மரக்காணத்தில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பூமீஸ்வரர் கோவில் - சில முக்கியத் தகவல்கள்..

சோழர்கள் அமைத்த ஆலயங்கள் பலவும் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் நானிலம் சிறக்க நல்லருளைப் பொழிந்து திகழ்கின்றன. அவற்றில் ஒன்றுதான் மரக்காணம் அருள்மிகு பூமீஸ்வரர் திருக்கோயில்.

FOLLOW US: 

தமிழா்களின் தொன்மையான நாகரீகம் மற்றும் பண்பாட்டுக்கு ஆதாரமான திருத்தலம் மரக்காணம். 2005-ஆம் ஆண்டில் இங்கு நிகழ்ந்த அகழ்வாய்வின் மூலம், இவ்வூரின் தொன்மைக்கு ஆதாரமான பல சான்றுகள் கிடைத்தன. சோழா்கள், விஜயநகரப் பேரரசர்கள், மராட்டிய மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயா் காலத்து நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டன.

அலெக்ஸாண்டிாியா நாட்டின் வணிகா் ஒருவரால் எழுதப்பட்ட நூல் `செங்கடல் பயணக் கையேடு'. இதில், `சோபட்மா' என்று குறிப்பிடப்படும் மரக்காணம் துறைமுக நகரமாகத் திகழ்ந்த தகவல் உள்ளது. சங்க இலக்கியங்கள் மரக்காணத்தை `எயிற்பட்டினம்' என்று குறிப்பிடுகின்றன. `எயில்' என்பதும் `சோ' என்பதும் மதிலைக் குறிப்பிடும் சொல்லாகும். இந்தத் துறைமுக நகரைச் சூழ்ந்து மதில் இருந்ததால், இப்பகுதிக்கு `எயிற்பட்டினம்' என்ற பெயா் ஏற்பட்டுள்ளது.மரக்காணத்தில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பூமீஸ்வரர் கோவில் - சில முக்கியத் தகவல்கள்..

மரக்காணத்தில் அமைந்துள்ள ஸ்ரீபூமீஸ்வராின் திருக்கோயில், திருமுறைகண்ட சோழ மன்னன் ராஜராஜனால் தஞ்சை பொியகோயில் நிா்மாணிக்கப்படுவதற்கு முன்னரே கட்டப்பட்டது என்பதை அறிய முடிகிறது. மரக்காணம் தலத்திலிருந்த ஈசனின் திருக்கோயில், அக்காலத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலை  சீற்றத்தால் மண்மூடிப் போனதாகவும், பின்னா் மீண்டும் ராஜராஜ சோழனின் காலத்தில் புதிதாக நிா்மாணிக்கப்பட்டதாகவும் வரலாற்று ஆசிாியா்களிடையே ஒரு கருத்து நிலவுகிறது.மரக்காணத்தில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பூமீஸ்வரர் கோவில் - சில முக்கியத் தகவல்கள்..

மரக்காணத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீபூமீஸ்வரா், சோழர்கள் காலத்தில் ஸ்ரீபூமீஸ்வர தேவா், ஸ்ரீபூமீஸ்வரத்தாழ்வாா், திரு பூமீசுவரமுடையாா், ஸ்ரீபூமீஸ்வரமுடைய மகாதேவா், ஸ்ரீபூமீஸ்வரமுடைய நாயனாா் என்று பல திருநாமங்களுடன் வணங்கப்பட்டதைக் கல்வெட்டு தகவல்களிலிருந்து அறிய முடிகிறது.

Tags: villupuram maraknam rajraja chozha lord shiva temple

தொடர்புடைய செய்திகள்

தேனி : சுற்றுலா மட்டுமல்ல பக்தியும்தான்! சுருளி அருவிக்கு இன்னொரு அடையாளமும் இருக்கு..!

தேனி : சுற்றுலா மட்டுமல்ல பக்தியும்தான்! சுருளி அருவிக்கு இன்னொரு அடையாளமும் இருக்கு..!

திருப்பதி உண்டியல் காணிக்கை: நீண்ட இடைவெளிக்கு பின் ரூ.2 கோடியை தாண்டியது!

திருப்பதி  உண்டியல் காணிக்கை: நீண்ட இடைவெளிக்கு பின் ரூ.2 கோடியை தாண்டியது!

Tamil Nadu Melmaruvathur : வானதி சீனிவாசன் குறிப்பிட்ட மேல்மருவத்தூர் கோயிலில் பெண்கள் வழிபாடு வந்தது எப்படி?

Tamil Nadu Melmaruvathur : வானதி சீனிவாசன் குறிப்பிட்ட மேல்மருவத்தூர் கோயிலில் பெண்கள் வழிபாடு வந்தது எப்படி?

முதல் வழிபாட்டு சிலை; பொக்கிஷமாய் பாதுகாக்கும் மக்கள்!

முதல் வழிபாட்டு சிலை; பொக்கிஷமாய் பாதுகாக்கும் மக்கள்!

காஷ்மீரில் ரூ.33 கோடி செலவில் ஏழுமலையான் கோயிலுக்கு அடிக்கல்!

காஷ்மீரில் ரூ.33 கோடி செலவில் ஏழுமலையான் கோயிலுக்கு அடிக்கல்!

டாப் நியூஸ்

BREAKING: தமிழ்நாடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

BREAKING: தமிழ்நாடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!