Love Horoscope Today: காதல் செய்யறவங்களுக்கு ஜாலியான லவ் ராசிபலன்.. ஜாலியா படிங்க லவ்வர்ஸ்..!
Love Horoscope Today in Tamil, September 9th 2022: ஹேப்பியான உங்க லவ்வுல நெறய ஸ்பீட் ப்ரேக்ஸ் வருதுனு கவலப்படாதீங்க. உங்களுக்காகத்தான் இந்த ஜாலியான லவ் ராசிபலன். ரீட் வித் ஸ்மைல்.
Love Horoscope Today in Tamil, September 9th 2022: சமீபத்தில் முற்றிலுமாக காதல் ததும்பிய ஓர் நாவலை மறு வாசிப்பு செய்தேன். அதில் இருக்கும் காதல் எல்லையற்ற பேதமற்ற காதல். அதன் ஒவ்வொரு அத்தியாயத்திலும் காதலை நேர்த்தியாக வெளிப்படுத்திய வண்ணம் இருக்கிறது. அந்த நாவலின் பெரும் பகுதி கடிந்தங்களால் நிறைந்தது. கைப்பட எழுதப்படும் கடிதங்கள் ஏதோ வெறுமனே தகவல் சுமந்து வருவதில்லை. மாறக அது தொலைவுகளைக் கடந்து, அனுப்பி வைக்கப்பட்ட காதலை அப்படியே உரிய இடத்தில் சேர்த்து விடுகிறது. காதலில் கண்கள் நேரடியாக சந்தித்துக்கொள்வதும் கரங்களை பற்றிக்கொள்வதும் எவ்வளவு அவசியமோ! அவ்வளவு அவசியம் காதல் கடிதங்கள். காதலைப் போலத்தான் காதல் கடிதங்களும் எல்லையற்றவை பேதமற்றவை. இன்றைக்கு நம் ஊர்களில் இருக்கும் ஒவ்வொரு தபால் நிலையமும் தீவிரமாக காதல் வளர்த்தி இருக்கிறது. பட்டணத்தில் இருந்து வந்த, திசை தெரியாத ஊரில் இருந்து வந்த, பெயர் உச்சரிக்கத் தெரியாத ஊரில் இருந்து ஆசை ஆசையாய் எழுதப்பட்ட கடிதங்கள், யாருக்கும் தெரியாமல் வாசித்து யாருக்கும் தெரியாமல் எழுதப்பட்ட பதில் கடிதங்கள் என எண்ணற்ற காதல் கடிதங்களை தாங்கி வந்து காதல் வளர்த்த பெருமையும் வரலாறும் தபால் நிலையங்களுக்கு உள்ளது.
எழுதிய மற்றும் காதலரிடமிருந்து வந்த கடிதங்களை சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வாசிக்கையில் உங்களுக்குள் ஓர் பரவசம் படரும். அது ஓர் சிரிப்பை வரவழைக்கும். உங்கள் கோபம் உங்களுக்கே காமெரியாகத் தெரியும். அழுத்தம் திருத்தமாக பகிரப்பட்ட காதல் கண்ணீரை வரவழைக்கும். இப்படி காதல் கடிதங்கள் காதலில் மிகவும் அவசியமானது, அலாதியானது. நவீன காலத்தில் வளர்ந்து விட்ட தொழில்நுட்பத்தால் கடிதங்கள் என்பதே மிகவும் குறைந்து விட்டது. காதலை வெளிப்படுத்த காதல் பரிசாக க்ரீட்டிங்க கார்டுகள் பயன்படுத்தப்படுகிறது. சமகாலத்தில் கைப்பட ஒரு கடிதம் எழுதுவதே போரை எதிர்கொள்வது போல பலர் எஸ்கேப் ஆகி விடுகிறார்கள். ஆனால் காதல் கடிதங்கள் எழுதாமல் எஸ்கேப் ஆகலாம். ஆனால் உங்கள் காதலரையும் காதலையும் எதிர்கொண்டே ஆகவேண்டும். அப்படி எதிர்கொள்ளும்போது உங்களுக்கு ஏற்படும் சுவாராஸ்யங்களை உங்கள் ராசிக்கு ஏற்றவாறு ஜாலியான லவ் ராசிபலனை வழங்குகிறோம். ரிலாக்ஸா படுச்சு உஷாரா இருந்துக்காங்க.
மேஷம்
வீட்டுலதான் ஒரே சண்டையா இருக்குனு உங்க லவ்வர் கூட டைம் ஸ்பெண்டலானு போன உங்களுக்கு உங்க லவ்வர் செம சர்ப்ரைஸோட இருப்பாங்க. அவங்கிட்ட பேசுனா ரிலாக்ஸ் ஆகும்னு நெனச்சு பேச ஆரம்பிப்பீங்க, ஆனா உங்க லவ்வரும் சண்டைக்கு லிஸ்ட் போட்டு வைய்ட் பண்ணீட்டு இருப்பாங்க. பரிதாபமான நாள்.
ரிஷபம்
கமிட் ஆனதுக்கு அப்பறமும் இன்னும் சிங்கிள்னு சொல்லீட்டு சுத்தர உங்களுக்கு வர்ற ப்ரோபஷல்ஸ பாத்து மத்தவங்க பொறாம படுவாங்க. ஆனால் கமிட்டேட்னு சொன்னா எதாவது பிரச்சனை வருமோனு வெளிய சொல்லாம இருப்பீங்க. டென்ஷனான நாள்.
மிதுனம்
காமெடி ஷோ காரங்க காமெடிக்காக போராடுற மாதிரி நீங்க காதலுக்காக போராட வேண்டி இருக்கும். அசிங்கப்பட்டாலும் துன்பப்பட்டாலும் துயரப்பட்டாலும் உங்க குறிக்கோள் காதலும் காதலருமாகத்தான் இருக்கனும். கப்பு முக்கியம் பிகிலு. முயற்சி தான் திருவினையாக்கும். சக்ஸஸ் ஃபுல் டே. ஆல் த பெஸ்ட்.
கடகம்
ப்ரீ ப்ளேனே இல்லாம உங்க ஆள மீட் பண்ணுவீங்க. ரொம்பவே ஹேப்பியா இந்த டே உங்களுக்கு போகும். இதுவரைக்கும் பேசாத விசயங்கள பேசுவீங்க. உங்களுக்குள்ள நல்லாவே ரொமான்ஸ் ஒர்க்அவுட் ஆகப்போகுது. சட்டென்று மாறுது வானிலைனு ஸ்டேட்டஸ் தெரிக்க விடற அளவுக்கு செம்ம டே.
சிம்மம்
சரக்கு அடிக்க கூடாதுனு முடிவு செஞ்ச வடிவேல்ட்ட பாக்கறவங்க எல்லாம் பட்ட, கல்லு, சிங்கா'ரம்' பூவா'ரம்'னு சொல்லி கடுப்பேத்தற மாதிரி, உங்க ஆள்கூட சண்ட போட்ட உங்கிட்ட, உங்க ப்ரெண்ட்ஸ் அவங்க ஆள்கூட அவுட்டிங் போறதப்பத்தியும், சினிமாக்கு போறதபத்தியும் சொல்லீட்டு இருப்பாங்க. உங்களுக்கே உங்கள நெனச்சு காண்டாகும். பட் இன்னைக்கு ஈவினிங் உங்களுக்கு நல்லவோ போக சான்ஸ் இருக்கு நீங்களே சண்டைய மறந்து உங்க ஆள்ட்ட பேசுனா. சோ போய் பேசுங்க. ஹேப்பி ஈவினிங் சிம்மம்.
கன்னி
நல்லா பேசீட்டு இருந்த உங்க ப்ரெண்ட் திடீர்னு அவங்களோட ப்ரேக்அப் லவ் ஸ்டோரிய சொல்லி புலம்ப ஆரம்புச்சுடுவாங்க. நான் எப்படி லவ் பண்ணேன் தெரியுமானு தேம்பி தேம்பி ஒரு லவ் ஸ்டோரிய சொல்லீட்டு இருப்பாரு. உடனே " உங்களுக்கு ப்ரேக்அப் ஆனா சொல்லு நான் சேர்த்து வைக்கறேன்னு" சொல்லுவாங்க. நடு சாமத்துல நான் எதுக்குடா சுடுகாட்டுக்கு போகனும்னு மனசுக்குள்ள நெனச்சுப்பீங்க.
துலாம்
உங்க பழய வாட்ஸ் அப் சேட்ட திரும்ப படிக்கும்போது, நாமலா இந்த அளவுக்கு கம்பி கட்டி இருக்கோம்னு தோனும். உங்கள நெனச்சா உங்களுக்கே சிரிப்பா இருக்கும். என்ன செய்யறது அதுதான் நீங்க.
விருச்சிகம்
காலையில உங்கள லவ்வுல தாங்கு தாங்குன உங்க லவ்வர் ஈவினிங் சண்ட செய்யலாமா மோட்ல ரெடியா இருப்பாங்க. நீங்க நெனச்சா ரொம்பவே ஜாலியா கொண்டுபோக முடியும். ஆனால் அத செய்ய மாட்டேன்னு ஒத்த கால்ல நிப்பீங்க.
தனுசு
ஆசை ஆசையா ஆஃப் பாயில் போட ஆசப்பட்டு பொறுமையா முட்டைய ஒடச்சு ஊத்துனா மஞ்சள் கரு உடையும் போது மனசுக்குள்ள ஒரு காண்டு ஆகும் பாருங்க அந்த மாதிரி இருக்கப்போகுது இன்னைக்கு. அதுக்கான வாய்ப்புகள் ரொம்பவே பிரகாசமா உங்க சைடுல இருக்கு. பாவம் உங்க லவ்வர். உங்ககிட்ட மாட்டிக்கிட்டு இன்னைக்கு படாதபாடு படப்போறாங்க.
மகரம்
நீங்க ரொம்ப க்ரியேட்டிவா யோசுச்சு செய்யறேன்னு உங்க லவ்வர இம்ரஸ் பண்ண ஏதேதோ செய்வீங்க. ஆனா அதெல்லாம் அவங்க கண்ணுக்கு "தி கிரேட் கரிகாலன் மேஜிக் ஷோ" மாதிரி தெரியும். காமெடியான நாள்.
கும்பம்
உங்க ராசிக்கு ஏத்த மாதிரியே உங்க ஆள் உங்கள கும்மு கும்முனு கும்மியுட போறாங்க. எல்லாம் வாயி தான் காரணம். எங்கயாச்சும் கொஞ்சமாவது சீரியஸ் கான்வர்ஷேசன் நடத்தியிருக்கீங்களா. உங்களுக்கு வேணும் வாங்குங்க. பயப்பட வேண்டாம் அடி மட்டும் தான் விழுறதுக்கான வாய்ப்புகள் அதிகம். வேறு சேதாரங்கள் ஏற்படாது.
மீனம்
சீரியஸா நீங்க சொல்ற விஸயங்கள உங்க ஆள் சிரிப்பு போலீஸ் கெட்டப்புல உங்கள யோசுச்ச சிரிச்சுட்டு இருப்பாங்க. நீங்க எவ்வளவு கேட்டாலும் சொல்ல மாட்டாங்க. உங்களுக்கு பரிதாபம். உங்களால உங்க ஆளுக்கு ஸ்மைலி டே.