மேலும் அறிய

Guru Peyarchi 2023: குருபெயர்ச்சி பெண்களுக்கு எப்படி அமையப்போது..? எந்த ராசிக்கு அமோகமா இருக்கப்போது?

Guru Peyarchi 2023 Palangal: நாளை குருபெயர்ச்சி - பெண்களுக்கான ராசி பலன்கள் எப்படி இருக்கு?

நவகிரகங்களில் குருவுக்கு மட்டும் தான் பொன்னவன் என்று பெயர். குருபகவான் ஒரு முழுமையான சுபகிரகம். எந்த ராசியில் இருந்தாலும் ஓரளவு நன்மையையே செய்யக் கூடியவர். குருபார்க்க கோடி நன்மை என்பர். குரு பார்க்க கோடி தோஷம் நிவர்த்தியாகும்.

குருபார்வை:

குருபகவானின் 5, 7, 9 இடப் பார்வைகள் மிக விசேஷமானது என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. குரு 2,5,7,9,11 இடங்களில் இருக்கும் போது அளவற்ற நற்பலன்களையும் யோகங்களையும் தருகிறார். 1. 4. 7. 10 ஸ்தானங்களில் இருக்கையில் கேந்திராதிபத்ய தோஷத்தை உண்டாக்கி கொடுக்கவும் செய்வார். இந்த கேந்திர ஸ்தானங்களில் குரு இருக்கும் போது குரு மங்கள யோகம் ஏற்பட்டு எதிர்பாராத நன்மைகள் ஏற்படும்.

அதிக அளவு நற்பலன்களை தரமுடியாது. குரு பகவான் 3. 4, 6, 8, 10, 12 இடங்களில் சஞ்சரிக்கும் போது அதிக அளவு நற்பலன்களை தரமுடியாது. நாளை (ஏப்ரல் 22) குரு பெயர்ச்சி என்பதால் எந்த ராசி பெண்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம்.

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி விரயங்களை அதிகரிக்கச் செய்யும். வீடு மாற்றங்களாலும், இட மாற்றங்களாலும் மன அமைதி குறையும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் ஒற்றுமை பலப்படும். உடன்பிறப்புகளின் வீடுகளில் நடைபெறும் விழாக்களை முன்னின்று நடத்தி வைப்பீர்கள். சுபச்செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கான சுபகாரியங்களை காலாகாலத்தில் முடிக்க வேண்டும் என அக்கறை செலுத்துவீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்துசேரும். உழைத்தால் அதற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்த பெண்களுக்கு குருப்பெயர்ச்சியின் விளைவாக கொஞ்சம் விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றங்கள், இடமாற்றங்கள் இனிமை தரும் விதமாக அமையும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். ஆன்மிகப் பயணங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உங்கள் பெயரிலேயே அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு இதுவரை தடைப்பட்ட பதவி உயர்வு தானாக வந்து சேரும். மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் உங்களை உற்சாகப்படுத்தும்.

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். உறவினர்களின் உதவி யும் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்கும். மண மாலைக்காக காத்திருப்பவர்களுக்கு மாலையும், உத்தியோகத்திற்காக காத்திருப்பவர்களுக்கு வேலையும் கிடைக்கும் யோகம் உண்டு. திருமணமானவர்களுக்கு கணவன்-மனைவி உறவில் ஒற்றுமை பலப்படும். குடும்ப நிர்வாகத்தை திறம்படச் செய்து புகுந்த வீட்டிற்கு பெருமை சேர்ப்பீர்கள். அசையாச் சொத்துக்கள் உங்கள் பெயரில் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும் வாய்ப்புண்டு.

கடகம்:

கடக ராசியில் பிறந்த பெண்களுக்கு பணப் பற்றாக்குறை அதிகரிக்கும். உங்களுக்கு பிடித்த பாசமான உறவுகள் உங்களை விட்டு விலகிச் செல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.  இடமாற்றங்கள் இனிமை தருவதாக அமையும். கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட்டால் கருத்து வேறுபாடு ஏற்படாமல் இருக்கும். உணர்ச்சி வசப்பட்டுப் பேசுவதைத் தவிர்க்கவும், தாய்-தந்தை உடல்நலத்தில் கவனம் தேவை. உடன்பிறப்புகளின் வழியே சுபகாரியம் முடிவாகும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். பணிபுரியும் பெண் களுக்கு உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளை வழங்குவர்.

சிம்மம்:

சிம்ம ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி அற்புதப் பலன்களை அள்ளி கொடுக்கப் போகின்றது. அமைதியும், ஆனந்தமும் இல்லத்தில் குடிகொள்ளும். வருமானம் எதிர் பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாக கிடைக்கும். கணவன்-மனைவி உறவில் பாசமும், புரிதலும் அதிகரிக்கும். தாய் வழியிலும், உடன்பிறப்புகள் வழியிலும் ஓரளவு உதவி கிடைக்கும். பிள்ளைகளின் கல்யாணத்தை முன்னிட்டு சீர்வரிசை பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்தும் வாய்ப்புள்ளது. சுபச்செலவுகள் அதிகரிக்கும். பணிபுரியும் பெண்களுக்குப் பல நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு இப்பொழுது கிடைக்க வாய்ப்புள்ளது.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கு முன்னேற்றப் பாதையில் சில தடைகள் வரலாம். வரன்கள் தள்ளிப் போக வாய்ப்புண்டு. கடின முயற்சிக்குப் பின்னரே சில காரியங்கள் கைகூடும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துச் செல்வதன் மூலமே அமைதி கிடைக்கும். பணநெருக்கடிகள் ஏற்பட்டாலும், கடைசி நேரத்தில் காரியம் கைகூடும். பிள்ளைகளின் சுபகாரியங்கள் நிறைவேறப் பெரும் முயற்சி எடுக்கும் சூழ்நிலை உருவாகும். திட்டமிட்டுச் செலவு செய்வதன் மூலமே திருப்தியான வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும்.,

துலாம்:

துலாம் ராசியில் பிறந்த பெண்களுக்கு குருவின் நேரடிப் பார்வை பதிவதால் உடல்நலம் சீராகும். மகிழ்ச்சியுடன் பணிபுரிவீர்கள். உட னிருப்பவர்களும், உறவினர்களும் ஆதரவு தருவர். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு கலைந்து இணக்கம் ஏற்படும். பிள்ளைகளின் கல்யாணத்தை மிகச்சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். உங்கள் பெயரிலேயே வீடு அல்லது இடம் வாங்கும் முயற்சி கைகூடும். பணிபுரியும் பெண் களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். தள்ளிப்போன பதவி உயர்வு தானாக வந்து சேரும் யோகமுண்டு.

விருச்சிகம்:

விருச்சிக ராசியில் பிறந்த பெண்களுக்கு திட்டமிட்ட காரியம்  நடைபெறும். தேவைக்கேற்ற பணம் அவ்வப்போது வந்து சேரும். குடும்பத்தில் மங்கல ஓசையும், மழலையின் ஓசையும் கேட்கும் சூழ்நிலை உண்டு. கணவன்-மனைவி ஒற்றுமை பலப்படும். பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் பெருமை சேர்ப்பீர்கள். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் மேற்படிப்பு தொடரும். அவர்களின் சுபகாரியங்கள் நடைபெறுவதற்காக எடுத்த முயற்சி கைகூடும். பணிபுரியும் பெண்களுக்கு மேலிடத்தில் பாராட்டுக்களும், திறமைக்குரிய அங்கீகாரமும் கிடைக்கும் யோகமுண்டு.

தனுசு:

தனுசு ராசியில் பிறந்த பெண்ளுக்குத் தடைகள் அனைத்தும் விலகும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை ஓங்கும். உங்கள் பெயரிலேயே இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. உடன்பிறந்தவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். பிள்ளைகளின் திருமணம் போன்ற சுபகாரியங்கள் திருப்திகரமாக நடைபெறும். மூதாதையர்களின் சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். இல்லத்துப் பூஜையறையில் குரு தட்சிணாமூர்த்தி படம் வைத்து குரு கவசம் பாடி வழிபடுவது நல்ல பலன்களை தரும். பணிபுரியும் பெண்களுக்கு உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும்.

மகரம்:

மகர ராசியில் பிறந்த பெண்களுக்கு உடல்நலத்தில் அதிக கவனம் தேவை. மாறி மாறி தொல்லை வந்து கொண்டிருக்கிறதே என்ற கவலை ஏற்படலாம். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். உடன் இருப்பவர்களாலும், குடியிருக்கும் வீட்டாலும் சில பிரச்சினைகள் வந்து சேரும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். குழந்தைகளின் சுபகாரியங்கள் காலாகாலத்தில் நடை பெறும். குலதெய்வ வழிபாடும் குடும்பமுன்னேற் றத்திற்கு வித்திடும். பணிபுரியும் பெண்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வரலாம். திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சியாகவே அமைகின்றது.பொருளாதாரத்தில் இருந்த பற்றாக் குறை அகலும். கல்யாணம் போன்ற சுபகாரியங் கள், பெற்றோரின் மணி விழா போன்றவைகள் நடைபெறும் வாய்ப்பு உண்டு. தம்பதியர் ஒருவரை யொருவர் புரிந்துகொண்டு செயல்பட்டால் சச்சரவு வராமல் பார்த்துக் கொள்ளலாம். குருவின் வக்ர காலத்தில் கொடுக்கல்-வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு பதவி உயர்வு, ஊதிய கூடிய இடமாற்றம் கிடைக்கும். குலதெய்வ வழிபாடும், குரு வழி பாடும் நன்மை தரும்.

மீனம்:

மீன ராசியில் பிறந்த பெண்களுக்கு குருப் பெயர்ச்சியின் விளைவாகத் தடைகள் அகலும். தனவரவு திருப்தி தரும். கணவன்-மனைவிக்குள் அன்பும், அன்னியோன்யமும் அதிகரிக்கும். ஏதேனும் ஒரு துறையில் சாதனை படைக்க சந்தர்ப்பங்கள் கைகூடிவரும். பிள்ளைகளை நெறிப்படுத்தி உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நலம். குருவின் வக்ர காலத்தில் சுபகாரியங்கள் கைகூடும். ஏழரைச் சனி நடப்பதால் எதிலும் கொஞ்சம் நிதானம் தேவை. விரயங்களை சுபவிரய மாக மாற்றிக் கொள்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்புண்டு.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget