Sivagangai: மடைதான் தெய்வம் - 7ஆயிரம் பேர் பங்கேற்ற மெகா கறிவிருந்து திருவிழா
வேண்டுதல் நிறைவேறியதின் பலனாக 267 கருப்பு நிற ஆடுகளை வழங்கிய நிலையில் அதனை பலிகொடுத்து மடை கருப்பண சாமிக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
தென் மாவட்டங்களில் சிறுதெய்வங்கள் வழிபாடு மிக முக்கியாமான ஒன்று. தங்களது குல தெய்வ வழிபாடை பயபக்தியாக கடைபிடிப்பார்கள். இதில் சில முக்கிய விழாக்களில் நூதன முறையில் தங்களது பாரம்பரிய பழக்கங்களை தொடர்ந்து கடைபிடிப்பது முக்கியமான ஒன்று. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமத்தினர் விவசாயத்திற்கு பயனாக இருக்கும் கண்மாய் மடையை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இதன் தொடர்சியாக இதற்கு திருவிழா எடுத்து 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு கறி விருந்து கொடுத்து கொண்டாடி உள்ளனர்.
#சிவகங்கை அருகே உள்ள கிராம மக்கள் கண்மாயில் உள்ள மடையை தெய்வமாக நினைத்து கிடா வெட்டி வழிபாடு செய்வதுடன் ஆண்கள் மட்டுமே 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் கிடா விருந்தும் நடைபெற்றது.@svgsocialmedia | @SRajaJourno | @vetridhaasan | @KalyaanBjp | @HRajaBJP | #abpnadu pic.twitter.com/OA3Fcdc2zU
— Arunchinna (@iamarunchinna) April 30, 2022