மேலும் அறிய

Guru Peyarchi 2024 Palangal: இந்தாண்டு உங்கள் ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்? பலன்கள் இதோ!

Guru Peyarchi 2024 Palangal in Tamil: இந்தாண்டு எப்படி இருக்க போகிறது? குரு பெயர்ச்சி 2024 -ன் பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

Guru Peyarchi 2024 to 2025 Palangal in Tamil: கிரகங்களின் சுழற்சியே மனித வாழ்க்கையின் வளர்ச்சி என்பதும், கிரகப் பெயர்ச்சியாலே நம் செய்யும் செயல்கள் நல்லவிதமாக முடிவதும், தவறாக போவதும் நடக்கும் என்று நம்பப்படுகிறது. அப்படி, இந்தாண்டு நம் வாழ்வில் என்னென்ன மாற்றஙகள் நிகழும்? தொழில் சிறக்குமா? புதிய முயற்சிகள் வெற்றி பெறுமா? லாபம் கிடைக்குமா? இந்தாண்டு குரு பெயர்ச்சி குறித்து ஜோதிட நிபுணர் சொல்வதை காணலாம்.

இன்று முதல் குரு பகவான் ரிஷப ராசிக்கு சென்றார்.

மேஷம்: 90%

அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஏற்கனவே  ராசியிலேயே  குரு பகவான் அமர்ந்து  விரயங்களை கொண்டு வந்திருப்பார்.  கவலை வேண்டாம்  மே மாதம் ஒன்றாம் தேதிக்கு பிறகு  உங்களுடைய விரயங்கள் எல்லாம் கட்டுக்குள் வந்து பணவரவு ஏற்படப்போகிறது.  மேஷ ராசியை பொறுத்தவரை  ஏற்கனவே பன்னிரண்டாம் வீட்டில் ராகு இருக்கிறார் எப்படி செலவு ஆகிறது என்று தெரியாமல் திக்கு முக்காடி கொண்டிருக்கிறீர்கள். இதற்கு போதாது என்று குருபகவான் வேறு  ராசியிலேயே அமர்ந்தார்  2023  முழுவதுமாக உங்களுக்கு செலவு தான்  2024 ஜனவரி பிப்ரவரி மார்ச் ஏப்ரல் வரை  உங்களுக்கு கஷ்டமான காலகட்டம் தான்.  குறிப்பாக எவ்வளவு செலவுகளை கட்டுப்படுத்த நினைத்தாலும்  ஏதாவது ஒரு வகையில், அதாவது மருத்துவத்திற்கோ அல்லது சுபச் செலவாகவோ கூட பணம் உங்கள் கையை விட்டு போய் இருக்கலாம்.  இப்படிப்பட்ட செலவுகள் தற்போது கட்டுக்குள் வரும்.  

குரு பகவான் உங்கள் ராசிக்கு 9 ஆம் வீட்டிற்கும் 12 ஆம் வீட்டிற்கும் அதிபதி  அவர் தனஸ்தானமான இரண்டாம் வீட்டில் அமரும்போது நீங்கள் ஏற்கனவே பார்த்து இருக்கின்ற வேலையில் கிடைக்கும் வருமானத்தை விட தற்போது வருமானம் 2 மடங்காக உயர போகிறது.  குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.  குடும்பமாக அமைந்திருந்த பல மேஷ ராசி வாசகர்களுக்கு சென்ற ஆண்டு  ஏதாவது ஒரு வகையில் குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட்டு கொண்டே தான் இருந்தது. அப்படி பிரிந்திருந்த தம்பதியர் எல்லாம் இந்த  குரு பெயர்ச்சிக்குப் பிறகு ஒன்று கூடுவார்கள்.  வேலையில் எனக்கு சரியான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை,  நான் செய்யும் வேலைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று  ஏங்கிக் கொண்டிருந்த உங்களுக்கு  தற்போது ஒரு பொன்னான காலகட்டம்.  2024 வருடத்தின் முதல் மூன்று மாதத்தில் குரு பகவான் உங்கள் லக்னத்திலேயே அமர்ந்திருந்தார்.  அப்படி என்றால்  எல்லாம் இருக்கிறது ஆனால் ஏதோ ஒன்று குறைகிறதே என்ற மனக்கவலை இருந்து கொண்டே இருந்திருக்கும்.   பனிரெண்டாம் வீட்டிற்கு அதிபதி குரு பகவான் லக்னத்திலேயே அமர்வதால் அலைச்சல் அதிகமாக இருக்கும்.  சரி எவ்வளவு அலைச்சல் இருந்தாலும் இறுதியில் ஆதாயம் கிடைக்குமே என்று காத்திருந்தீர்கள் அதுவும் உங்களுக்கு கிடைக்கவில்லை.  அந்த நிலையும் தற்போது மாறப்போகிறது இரண்டாம் இடத்திற்கு வரும் குரு பகவான் நிச்சயமாக ஆதாயத்தை மட்டுமே கொண்டு வந்து சேர்க்கப் போகிறார். 

