மேலும் அறிய
Advertisement
வேளாங்கண்ணியில் கோலாகலமாக நடந்த உத்திரியமாதா தேர் பவனி - மகாராஷ்டிரா வசாய் கிறிஸ்தவ மீனவர்கள் பங்கேற்பு
திருவிழாவில் பங்கேற்ற மகாராஷ்டிராவை சேர்ந்த வசாய் கிறிஸ்தவ மீனவர்கள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேரின் மீது மலர்களை தூவி பிரார்த்தனை செய்தனர்.
வேளாங்கண்ணியில் கோலாகலமாக நடைபெற்ற உத்திரியமாதா தேர்பவனி திருவிழாவில் மகாராஷ்டிராவை சேர்ந்த வசாய் கிறிஸ்தவ மீனவர்கள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேரின் மீது மலர்களை தூவி பிரார்த்தனை செய்தனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோவில் உலகப் புகழ்பெற்ற புனித ஸ்தலமாகவும் சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் வந்து செல்கின்றனர். இந்த புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் உள்ள புனித உத்திரிய மாதா ஆண்டு திருவிழா கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாலமாக தொடங்கியது. மாதா கோவிலின் முக்கிய திருவிழாவான தேர்பவனி நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக பேராலயத்திலிருந்து எழுந்தருளிய புனித உத்திரிய மாதா தேரினை மகாராஷ்டிர மாநிலம் மும்பை வசாய் கிறிஸ்தவ மீனவப் பெண்கள் பாரம்பரிய முறைப்படி சுமந்து வந்தனர்.
தேரானது வேளாங்கண்ணி கடற்கரை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றபொழுது இருபுறமும் நின்றிருந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித உத்திரியமாதா, செபஸ்தியர், அந்தோணியர் ஆகிய தேர் மீது மலர்களை தூவி தங்களுடைய பிரார்த்தனையை நிறைவேற்றினர். தேர் நிலையை வந்தடைந்ததும் வசாய் கிறிஸ்தவ மீனவர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் உற்சாக நடனம் ஆடி மகிழ்ந்தனர்.
திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முத்திரையர் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கடலில் குளிப்பதற்கு தடை விதித்து ஒலிபெருக்கி மூலமாகவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் கடலில் இறங்குபவர்களை தடுத்து அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion