காஷ்மீரில் ரூ.33 கோடி செலவில் ஏழுமலையான் கோயிலுக்கு அடிக்கல்!
காஷ்மீரில் ரூ.33 கோடி செலவில் ஏழுமலையான் கோயிலுக்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. வேதபாட சாலையும் அமைகிறது.
காஷ்மீரில் ரூ.33 கோடி செலவில் ஏழுமலையான் கோயில் அமைகிறது. இதற்காக நேற்று பூமி பூஜை நடைபெற்றது. இந்த ஏழுமலையான் கோயில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்டப்படுகிறது.
Srikalahasti Temple: காளஹஸ்தி கோயிலில் சாமி தரிசன நேரம் நீட்டிப்பு - பக்தர்கள் மகிழ்ச்சி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சட்டப்பிரிவு 370ன் கீழ் சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலமாக இருந்த நிலையில், அதன் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. கடந்த 2019ல், ஜம்மு காஷ்மீர் சீரமைப்புச் சட்டத்தின்படி, ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்விரு யூனியன் பிரதேசங்களின் ஆட்சி முறை 31 அக்டோபர் 2019 அன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது. ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா இருக்கிறார். நேற்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் திருப்பதியில் ஏழுமலை கோயில் அமைவது தொடர்பாக அறிவித்தார்.
அவரது டுவிட்டர் பக்கத்தில், ‘மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயிலுக்கான பூமி பூஜை நடைபெற்றது. திருப்பதி திருமலை தேவஸ்தான் சார்பில் மஜீன் எனும் பகுதியில் பூமி பூஜை நடைபெற்றது. பூமி பூஜையில் நான் பங்கேற்று, அடிக்கல் நாட்டிவைத்தேன். மத்திய அமைச்சர்கள் ஜிதேந்திர சிங், கிஷன் ரெட்டி மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி குடிகொண்டுள்ள இந்த புனித பூமியில் ஏழுமலையான் கோயில் அமைய வேண்டும் என்பது காஷ்மீர் மக்கள் மற்றும் வட இந்தியர்களின் நீண்ட கால விருப்பம். அது இன்று நிறைவேறியிருக்கிரது. ஜம்மு காஷ்மீர் வரலாற்றில் இன்றைய தினம் பெருமைமிகு நாள். வரலாற்றுச் சிறப்புமிக்க நாளும்கூட. கோயிலில், முக்கிய பூஜாரிகள், மேற்பார்வையாளர்களை தவிர மற்றவர்கள் உள்ளூர் மக்களாக இருப்பர்.
Today unveiled plaque marking the laying of foundation stone of Sri Venkateswara Swamy Temple of Tirumala Tirupati Devasthanams at Majeen, Jammu. pic.twitter.com/j8VfsPvXut
— Office of LG J&K (@OfficeOfLGJandK) June 13, 2021
மேலும் இங்கே வேத பாடசாலை அமையவிருக்கிறது. இது இந்திய கலாச்சாரத்தின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும். காஷ்மீரில் பாலாஜி கோயில் அமைவதால், இங்கே சுற்றுலா மேம்படும். பலதுறையிலும் மக்களின் வாழ்வாதாரம் பெருகும். நாட்டின் பொருளாதாரம் உயரும்’ எனப் பதிவிட்டுள்ளார்.
62 ஏக்கர் நிலம், 18 மாதங்களில் தயார்..
காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்முவில் மஜீன் கிராமத்தில் ஏழுமலையான் கோவில் கட்ட 62 ஏக்கர் நிலத்தை காஷ்மீர் அரசு 40 ஆண்டு குத்தகைக்கு வழங்கியுள்ளது. திருக்கோயில் வளாகத்தில் வேதபாடசாலை, திருமண மண்டபம், பக்தர்கள் தங்குமிடம், ஊழியர்களுக்கான குடியிருப்பு, வாகன நிறுத்துமிடம் ஆகியவை அமைய உள்ளன. 18 மாதங்களில் கட்டுமானப் பணி முடிவடையும். மொத்த செலவு ரூ.33 கோடியே 22 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை: சிறப்பாக நடைபெற்ற வைத்தியநாத சுவாமி கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா..!