2-ம் வீட்டில் குரு :

உடல் ஆரோக்கியம் மேம்படும்.  கடன்காரர்களின் தொல்லை அதிகமாக இருக்கிறது என்று மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான உங்களுக்கு ஒரு நல்ல செய்தி  காரணம் மலை அளவு கடல்கள் கடுகளவு குறையும்.  குரு பெயர்ச்சியில் உங்களுக்கு நல்ல காரியங்கள் மட்டுமல்லாமல் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்.  எங்கேயோ நடந்த பரிவர்த்தனையின் மூலமாக உங்களுக்கு பணம் வரும்.  கமிஷன் மூலமாக  நீங்கள் நிறைய பணம் சம்பாதிக்கலாம்.

 10-ம் வீட்டில் குரு பார்வை:

மேஷ ராசி வாசகர்களே தொழில் ரீதியான முன்னேற்றம்  வேலையில் மதிப்புஉமரியாதை கூடுவது போன்றவை நடைபெறப்போகிறது. எதைக் குறித்தும் கவலைப்படாமல் முதலீடு செய்து இரட்டிப்பு லாபம் பார்க்க போகிறீர்கள். குரு பார்ப்பதால்  ஏற்கனவே இருந்த பழைய நிறுவனங்கள் உங்களை கூப்பிட்டு பேசுவார்கள்.  ஒரு வேலைக்கு இரு வேலை உங்களிடம் கொடுப்பார்கள்.  வேலை தளத்தில் நீங்கள் திறமையானவராக போற்றப்படுவீர்கள்.மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு அற்புதமான குரு பெயர்ச்சியாக இருக்கும்.வாழ்வின் வெற்றியை அடையத்தான் போகிறீர்கள்.

 பரிகாரம்:

ஏற்கனவே உங்கள் ராசிக்கு குரு பெயர்ச்சி சிறப்பாக இருந்தாலும்  குரு ஸ்தலமான திருச்செந்தூர் முருகனை மனதார வழிபட்டு வந்தால் சங்கடங்கள் விலகும்.

ரிஷப ராசி : 90%

அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு குருபகவான்  ஜென்ம ராசியிலேயே அமர்கிறார்.  பதினொன்றாம் அதிபதி  ராசியிலேயே அமர்வது மிக மிக சிறப்பான யோகத்தைக் கொண்டு வரும். அழகு பொலிவு கூடும்.  உங்களுடைய முகமே பிரகாசமாக இருக்கப் போகிறது.  வாழ்க்கையில் உங்களை வெறுத்து ஒதுக்கியவர்கள் உங்களிடம் வலிய வந்து பேசப் போகிறார்கள்.  12 பாவங்களில் பதினொன்றாம் பாவமே  ஒரு ஜாதகருக்கு அனைத்தையும் கேட்காமலேயே வாரி வழங்கக் கூடியது.  ஒரு ஜாதகரால் தீர்மானிக்கப்படாத பாவம்- பதினொன்றாம் பாவம்.  ஆகையால் தான் அந்த பாவத்தில் மூத்த சகோதரரை வைத்தார்கள். இப்படியாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு முன்கூட்டியே கிடைக்கக்கூடிய அத்தனை நன்மைகளையும் 11 ஆம் பாவமே வழங்கும். 

 லக்னத்தில் குரு:

 லக்னத்திலேயே குரு பகவான் அமர்ந்திருப்பது ஐந்தாம் பாவத்தை பார்க்கும் ஏழாம் பாவத்தை பார்க்கும் ஒன்பதாம் பாவத்தையும் பார்க்கும்.  அப்படி என்றால் குரு பகவானின் பார்வை ஐந்தாம் வீட்டில்  பதிவாவதால் குழந்தை பேரு கிடைக்கும்.  மருத்துவம் மூலமாகவோ அல்லது  ஏற்கனவே ஒரு குழந்தை  தவறி இரண்டாவது குழந்தைக்கு  காத்திருப்போருக்கும் நல்ல செய்தி காருக்கு வந்து சேரும்.  ஏழாம் பாவத்தை குரு பார்ப்பதால் நீண்ட நாட்களாக திருமணத்திற்காக காத்திருந்த ரிஷப ராசி வாசகர்களே  உங்களுக்கு திருமண பிரார்த்தம் உண்டாகும்.  ஒன்பதாம் வீடான பாக்கியஸ்தானத்தை குரு பார்ப்பதால்.  நீங்கள் ஆசைப்பட்டவை அனைத்தும் நிறைவேறும்.

 பரிகாரம்:

நவகிரகங்களில் இருக்கும் குருபகவானை வணங்கி வர சிக்கல்கள் தீரும் !!!

மிதுன ராசி: 75%

அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு 12 ஆம் பாவகத்தில் குரு பகவான் சஞ்சாரம் செய்கிறார்.  ஏற்கனவே பத்தாம் பாவகத்தில் ராகு அமர்ந்து  இது என்னடா வேலை இதை விட வேறு ஏதாவது நல்ல வேலை கிடைக்குமா என்று ஒரு சிலருக்கு ஏங்க வைத்திருக்கும்.  இப்படியான சூழ்நிலையில் பத்தாம் அதிபதியும் 12 ஆம் வீட்டிற்கு செல்வதால்  அலைச்சல் சற்று அதிகமாக இருக்கும்.  முதலில் நல்லவைகளை பேசிவிட்டு பின்பு  மற்றதை பற்றி பேசுவோம்.  பன்னிரண்டாம் பாவகத்தில் அமர்ந்திருக்கும் குரு பகவான் உங்களின் நான்காம் வீட்டை பார்ப்பார்.  எட்டாம் வீட்டை பார்ப்பார் உங்களின் ஆறாம் பாவத்தை  பார்ப்பார்.  கடன்கள் அதிகமாக இருக்கிறது என்னால் சமாளிக்க முடியவில்லை என்று இருந்த உங்களுக்கு கடன்  அடைபடும் நேரம்.  உடல் ஆரோக்கியம் பெறும்.  நான்காம் வீட்டை குரு பார்ப்பதால் வீடு நிலம் வாகனம் தொடர்பான சிக்கல்கள் தேர்ந்து மனதில் மகிழ்ச்சி பொங்கும்.

கடக ராசி: 95%

அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே இதுவரை உங்களுடைய ராசிக்கு எத்தனை இடங்களில் குரு பகவான் சஞ்சாரம் செய்திருந்தாலும் தற்போது செய்யப் போகின்ற இடத்தில்  இருந்து வரக்கூடிய நன்மை போல வரவே வராது.  பதினொன்றாம் பாவத்தில் குருபகவான் அமர்ந்து உங்களுக்கு இதுவரை கிடைக்கக்கூடிய நல்லவைகள் தடை பட்டதல்லவா? அந்தத் தடைகள் எல்லாம் நீங்கி சுபிட்சத்தை பெறப்போகிறீர்கள்.  உங்களின் ராசிக்கு  அல்லவா அந்த கவலைகள் தீரப் போகிறது.

4-ம் வீட்டில் குரு பார்வை:

எனக்கு அன்பான  சிம்மராசி வாசகர்களே உங்களுடைய பத்தாம் வீட்டில் அமர்ந்திருக்கக் கூடிய குரு பகவான் நான்காம் வீட்டை பார்வையிடுகிறார் அப்படி என்றால்  மேல்படிப்பு படிக்க வேண்டும் அல்லது வேறு ஏதேனும்  ஒரு தொழில் ரீதியான படிப்பு படித்து, அதன் மூலமாக வருமானத்தை உயர்த்த வேண்டும் என்று காத்திருக்கும் உங்களுக்கு நல்ல செய்தி.  படிப்பு ஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்து உங்களுடைய உயர்கல்வியை அல்லது தொழில் கல்வியை சிறப்பாக செய்து கொடுக்கப் போகிறார்.  வீடு நிலம் தொடர்பான  பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.  புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகப்படியாக உண்டு.

சிம்ம ராசி

தொழிலில் கவனம் தேவை - சிம்ம ராசி வாசகர்களே மேலே சொன்ன அத்தனையும் உங்களுக்கு நடைபெறத்தான் போகிறது அதைவிட கூடுதலாக தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கக் கூடிய குரு பகவான் உங்களின் வேலையில் சில அலைச்சல்களை கொண்டு வருவார்.  குறிப்பாக சிலருக்கு உத்தியோக ரீதியான மாறுதலும் உண்டாகக்கூடும்.  செய்யும் வேலையில் ஏதேனும் சிக்கல்கள் கூட சில சமயங்களில் ஏற்படலாம்.  அப்படி சிக்கல்கள் ஏற்படும் சமயத்தில்  நீங்கள் நவகிரகத்தில் இருக்கக்கூடிய குரு பகவானை மனதார வணங்கி வாருங்கள்.  உங்களுடைய தொழில் ரீதியான பிரச்சனைகளுக்கு முடிவு ஏற்படும்.

 பரிகாரம் :  குரு தக்ஷிணாமூர்த்தி வழிபாடு


Guru Peyarchi 2024 Palangal: இந்தாண்டு உங்கள் ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்? பலன்கள் இதோ!

கன்னி ராசி: 90%

அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு 9 ஆம் வீட்டில் குருபகவான் அமர்வது மிக மிக சிறப்பான ஒன்று.  குறிப்பாக லக்னத்தில் கேது அமர்ந்து ஏழாம் வீட்டில் ராகு இருக்கிறபடியால் திருமண காரியங்கள் கணவன் மனைவிக்குள் சண்டை ஒற்றுமையின்மை பிரச்சனை போன்றவை ஏற்படலாம்.  கவலை வேண்டாம் ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருக்கக் கூடிய குரு பகவான் உங்கள் ராசியை பார்க்கிறார் அப்படி என்றால் பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு ஏற்பட போகிறது.  குருவின் பார்வை உங்களின் ஐந்தாம் வீட்டில் பதிவாவதால் நீண்ட நாட்களாக புத்திர பேர் இல்லை என்று கலங்கி இருந்த தம்பதிகளுக்கு குழந்தை பேரு கிடைக்கும்.  ஆன்மீகப் பிரயாணங்களில் மனம் செல்லும் .  நீண்ட தூரப் பிரயாணங்களை மேற்கொள்ள போகிறீர்கள்.  வெளிநாடு செல்ல வேண்டும் என்ற காத்திருந்த கன்னி ராசி வாசகர்களே இதோ கதவுகள் திறக்கப்பட்டு விட்டன.

  3-ம் வீட்டை பார்க்கும் குரு :

 அன்பான கன்னி ராசி பாசத்திற்கு உங்களின் மூன்றாம் வீட்டை குரு பகவான் பார்ப்பதால் கோழையாக இருந்தால் கூட அவர்களின் மாவீரனாக மாற்றக்கூடிய சக்தி மூன்றாம் வீட்டின் குரு பார்வையில் உள்ளது.  தன்னம்பிக்கை பிறக்கும்; புகழ் உயரும்.  திருமண காரியங்களில் மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது. 

பரிகாரம் :  பெருமாள் வழிபாடு

துலாம் ராசி: 70%

அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு எட்டாம் வீட்டில் குருபகவான் அமர்கிறார்.  நிச்சயமாக உங்களுக்கு திடீர் தன வரவை உண்டாக்கத்தான் போகிறார் மறைமுகமான எதிரிகள் அழிவார்கள் கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். வாழ்க்கையில் நீங்கள் நல்ல நிலைமைக்கு வரப் போகிறீர்கள்.

 2ம் வீட்டில் குரு பார்வை :

குரு பகவானின் பார்வை உங்களின் இரண்டாம் வீட்டில் விழுவதால் நிச்சயமாக குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.  திருமணம் கைகூடும். குறிப்பாக  காதல் திருமணங்கள் இரு வீட்டாரின் சம்மதத்தோடு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.  பணவரவு அதிகரிக்கும்.  குடும்பத்தோடு நீண்ட தூர பிரயாணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு.  மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பெயர்ச்சியாகவே உள்ளது.  அவமானங்களைக் கொண்டு வருவார் அஷ்டமத்து குரு என்ற பழமொழி உண்டு அதற்கேற்ப எட்டாம் பாவத்தில் அமர்ந்திருக்கக்கூடிய குருபகவான் மறைமுகமான எதிரிகளால் தொந்தரவுகளை உருவாக்கக்கூடும்.  அப்படியான சூழலில் நீங்கள்  நவகிரகத்தில் இருக்கக்கூடிய குரு பகவானை வணங்கி வர  அஷ்டமுத்து குருவின்  சிக்கல்கள் தீரும்.

இந்தாண்டு நோய் இல்லாமல் நிம்மதியானதாக அமையுமா? இந்தாண்டு நமக்கு எப்படி இருக்கும்? நம் பொருளாதார நிலை ஏற்றம் காணுமா?  என்று பல கேள்விகளுடன் இந்தாண்டை வரவேற்பவர்களுக்கு, ராசிகாரர்களுக்கு ஜோதிடர்களின் குருப் பெயர்ச்சி பலன்கள் (Guru Peryarchi 2024 Palangal) இதோ!

இந்த கட்டுரையில் விருச்சிகம் முதல் மீனம் ராசி வரையிலான பலன்களை காணலாம்.

 விருச்சக ராசி: 95%

அன்பார்ந்த விருச்சக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஏழாம் பாவகத்தில் குரு பகவான் அமர்வதால் எதிலும் வெற்றி அடையப் போகிறீர்கள். குறிப்பாக உங்களுக்கு குரு பகவான் இரண்டாம் அதிபதியும் ஐந்தாம் அதிபதியும் ஆவார். அவரே ஏழாம் வீட்டில் அமர்வதால் பொலிவு, புகழ் கூடும்.  இதுவரை அடுத்தவர்கள் உங்களை குறை கூறிக்கொண்டு வந்தார்கள் அல்லவா? அந்த குறைகள் எல்லாம் நிவர்த்தி ஆகி நிறைவான வாழ்க்கையை பெற போகிறீர்கள்.  கடந்த இரண்டு மூன்று வருடங்களாகவே மற்ற கிரகங்களின் சஞ்சாரத்தால் உங்களுக்கு அப்படி ஒன்றும் வாழ்க்கை சிறப்பாக செல்லவில்லை. ஆனால் இந்த குரு பெயர்ச்சிக்கு பின்பாக உங்களுடைய வாழ்க்கை இரண்டு, மூன்று படிகள் மேலே உயரப் போகிறது.

ஏழாம் வீட்டில் குரு:

ராசிக்கு ஏழாம் வீட்டில் குரு பகவான் அமர்வதால் திருமண பேச்சுவார்த்தைகள்  நல்லபடியாக  முடியும். பலருக்கு உடனடியாக திருமணங்கள் அடுத்த முகூர்த்தத்திலேயே நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆடை ஆபரணங்களை வாங்கப் போகிறீர்கள்.  மற்றவர்களின் அன்பையும், அரவணைப்பையும் பெறுவீர்கள்.  வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். ஏழாம் பாவகத்தில் அமர்ந்து லாப ஸ்தானத்தை பார்ப்பதால்  உங்களுக்கு வெற்றி மீது வெற்றி வந்து சேர போகிறது.  வீடு நிலம் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.  திருமண காரியங்கள் கைகூடும்.  வேலைத்தளத்தில் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.  முதல் திருமணம் விவாகரத்தானவர்களுக்கு இரண்டாம் திருமணத்திற்கான வாய்ப்புகள் அதிகப்படியாக உண்டு.

தனுசு ராசி: 85%

அன்பான தனுசு ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  குரு பகவான் ஆறாம் வீட்டில் அமர்கிறார்.  மிகப்பெரிய தைரியம் உண்டாகப் போகிறது எதிரிகள் அழிவார்கள்.  என்னதான் நடக்கும் நடக்கட்டுமே பார்த்துக் கொள்ளலாம் என்று மிகப்பெரிய வீரனாக கூட நீங்கள் மாற வாய்ப்புண்டு. உங்களை இழிவாக பேசினவர்கள் உங்கள் பின்னால் ஓடி ஒளிந்து கொள்ள போகிறார்கள்.  குறிப்பாக ஆறாம் பாவகத்தில் அமர்ந்திருக்கக் கூடிய குரு கடன்களை குறைப்பார்.  நோய்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்.  உங்களை விட்டு விலகி சென்றவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.  பணவரவு தாராளமாக இருக்கும் காரணம் ஆரம்பத்தில் இருக்கும் குருபகவான் அளப்பரிய  செல்வங்களை நீங்கள் கேட்காமலேயே உங்களுடைய கைகளுக்கு கொண்டு வந்து சேர்ப்பார் .

 பத்தாம் வீட்டில் குரு பார்வை :

குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பதிவாவதால் ஏற்கனவே கேதுவினால் பாதிக்கப்பட்டிருந்த உங்களுக்கு தொழில் ஒரு மிகப்பெரிய பிடிமானம் ஏற்படப்போகிறது.குருபகவான் ராசி அதிபதியாகவும் வருவதால் பத்தாம் வீட்டின் பார்வை மிகப் பிரம்மாண்டமாக இருக்கும்.  குறிப்பாக வாழ்க்கையில் நீங்கள் எத்தனை வேலை செய்திருந்தாலும் தற்போது நடக்கவிருக்கும் குரு பெயர்ச்சிக்கு பின்பாக வருகின்ற வேலைகள் உங்களுக்கு பேர் சொல்லக் கூடியதாகவே அமையப் போகிறது.  ஒரு வேலைக்கு இரண்டு வேளை பார்க்க போகிறீர்கள் ஒரு சிலர் வேலையில் கெட்டிக்காரராக இருக்கலாம் ஆனால் உங்களுக்கு சரியான வாய்ப்பு இருந்திருக்காது.  இப்படியான சூழலில் வாய்ப்பையும் குரு பகவானே வழங்கி புகழையும் குரு பகவானே கொண்டு வந்து சேர்க்கப் போகிறார்.

 இரண்டாம் வீட்டை குரு பார்க்கிறார்:

குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் உங்களை விட்டு பிரிந்து இருந்த உங்களுடைய  துணைவர் உங்களிடத்தில் வந்து சேருவார்.  குடும்பத்தில் சரியான மகிழ்ச்சி இல்லை திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்று கவலையோடு இருக்கும் தம்பதிகளுக்கு இதோ குருபகவானின் பார்வை இரண்டாம் வீட்டில் பதிவதால் உங்களுடைய குடும்பம் ஒன்றாக சேர்ந்து சுபிட்சமாக  வளரப்போகிறது.  எவ்வளவு பெரிய சிக்கல்கள் குடும்பத்தில் வந்தாலும் அவை இருந்த இடம் தெரியாமல் போகும்.  குரு பார்வையால் உங்களுடைய வருமானம் பல மடங்கு உயர போகிறது.  இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான  குரு  பெயர்ச்சியாகவே அமையும்.

 மகர ராசி: 95%

அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு குருபகவான் ஐந்தாம் வீட்டில் அமர்கிறார் எத்தனையோ முறை முயற்சி செய்து விட்டேன் ஆனால் குழந்தை பேரே ஏற்படவில்லை என்ற கலங்கி இருக்கும் மகர ராசி வாசகர்களே உங்களுடைய வீட்டில் மழலை செல்வத்தின் குரல் கேட்க போகிறது.  அடுத்த வருடமே உங்கள் வீட்டில் குழந்தை செல்வம் இருக்கும்.  காரணம் உங்கள் ராசிக்கு மூன்றாம் அதிபதி அதாவது வெற்றிக்கு அதிபதி  ஐந்தாம் பாவகத்தில் வாசம் செய்வதால் அவர் நிச்சயமாக குழந்தையை உருவாக்கியே தீர  வேண்டும்.

ஒன்பதாம் வீட்டில் குரு பார்வை :

குரு பகவானின் பார்வை ஒன்பதாம் வீட்டில் பதிவதால் நீண்ட தூர பிரயாணங்களை மேற்கொள்வீர்கள் குறிப்பாக ஆன்மீக காரியங்களுக்காக நீங்கள் நேரத்தை செலவிடுவீர்கள்.  கோவில் கட்ட வேண்டும் கும்பாபிஷேகம் பண்ண வேண்டும் என்று எண்ணியிருக்கும் மகர ராசி வாசகர்களே இதோ உங்களுக்கு அற்புதமான காலகட்டம். குரு பகவான் உங்களுடைய ராசியை பார்ப்பதால் இது நாள் வரை தோய்ந்து போயிருந்த உங்களுடைய முகங்கள் பிரகாசமடைய போகிறது.  வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று இருக்கும் உங்களுக்கு சாதனைகள் வீடு தேடி வரும்  உழைப்பை மட்டுமே நம்பி இருக்கும் உங்களுக்கு சாதனையாளர் விருது வீடு தேடி வரும்.

மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி மகர ராசிக்கு 100% வெற்றிகரமான பெயர்ச்சி.

 கும்ப ராசி: 85%

அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் குரு பகவான் அமர்கிறார். உயர் கல்வி  படிக்க வேண்டும் என்று காத்திருந்த கும்ப ராசி வாசகர்களுக்கு இதோ நீங்கள் மேற்படிப்பு படிப்பதற்கான  வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.  உங்களுடைய எட்டாம் வீட்டையும் 12 ஆம் வீட்டையும் குரு பார்ப்பதால் நிச்சயமாக நன்மையை ஏற்பட போகிறது. காரணம் உங்களுடைய ராசிக்கு குருபகவான் 11 ஆம் அதிபதி அவர் நான்காம் வீட்டில் அமர்ந்து வீடு வாகனம் போன்றவற்றில் பிரகாசமான எதிர்காலத்தையும்,  அஷ்டம ஸ்தானத்தை குரு பார்ப்பதால் நிரந்தரமான வருமானத்தையும், பன்னிரெண்டாம் வீட்டை குரு பார்ப்பதால் நீண்ட தூர பிரயாணத்தையும் உங்களுக்கு சாதகமாக மாற்றி கொடுக்கப் போகிறார். 

நான்காம் வீட்டில் இருக்கும் குரு :

பஞ்சபாண்டவர்கள் வனவாசம் போனது நான்காம் வீட்டில் இருக்கும் குருவால் தான் என்று ஒரு பழமொழி உண்டு. அப்படியானால் ஒரு சிலர் நீங்கள் வீட்டை மாற்றக்கூடும். ஒருவேளை நீங்கள் வாடகை வீட்டில் இருந்தால் அந்த வீட்டை விட்டு வேறொரு வீட்டிற்கு குடிபோற வாய்ப்பு உண்டு. வாடகை வீட்டில் நீங்கள் இல்லை சொந்த வீட்டில் இருக்கின்றீர்கள் என்றால்  வியாபார ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ கடையை மாற்றுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அப்படியும் இல்லை என்றாலும் ஒரே வீட்டிற்குள்ளே ஒரு அறையில் இருந்து வேறு அறைக்கு சென்று தங்குவதற்கான வாய்ப்புகளும் உண்டு.  இப்படி நான்காம் வீட்டில் அமர்ந்திருக்கும் குரு பகவானால் நிச்சயமாக இடமாற்றம் உண்டு.  நான்காம் வீட்டில் அமர்ந்திருக்கும் குரு பத்தாம் வீட்டை பார்ப்பதால் தொழில் சரியாக அமையவில்லை, ஏற்கனவே நான் செய்கின்ற வேளையில் திருப்தி இல்லை, அதில் சரியான வருமானம் இல்லை என்று புலம்பிக் கொண்டிருந்த உங்களுக்கு நல்ல செய்தி தொழில் ரீதியாக உங்களுடைய காதுகளுக்கு வந்து சேரும்.  பணவரவு உயரும்,  வீடு நிலத்தால் லாபம் உண்டு.

