மேலும் அறிய

March Month Rasi Palan: துலாம் முதல் மீனம் வரை.. யோகமா?.. சோகமா? ... மார்ச் மாத ராசிபலன்கள் இதோ..!

March Month Rasi Palan 2022 in Tamil: மார்ச் மாதம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் என்பதை நாம் கீழே காணலாம்.

துலாம்

எதிலும் துல்லியமாகச் செயல்படும் துலாம் ராசி அன்பர்களே, இந்த மாதத்தில் சூரியன் 5ல் இருப்பதால் திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். மாணவர்களுக்கு பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். 15ஆம் தேதி முதல் சூரியன் 6ல் இருப்பதால் பூர்வீக சொத்துக்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் இழுபறியான பணிகள் நிறைவடையும். எதிராக செயல்பட்டவர்களை அறிந்து வெற்றி கொள்வீர்கள். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். செவ்வாய் 8ல் இருப்பதால் எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். 

வாக்குறுதிகளை அளிக்கும்போது சிந்தித்து செயல்படவும். பொருளாதாரம் ஏற்ற, இறக்கமாக இருக்கும். 14ஆம் தேதி முதல் செவ்வாய் 9ல் இருப்பதால் வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் அமைதி உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதன் 5ல் இருப்பதால் மனதில் புதுவிதமான தெளிவுடன் காணப்படுவீர்கள். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். 09ஆம் தேதி முதல் புதன் 6ல் இருப்பதால் பயணங்களின் மூலம் ஆதாயமும், லாபமும் அதிகரிக்கும். கணிதம் சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். சுக்ரன் 6ல் இருப்பதால் இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் கோபம் அதிகரிக்கும். 

 13ஆம் தேதி முதல் சுக்ரன் 7ல் இருப்பதால் செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். குரு 6ல் இருப்பதால் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வுக்கான சூழல் அமையும். பயணத்தின்போது தேவையான ஆவணங்களை எடுத்து செல்லவும். சனி 4ல் இருப்பதால் குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பெரியோர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். ராகு 7ல் இருப்பதால் வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். கேது ராசியில் இருப்பதால் நீண்ட நாட்களாக தடைபட்ட சில காரியங்கள் நிறைவு பெறும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும்.

வழிபாடு: சூரியனை வழிபாடு செய்து வர எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 

விருச்சிகம்

சுறுசுறுப்பாகச் செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதத்தில் சூரியன் 4ல் இருப்பதால் சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். தந்தைவழி உறவினர்களின் ஆதரவு மேம்படும். கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். 15ஆம் தேதி முதல் சூரியன் 5ல் இருப்பதால் பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். முக்கிய முடிவுகளில் நிதானம் வேண்டும். மனதில் புதுவிதமான நம்பிக்கை உண்டாகும். சமூக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். செவ்வாய் 7ல் இருப்பதால் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிரபலமானவர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். 14ஆம் தேதி முதல் செவ்வாய் 8ல் இருப்பதால் உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். 

துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதன் 4ல் இருப்பதால் சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். 09ஆம் தேதி முதல் புதன் 5ல் இருப்பதால் குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சுக்ரன் 5ல் இருப்பதால் நுட்பமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். 13ஆம் தேதி முதல் சுக்ரன் 6ல் இருப்பதால் கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்லவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலம் உண்டாகும். 

சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். குரு 5ல் இருப்பதால் கல்வி சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். மனதில் இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சனி 3ல் இருப்பதால் மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். தொழில்நுட்ப கருவிகளின் மீது ஆர்வம் ஏற்படும். ராகு 6ல் இருப்பதால் வர்த்தகம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். வியாபார பணிகளில் புதிய எண்ணங்கள் அதிகரிக்கும். கேது 12ல் இருப்பதால் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உலகியல் வாழ்க்கையை பற்றிய புரிதல் ஏற்படும்.

வழிபாடு: முருகப்பெருமானை வழிபாடு செய்வதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். 

தனுசு 

தர்ம நெறிகளுக்கு உட்பட்டுச் செயல்படும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதத்தில் சூரியன் 3ல் இருப்பதால் பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். 15ஆம் தேதி முதல் சூரியன் 4ல் இருப்பதால் வியாபார பணிகளில் அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். பெரியோர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உயர்கல்வியில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். செவ்வாய் 6ல் இருப்பதால் மாமன் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வித்தியாசமான அணுகுமுறைகளின் மூலம் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். 14ஆம் தேதி முதல் செவ்வாய் 7ல் இருப்பதால் சாதுரியமான பேச்சுக்களின் மூலம் பலரின் அறிமுகங்களை உருவாக்குவீர்கள். புதன் 3ல் இருப்பதால் உடன்பிறந்தவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். 

சிறு மற்றும் குறுந்தொழில் புரிபவர்களுக்கு புதிய அனுபவம் கிடைக்கும். 09ஆம் தேதி முதல் புதன் 4ல் இருப்பதால் உயர்கல்வியில் ஏற்பட்ட குழப்பம் குறையும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் சிந்தித்து முடிவு எடுக்கவும். சுக்ரன் 4ல் இருப்பதால் மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். மனதை உறுத்திய கவலைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். 13ஆம் தேதி முதல் சுக்ரன் 5ல் இருப்பதால் உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 

குரு 4ல் இருப்பதால் கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். பயணங்கள் செல்வது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். சனி 2ல் இருப்பதால் குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். ராகு 5ல் இருப்பதால் மற்றவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் புதிய வாய்ப்புகள் உண்டாகும். கேது 11ல் இருப்பதால் சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

வழிபாடு: தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்து வர விருப்பங்கள் நிறைவேறும். 

மகரம்

நிதானமாக செயல்பட்டு வெற்றி வாய்ப்புகளை உருவாக்கும் மகர ராசி அன்பர்களே, இந்த மாதத்தில் சூரியன் 2ல் இருப்பதால் நண்பர்களிடத்தில் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். 15ஆம் தேதி முதல் சூரியன் 3ல் இருப்பதால் உத்தியோக பணிகளில் திருப்தியற்ற சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும். தனித்திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். செவ்வாய் 5ல் இருப்பதால் உறவினர்களிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். வாகன பழுதுகளை சீர் செய்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். 14ஆம் தேதி முதல் செவ்வாய் 6ல் இருப்பதால் உத்தியோக பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். 

ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். புதன் 2ல் இருப்பதால் எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். 09ஆம் தேதி முதல் புதன் 3ல் இருப்பதால் போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். சுக்ரன் 3ல் இருப்பதால் உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். 13ஆம் தேதி முதல் சுக்ரன் 4ல் இருப்பதால் சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். 

வெளியூர் பயணங்கள் செல்வது தொடர்பான சிந்தனைகள் ஈடேறும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். குரு 3ல் இருப்பதால் செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகளை அறிந்து கொள்வீர்கள். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். சனி ராசியில் இருப்பதால் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். ராகு 4ல் இருப்பதால் மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். கேது 10ல் இருப்பதால் வியாபாரத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களை பொறுமையுடன் கேட்கவும். 

வழிபாடு: விநாயகப் பெருமானை வழிபாடு செய்து வர தடைகள் விலகும். 

கும்பம்

சாணக்கியத்தனமாக செயல்படும் கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதத்தில் சூரியன் ராசியில் இருப்பதால் மனதில் உத்வேகமான சிந்தனைகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், நெருக்கமும் அதிகரிக்கும். 15ஆம் தேதி முதல் சூரியன் 2ல் இருப்பதால் வாக்கு சாதுரியத்தின் மூலம் லாபம் அடைவீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். செவ்வாய் 4ல் இருப்பதால் புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். 14ஆம் தேதி முதல் செவ்வாய் 5ல் இருப்பதால் மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். புதன் ராசியில் இருப்பதால் பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் தடுமாற்றம் உண்டாகும். கல்வி சார்ந்த செயல்பாடுகளில் புதுவிதமான சூழல் உண்டாகும். 

09ஆம் தேதி முதல் புதன் 2ல் இருப்பதால் புதுவிதமான ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். சுக்ரன் 2ல் இருப்பதால் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வழக்கு சார்ந்த பணிகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். 13ஆம் தேதி முதல் சுக்ரன் 3ல் இருப்பதால் திறமைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் ஈடேறும். குரு 2ல் இருப்பதால் கால்நடை சார்ந்த வியாபாரத்தில் ஆதாயம் அடைவீர்கள். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். 

சனி 12ல் இருப்பதால் உத்தியோகம் தொடர்பான புதிய வாய்ப்புகள் கைகூடும். சந்தேக உணர்வுகளை குறைத்து கொள்ளவும். சூழ்நிலைகளை அறிந்து முடிவு எடுப்பீர்கள். ராகு 3ல் இருப்பதால் மனதில் இருக்கும் விஷயங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் தெளிவு ஏற்படும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவது நல்லது. கேது 9ல் இருப்பதால் புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்கள் சிந்தித்து செயல்படவும்.

வழிபாடு: பைரவரை வழிபாடு செய்து வர மனப்பக்குவம் அதிகரிக்கும். 

மீனம்

புதுமைகளை விரும்பி செய்யும் மீன ராசி அன்பர்களே, இந்த மாதத்தில் சூரியன் 12ல் இருப்பதால் உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். 15ஆம் தேதி முதல் சூரியன் ராசியில் இருப்பதால் இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். இடமாற்றங்கள் புதிய அனுவபத்தை அளிக்கும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். செவ்வாய் 3ல் இருப்பதால் வியாபார பணிகளில் தவறிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். 14ஆம் தேதி முதல் செவ்வாய் 4ல் இருப்பதால் எதிர்பாலின மக்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் ஏற்படும்.

புதன் 12ல் இருப்பதால் நண்பர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும். வியாபார ரீதியான பணிகளில் லாபமும், அனுபவமும் அதிகரிக்கும். 09ஆம் தேதி முதல் புதன் ராசியில் இருப்பதால் பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகளின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். சுக்ரன் ராசியில் இருப்பதால் உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். 13ஆம் தேதி முதல் சுக்ரன் 2ல் இருப்பதால் மென்மையான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். காப்பீடு சார்ந்த துறைகளில் தனவரவுகள் அதிகரிக்கும். 

குரு ராசியில் இருப்பதால் இழந்த பொருளை மீட்பதற்கான சூழல் உண்டாகும். வெளிநாடு தொடர்பான வேலைவாய்ப்புகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். சனி 11ல் இருப்பதால் உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ராகு 2ல் இருப்பதால் கலகலப்பான பேச்சுக்களின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். கேது 8ல் இருப்பதால் குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத அலைச்சலும் சிறு சிறு ஏமாற்றங்களும் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும்.

வழிபாடு: கன்னிமார்களை வழிபாடு செய்து வர முயற்சிகள் ஈடேறும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: 50 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட எமெர்ஜென்சி ஒரு கருப்பு நாள் - ஜனாதிபதி பேச்சால் சலசலப்பு
50 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட எமெர்ஜென்சி ஒரு கருப்பு நாள் - ஜனாதிபதி பேச்சால் சலசலப்பு
உச்சத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 79,000க்கு மேல் உயர்வு; சுமார் 24,000 வர்த்தகத்தில் நிஃப்டி!
உச்சத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 79,000க்கு மேல் உயர்வு; சுமார் 24,000 வர்த்தகத்தில் நிஃப்டி!
Latest Gold Silver Rate: சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: 50 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட எமெர்ஜென்சி ஒரு கருப்பு நாள் - ஜனாதிபதி பேச்சால் சலசலப்பு
50 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட எமெர்ஜென்சி ஒரு கருப்பு நாள் - ஜனாதிபதி பேச்சால் சலசலப்பு
உச்சத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 79,000க்கு மேல் உயர்வு; சுமார் 24,000 வர்த்தகத்தில் நிஃப்டி!
உச்சத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 79,000க்கு மேல் உயர்வு; சுமார் 24,000 வர்த்தகத்தில் நிஃப்டி!
Latest Gold Silver Rate: சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
Parliament Session: 2036ல் ஒலிம்பிக் நடத்த தயார்.. புதிய சட்டங்கள் மூலம் நியாயம்.. குடியரசுத்தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்!
Parliament Session: 2036ல் ஒலிம்பிக் நடத்த தயார்.. புதிய சட்டங்கள் மூலம் நியாயம்.. குடியரசுத்தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்!
Kalki 2898 AD‌‌ Review: அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
TANUVAS: கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? நாளை கடைசி!
TANUVAS: கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? நாளை கடைசி!
L.K.Advani: திடீர் உடல்நலக்குறைவு.. நள்ளிரவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி - தீவிர சிகிச்சை!
திடீர் உடல்நலக்குறைவு.. நள்ளிரவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி - தீவிர சிகிச்சை!
Embed widget