை நீங்கள் சிறப்பாக பெறலாம். கோவிலின் அமைப்பு என்று பார்த்தால்  படிக்கட்டு ஏறி நீங்கள் சுவாமி தரிசனம் செய்யும் பொழுது நிச்சயமாக மலேசியாவில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் சிலையை அங்கே வடித்து வைத்திருக்கிறார்கள். அவரை நீங்கள் தரிசனம் செய்துவிட்டு கோவிலுக்குள் உள்ளே செல்லும் பொழுது விநாயகப் பெருமானின் தரிசனம் கிடைக்கும். அங்கே அவரையும் வணங்கி விட்டு நேராக முருகப்பெருமானின் திருவடிகளைப் பற்றிக் கொண்டார். எனவே உள்ளே முருகப்பெருமான் காட்சியளிக்க மாட்டார். அதற்கு பதிலாக சிவலிங்கம் தான் இருக்கும் ஆம் சிவலிங்கத்தின் வடிவில் தான் முருகப்பெருமான் நமக்கு காட்சியளிக்கிறார் .

பரிகாரத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள் :

மலை ஏறி சுவாமி தரிசனம் செய்த பின்பாக நீங்கள் நிச்சயமாக பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். குறிப்பாக 27 நட்சத்திரத்துக்கான திசை நடந்தே தீரும். அந்த சமயங்களில் உங்களுக்கு சூரிய திசை, சந்திர திசை, செவ்வாய் திசை, ராகு திசை, கேது திசை, புதன் திசை, சனி திசை, குரு திசை, சுக்கிர திசை என்று அனைத்து திசைகளுக்குமான ஒரே தீர்வு பில்வாரணையில் இருக்கக்கூடிய நட்சத்திர கோவில் மட்டுமே . அப்படி ஒவ்வொரு நட்சத்திரத்திற்குமான திசை நடக்கும்பொழுது நீங்கள்  நிவாரணைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வாருங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கக்கூடிய மாற்றங்களை நீங்களே பாருங்கள். உங்களுடைய ஜாதகத்தில் ஒரு கிரகம் படுமோசமாக நீச்சகத்தில் இருந்தாலும் கூட ஏதோ ஒரு கர்மாவின் அடிப்படையில் நீங்கள் நட்சத்திர கோவிலுக்கு சென்றே தீர்வீர்கள். அப்படி செல்லும் பட்சத்தில் உங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் நடந்தே தீரும் .

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget