மேலும் அறிய

Guru Peyarchi 2024: குரு பெயர்ச்சி 2024! 4 ராசிகளுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட் - எந்தெந்த ராசி?

குரு பெயர்ச்சி 2024 ஆம் ஆண்டு எந்த ராசிகாரர்களுக்கு யோகம் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

குரு பெயர்ச்சி மே 1ம் தேதி வருகிறது. குரு பெயர்ச்சியானது ஒருவரின் வாழ்வில் ஏராளமான மாற்றங்களையும், ஏற்றங்களையும் ஏற்படுத்தும் என்பது நம்பிக்கை ஆகும்.

மேஷ ராசி :

அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு இரண்டாம் பாவத்தில் குரு பகவான் அமர்ந்து  மிகப்பெரிய யோகத்தை கொண்டு வரப் போகிறார். குரு என்றாலே சுப கிரகம் தான் அதிலும்  பாவத்தன்மையற்ற முழு சுப கிரகம்.  அப்படிப்பட்ட குரு பகவான் உங்களுடைய ராசிக்கு தனஸ்தானத்தில் அமருகிறார்.  இன்றைய சூழ்நிலையில் நாம் அனைவருக்கும் தேவைப்படுவது பணம் மட்டுமே.  பணத்தை சம்பாதிப்பதற்கான பாவம் இரண்டாம் பாவம் அந்த இரண்டாம் பாவத்தில் தான் குரு தற்போது அமரப் போகிறார்.

குரு இரண்டில் அமர்ந்து உங்களுக்கு தொழில் ரீதியான வெற்றிகளை கொண்டு வந்து சேர்க்கப் போகிறார்.  ஒருவேளை நீங்கள் அரசு உத்தியோகமோ அல்லது  வேறு ஏதேனும் கம்ப்யூட்டர் தொழில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றாலும் கூட வேலையில் உங்களுக்கு பிரமோஷன்  அல்லது சம்பள உயர்வு போன்றவை மூலமாக உங்களுடைய பண வருவாய்  உயரப் போகிறது. வாழ்க்கையில் ஏதேனும் சாதிக்க வேண்டும் சாதித்து அறிய பணங்களை சம்பாதிக்க வேண்டும் என்று  நினைத்திருக்கும் உங்களுக்கு வருகின்ற குரு பெயர்ச்சி தான் ஒரு பொன்னான காலகட்டம். 

பணத்தை நீங்கள் தேடி போக வேண்டிய அவசியம் இல்லை பணம் உங்களைத் தேடி வரும்.  நேற்று வரை பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த  உங்களுடைய ராசிக்கு தற்போது பணம் இங்கு தான் இருக்கிறது என்று  உங்களுக்கு காண்பிக்கும் அளவுக்கு குரு பெயர்ச்சி அமைந்திருக்கிறது.  தொழிலில் லாபம் பார்க்க வேண்டும் அல்லது நல்ல முன்னேற்றமான வாழ்க்கை நடத்த வேண்டும் என்று காத்திருந்த மேஷ ராசி அன்பர்களே  நல்ல தொழில் முன்னேற்றத்தோடு பண வருவாயும் வரப்போகிறது.

கடக ராசி:

அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  குரு பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் வந்து அமர்கிறார். 12 ராசிகளில் அனைத்தையும் கொடுக்கக் கூடியவர் குரு மட்டுமே  அப்படிப்பட்ட குருபகவான் உங்கள் ராசிக்கு 11 ஆம் வீட்டில் அமர்ந்து  நீங்கள் வீடு கட்ட வேண்டும் வீட்டில் குடியேற வேண்டும் என்று தான் நினைத்திருந்திருப்பீர்கள் ஆனால் உங்களை மாடமாளிகையில் கொண்டு போய் குரு அமர்ந்த போகிறார்.  குருபகவான் 11ஆம் வீட்டிற்கு வருவதற்கு முன்பாக 10-ம் வீட்டில் இருந்திருப்பார் இந்த சமயத்தில் தொழில் ரீதியான சிக்கல்கள்  சந்தித்திருப்பீர்கள் வேலை இருந்தும் இல்லாத தன்மை வேலையே கிடைக்காததன்மையை போன்றவை ஏற்பட்டிருக்கும். 

ஆனால் தற்போது வரப்போகும் குரு பெயர்ச்சி உங்களுக்கு நிரந்தரமான வேலையும் வேலையின் மூலமாக லாபத்தையும் கொண்டு வந்து சேர்க்கும்.  சிலருடைய ஜாதகம் மிகவும்  அற்புதமாக  அமைந்திருக்கும் அவர்களுக்கு பண வருவாய் இருக்கும் என்ற காலகட்டத்தில் குருவும் பதினொன்றாம் வீட்டில் அமர்ந்தால் சொல்லவே தேவையில்லை நீங்கள் கோடீஸ்வரர் தான்.  வாழ்க்கையின் பல கட்டத்தில் எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது மற்றவர்கள் எல்லாம் நன்றாக இருக்கிறார்கள் என்று சதா நீங்கள் சிந்தித்துக் கொண்டே இருக்கலாம்  ஆனால் தற்போது நிலைமையை மாறப்போகிறது மற்றவர்கள் உங்களைப் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு வீட்டில் பணம்  தாண்டவம் ஆட  போகிறது.

 நீங்கள் உங்களுக்கென்று தனி கனவுகளை வைத்திருப்பீர்கள் அல்லவா? கார் வாங்க வேண்டும், பெரிய பங்களாவில் குடியேற வேண்டும், மதிப்பும் மரியாதையும் வேண்டும் சமுதாயத்தில் அந்தஸ்து உயர வேண்டும் என்று  இந்த கனவுகள் எல்லாம் நினைவாக்குவதற்காக பதினொன்றாம் இடம் குரு  உங்களுக்காக  காத்திருக்கிறார்.  நீண்ட நாட்களாக புத்திர பாக்கியம் இல்லை என்று ஏங்கி இருந்த கடக ராசி  அன்பர்களுக்கு மழலைச் செல்வம் கேட்பதற்கான  நேரம் வந்துவிட்டது.  ஏன் எதற்கு என்று கேள்வி கேட்காமல் நீங்கள் யாரிடம் பணம் கேட்டாலும் அவர்கள் கொடுக்க தயாராக இருப்பார்கள்.  காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கேற்ப 11-ஆம் இடத்தில் குரு பகவான் இருக்கும்போதே உங்களுக்கு தேவையான அனைத்தையும் தங்கள் சாதித்துக் கொள்ளலாம்.  வருகின்ற குரு பெயர்ச்சி உங்களுக்கு ஒரு கோடீஸ்வர யோகத்தை கொண்டு வரும் என்பதில் எந்த விதமான மாற்று கருத்தும் இல்லை.

விருச்சகம்  ராசி:

அன்பார்ந்த விருச்சக ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு  ஏழாம் வீட்டில் குரு பகவான் அமர்கிறார்  மற்றவர்களை புரிந்து கொள்ளவில்லை,  மற்றவர்கள் என்னை புரிந்து கொள்ளவில்லை என்று  வாழ்க்கையை தனியாக நகர்த்திக் கொண்டிருந்த விருச்சக ராசி அன்பர்களே உங்களுடைய வாழ்க்கை துணையை புரிந்து கொள்வதற்கான நேரம் வந்துவிட்டது. குறிப்பாக நீண்ட நாட்களாக திருமணமாகவில்லை என்று காத்திருந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு திருமண யோகம் கை கூடிவிட்டது.  தொழில் ஆரம்பிக்க வேண்டும் புதிய தொழில் அதற்கு என்னிடம் பணம் உள்ளது. ஆனால் மேலும் பணத்தை சேர்ப்பதற்கான வழிகள்  தெரியவில்லை என்று காத்திருக்கும் உங்களுக்கு இதோ யார் மூலமாவது  உங்களுக்கு உபதேசம் கிடைத்து அதன் மூலமாக தொழிலை  இரட்டிப்பு  லாபமாக  மாற்ற நீங்கள் முயற்சி செய்வீர்கள்.

 விருச்சக ராசிக்கு இரண்டாம் அதிபதியும் ஐந்தாம் அதிபதியும் ஏழாம் பாவத்தில் அமர்வது  கிட்டத்தட்ட உங்களுடைய ஒட்டுமொத்த ராசியுமே சுபமடைய போகிறது.  ஆலய பணிகளை மேற்கொள்வீர்கள்.  மனதிற்கு பிடித்த பல நல்ல காரியங்கள் நடக்கப் போகிறது.  மங்களகரமான சுப நிகழ்ச்சிகள் உங்கள் வீட்டில் அரங்கேற போகிறது.  குடும்பத்தோடு நேரம் செலவிடுவது மட்டுமல்லாமல் உங்கள் மூலமாக உங்கள் குடும்பத்தார் ஆதாயமும் அடையப் போகிறார்கள்.  உங்களுக்கு கோடீஸ்வர யோகம் ஏற்பட போகிறது.

மகர ராசி :

அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் பாவத்தில் குரு பகவான் அமர்கிறார்.  மற்றவர்களுக்கு முன்பாக நீங்கள் ஒருவேலை முட்டாளாக தெரிந்திருக்கலாம்  அல்லது மற்றவர்கள்  உங்களுக்கு எதுவுமே தெரியவில்லை என்று கூட நினைத்திருக்கலாம்.  ஆனால் தற்போது நிலைமையே மாறப்போகிறது ஐந்தாம் வீட்டிற்கு வரும் குரு பகவான்  உங்களுடைய புத்திசாலித்தனத்தை வெளியே கொண்டு வருவார்.  மற்றவர்கள் உங்கள் பேச்சு கேட்டு நடக்கும் படி இருக்கும். 

நீண்ட நாட்களாக புத்திர பாக்கியத்திற்காக காத்திருக்கும்  மகர ராசி  அன்பர்களுக்கு புத்தரபேறு கிடைக்கப் போகிறது.  மகர ராசிக்கு அதிபதி சனிபகவான் 2ஆம் வீட்டில் ஆட்சி பெற்று எப்படி தனத்தை  உயர்த்த வேண்டும் என்று உங்களுக்கு  வழிகாட்டியாக திகழும் இந்த பட்சத்தில்  ஐந்தாம் இடத்திற்கு வரும் குரு பகவான் ராசி பார்த்து உங்களுடைய முகப்பொலிவை கூட்டப் போகிறார்.  கிட்டத்தட்ட இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு ஒரு சுப ஆண்டாக அமையும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget