மேலும் அறிய
Advertisement
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் அமாவாசை பூஜைக்கு தடை; கோயில் முன் குவிந்த பெண்கள்!
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் சோமவார அமாவாசை பூஜை செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமையன்று வரும் அமாவாசை பெண்கள் அரச மரத்தை சுற்றி வந்து வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. திங்கட்கிழமை அமாவாசையான இன்று, காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் அரசமர வழிபாடு செய்ய ஏராளமான பெண்கள் வருவார்கள் என்பதால், இன்று ஒருநாள் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டதுள்ளது.
ஒவ்வொரு அமாவாசை அன்றும் தாய் தந்தை இழந்தவர்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, அன்னதானம் செய்வது வழக்கம். அதுவும் குறிப்பாக திங்கட்கிழமையன்று வரும் அமாவாசை அன்று திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் திருமணம் ஆகி குழந்தை பேறு வேண்டி இருக்கும், பெண்கள் அரச மரத்தை சுற்றி வருவது வழக்கமாக உள்ளது . அரச மரத்தின் கீழ் உள்ள விநாயகர் மற்றும் நாகர் களை மஞ்சள் குங்குமம் வைத்து எலுமிச்சை மற்றும் தேங்காயில் தீபமேற்றி அரசமரத்தை சுற்றி வருவார்கள்.
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் உள்ளே உள்ள அரச மரத்தையும் அதன் கீழுள்ள விநாயகர் மற்றும் நாகர் களையும் இன்று ஏராளமான பெண்கள் தங்களது வேண்டுதல், நிறைவேற சுற்றி வந்து வழிபடுவது வழக்கமாக உள்ளது. தற்போது கெரானா அச்சம் காரணமாக இந்து சமய அறநிலையத் துறையினர், இன்று கோயிலை நடை சாத்தி விட்டு வெளியே இன்று கோவில் திறந்து இருக்காது என பதாகை வைத்துள்ளனர்.
இதனை அறியாத காஞ்சிபுரம் மற்றும் வெளி ஊர்களில் இருந்து வந்த ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே தேங்காய் பழம் வைத்து வழிபட்டு செய்தனர். ஒரு சிலர் கோயிலுக்கு வெளியே மாடவீதியில் உள்ள அரசமரத்தை சுற்றிவந்து வழிபாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் வரலாறு
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் வளாகத்துக்குள் இரண்டு சிவன் கோயில்கள் அமைந்திருப்பது வித்தியாசமானது. 10 -ஆம் நூற்றாண்டு தண்டியலங்காரத்தில் "கனல் மழுவன் கச்சாலை எம்மான்' என்ற மேற்கோள் பாட்டு எடுத்துக்காட்டப் பட்டுள்ளதால், பல்லவர் காலம் முதல் இத்திருக்கோயில் இருந்திருக்கிறது. ஆலயத்தில் அமைந்துள்ள திருக்குளத்தின் பெயர் இட்ட சித்திக் தீர்த்தம் ஆகும். இக்குளத்தில் மூழ்கி குளிப்பவர்களுக்குச் சிவபெருமான் திருவருள் பாலிப்பார்.
இத்தீர்த்தக் குளத்தைக் கண்டவர்களும், தன் உடம்பில் இத்தீர்த்தத்தை தெளித்தக் கொண்டவர்களுக்கும், மூழ்கிக் குளிப்பர்களுக்கு அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு பேறு போன்ற உறுதிப் பொருளை அடைவார்கள் என்றும் சிவஞான முனிவர் அருளியுள்ளார். இந்த இட்ட சித்தி தீர்த்தக் குளத்தில் ஞாயிற்றுக் கிழமை முழுகினால் குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறந்திடும், மனைவி அமையாதவர்களக்கு நல்மனைவி அமைந்திடும், நோயில் துன்புறும் மக்கள் நோய் தீர்ந்து அவர்களின் ஆயுள் கெட்டிப்படும், கல்வி அறிவைப் பெறுவர்.
மேலும் , பொன் பொருள் இல்லாதவர் அனைத்துச் செல்வமும் பெற்றுச் சிறப்புடன் வாழ்வர் மற்றும் பதவி வேலை இல்லாதவர் பணியையும் பெற்று வாழ்வார்கள், என்று மாதவச் சிவஞான முனிவர் அவர்கள் திருக்குளத்தைக் குறித்து சிறப்பித்துக் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
கல்வி
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion