‛கோவிந்தா... கோவிந்தா... கோஷம்’ அபய பிரதான ரங்கநாதர் ஸ்வாமி சித்திரை திருவிழா தேரோட்டம்!
நாள்தோறும் இரவு சுவாமி திருவீதி உலா யானை வாகனத்திலும், குதிரை வாகனத்திலும், வெள்ளி கருட வாகனத்திலும், சிம்ம வாகனங்கள் போன்ற பல்வேறு வாகனத்தில் நடைபெறும்.
கரூர் மேட்டுத் தெரு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் ஸ்வாமி ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்வாக சுவாமி தேரோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
கரூர் , மேட்டுத் தெரு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு கடந்த 06.05.2022 காலை கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாள்தோறும் இரவு சுவாமி திருவீதி உலா யானை வாகனத்திலும், குதிரை வாகனத்திலும், வெள்ளி கருட வாகனத்திலும், சிம்ம வாகனங்கள் போன்ற பல்வேறு வாகனத்தில் சுவாமி திருவீதி உலா காட்சி அளித்து வருகிறார். சித்திரை மாத திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
சித்திரை மாத தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு காலை 6 மணியளவில் ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் முத்தங்கி அலங்காரத்தில் சுவாமி ஆலயம் வலம் வந்த பிறகு ஆலயம் அருகே உள்ள தேர்மீது கொலுவிருக்க செய்தனர்.
அதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் ஆலயத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக அபய பிரதான ரங்கநாதசுவாமி சித்திரை மாத தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சுவாமி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் சித்திரை மாத தேர் நிலைக்கு வந்தடைந்தது.
பின்னர் அபய பிரதான ரங்கநாத சுவாமிக்கு பட்டாச்சாரியார் கற்பூர தீபாராதனை காட்டினார். அதை தொடர்ந்து கூடியிருந்த பக்தர்களுக்கு துளசி மட்டும் மஞ்சள் பிரசாதம் வழங்கப்பட்டது. ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலய சித்திரை மாத தேரோட்ட நிகழ்ச்சி சிறப்பாக நிறைவு பெற்றது.
கரூர் மேட்டு தெரு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத தேரோட்ட நிகழ்ச்சி காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சிறப்பித்தனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத சுவாமி சித்திரை மாத தேரோட்ட நிகழ்ச்சியில் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஆலயம் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.