மீன ராசி: 90%

அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே ராசி அதிபதியாகிய குருபகவான் மூன்றாம் வீட்டில் அமர்கிறார்.   சில படங்களில் வருவது போல கோழையாக இருப்பவர்கள் திடீரென்று கடவுளின் அருள் ஆசியால் வீரனாக மாறுவது போல.  தைரியமும் தன்னம்பிக்கையும் குரு பெயர்ச்சிக்குப் பின்பாக பன் மடங்கு உயரும்.  மீன ராசியை பொறுத்தவரை ராசி அதிபதியும் குரு பகவானே பத்தாம் அதிபதியும் ஆவார்  அப்படி என்றால் உங்களுடைய ராசிக்கு பத்தாம் அதிபதி மூன்றாம் வீட்டில் வீற்றிருக்க எழுத்து, தொலை தொடர்பு போன்றவை மூலமாக நிச்சயமாக பல ஏற்றங்கள் உருவாகும்.  தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தகவல் தொடர்புக்கான இன்ஸ்டாகிராம் facebook youtube போன்ற வலைதள பக்கங்கள் மூலமாக மீன ராசி வாசகர்களுக்கு லாபம் அதிகரிக்கும் .  காரணம் பத்தாம் அதிபதி தகவல் தொடர்பு ஸ்தானமான மூன்றாம் வீட்டில் வீற்றிருப்பதால். இதற்கும் youtube facebook instagram போன்றவர்களுக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்கலாம் .  இதற்கான பதில் உங்கள் ராசியிலேயே ராகு அமர்ந்திருக்கிறார் ராகு தான் வலைதளத்திற்கு சொந்தக்காரர்.  நிச்சயமான முன்னேற்றம் உண்டு.

7-ம் வீட்டில்  குரு பார்வை :

அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே நீண்ட நாட்களாக திருமணமே ஆகவில்லை எந்த வரன் எடுத்தாலும் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது என்று கஷ்டத்தோடு இருந்த உங்களுக்கு திருமண காரியங்கள் சாதகமாக முடியும் வரன்கள் வீடு தேடி வரும்.  நீண்ட நாட்களாக குழந்தை பேருக்காக காத்திருந்த தம்பதிகளுக்கு குழந்தை பேரு உண்டாகும்.

பதினொன்றாம் வீட்டில் குரு பார்வை :

ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தாகிவிட்டது என்று இருக்கும் மீன ராசி வாசகர்களே இரண்டாம் திருமணத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது இந்த காலகட்டத்தில் பதினொன்றாம் வீட்டில் குரு பகவானின் பார்வை செல்வ செழிப்புகளை அதிகப்படுத்தும் நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழுங்கள். தலைவர்களும் நண்பர்கள் ஆவார்கள்.  நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் உங்களுடைய நெருங்கிய நண்பர்களிடத்தில் சற்று சிறிய அளவில் மனக்கசப்புகள் ஏற்படலாம்.  அப்படியான சூழலில் நீங்கள் நவகிரகத்தில் இருக்கக்கூடிய குரு பகவானை வணங்கி வர சிக்கல்கள் தீரும்.  இந்த குரு பெயர்ச்சியில் உங்களுக்கு தேகப்பொழிவு கூடும் தைரியம் பிறக்கும் திருமண பேச்சு வார்த்தைகள் சமூகமாக முடியும் இடம் வீடு வாகனம் தொடர்பான அனைத்தும் நன்மையாகவே அமையும்.  மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான அற்புதமான குரு பெயர்ச்சி.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget