மேலும் அறிய

Love Horoscope Today: இந்த நாள் காதலர்களுக்கு இனிய நாளா? ஜாலியா படிங்க;லவ் ராசி பலன்!

Love Horoscope Today in Tamil, September 5th 2022: உங்க லவ் எப்படி இருக்க போகுதுனு தெரிஞ்சுக்க, ஜாலியா இந்த லவ் ராசிபலன படிங்க.

கொஞ்ச தூரம் நடக்கலாமா? கை புடுச்சு நடக்கலாமா? நிஜமாவே என்ன காதலிக்கறயா என்ற கொஞ்சம் ப்ரியங்களை தாங்கிய கேள்விக்ளை எதிர்கொள்ளதா காதலே இருக்காது. காதலின் கை பிடித்து நடக்கையில் மனதுக்கு மட்டுமல்ல வாழ்வுக்கும் அது ஒரு இதமான காலம். கரங்கள் கோர்ப்பது என்பது ஏதோ விளையாட்டாய் நிகழ்வது கிடையாது. அது உள்ளூற நிகழ்வது. உங்களில் தொடங்கி உங்கள் காதலின் நம்பிக்கையிலோ அல்லது உங்கள் காதலில் தொடங்கி உங்களின் நம்பிக்கையிலோ அது நீளும். எனக்கு நீ இருக்கிறாய், எனும் நம்பிக்கை இருவரிலுமே ஊறி திளைத்து பூக்களை பூக்கச் செய்கிறது. காதல் எப்போதும் ஒரு நந்தவனத்தைப்போல் இருக்க விரும்புவதே இல்லை. 

மாறாக அது ஒரு வறட்சியை கடக்க தயாராகிறது. புயலில் இருந்து மீள தன்னை ஈடுபடுத்த நினைக்கிறது. ஒரு பெரும் பூகம்பத்தின் பிளவில் அகப்படாமல் இருக்க முயலும். ஓரு ஆழ்கடலின் சுழலில் சிக்கி தவிக்க அது விரும்பவே விரும்பாது. ஆனால் இப்படியான எத்தனை துயரங்களை கடக்கும்போதும் கடந்த பிறகும், காதல் எதிர்பார்ப்பது ஒன்று தான். மீண்டும் அந்த அன்பின் கரங்களை அழுத்தமாக பிடித்துக்கொண்டு உலகையே வலம் வர அது ஆவல் கொள்ளும். இது இயல்பாய் இயற்கையாய் காதலுக்கே உரித்தான ஓர் அழகிய குணம். 

காதல் எந்தவொரு மோசமான சூழலிலும் கரங்களை பிய்த்துக்கொண்டு சென்றுவிட வேண்டும் என நினைப்பதே இல்லை. காதல் கரங்களை இன்னும் இறுகப்பற்றத்தான் நினைக்கிறது. எல்லா காதலிலும் முதல் முறையாக கரங்களை கோர்க்கும் போது ஒரு சிறு தடுமாற்றத்துடன் வெட்கத்துடன் ஒருவித பதற்றத்துடன் தான் பற்றியிருக்கும். அப்படி பற்றிக்கொண்ட கரங்கள் தான், தன் காதலை ஆரத்தழுவிக்கொள்கின்றன. காதலில் கரங்கள் செய்யும் மாயாஜாலம் அளப்பரியது. கண்களில் தொடங்கும்  காதலை கரங்களில் தொடர்வது ஒரு மாயவித்தை. அப்படியான வித்தைகளில் சொதப்பல் ஏற்படாமல் இருக்க வேண்டும் என நாங்க விரும்புறோம். சொதப்பல் ஏற்படாமல் இருக்க உங்க ராசிக்கான ஜாலியான லவ் ராசி பலன்களை ஜோடியா படிங்க...


Love Horoscope Today: இந்த நாள் காதலர்களுக்கு இனிய நாளா? ஜாலியா படிங்க;லவ் ராசி பலன்!

மேஷம்

உங்க ஆள்ட்ட இத்தன வருஷமா லவ் பண்றோம் எப்பதான் கல்யாணம் செஞ்சுக்குக்க போறோம்னு கேட்டா, உங்க வீட்டுல உன்னோட கல்யாணத்தபத்தி  பேச ஆரம்பிச்சுட்டாங்களா? உனக்கு எப்போ கல்யாணம்னு கேட்டு உங்களுக்கே ஷாக் கொடுப்பாங்க. ஷாக்குகள் நிறைந்த நாள். 

ரிஷபம்

ஒன் வேர்ட் டிரெண்டிங்ல யார் யாரோ என்னென்னவோ டிரெண்ட் செஞ்சுட்டு இருக்கும்போது நீங்க மட்டும் சந்து வாக்குல, உங்க வாட்ஸ்ஆப் ஸ்டோரில மொரட்டுசிங்கிள்'னு போட்டு உங்க ஆள்ட்ட வாங்கி கட்டிக்குவீங்க. 

மிதுனம்

உங்களோட எல்லா டேவும் மெதுவா போகும். இன்னைக்கு உங்க ஆள்கூட வெளிய போலானு முடிவு செஞ்சு இருப்பீங்க. ஆனா ஒன் டே ஒன் ஹவர் மாதிரி போயிடும். நீங்க ஸ்பீடா இருக்கனும் இல்லையினா இந்த நாள் உங்களுக்கு வேகமான நாள் தான். 

கடகம்

ரொம்பநாளா உங்கிட்ட ஒன்னு கேட்கனும்னு இருந்தேன்னு, உங்க ஆளு ஏதோ ஒரு இன்ட்ரஸ்டிங் கான்வர்ஷேசன் ஸ்டார்ட் செய்யறாருனு நெனச்சு நீங்களும் அஸ்கி வாய்ஸ்ல கேளுனு சொல்லுவீங்க. ஆனா உங்க ஆளு உங்களுக்கு காளிஃபிளவர் சில்லி சமைக்க தெரியுமானு கேப்பாங்க. ஏமாற்றமான நாள். 

சிம்மம்

நமக்கு தான் ஆளே இல்லையே நமக்கு எதுக்கு ஸ்மார்ட்போன்னு யோசுச்சு, தீபாவளிக்கு நல்ல கீ போர்ட் மொபைல் வாங்கலாமானு யோசிப்பீங்க. ரொம்பவே லேட்டா எடுத்திருந்தாலும் இது ஒரு நல்ல முடிவு. டெஷிசன் மேக்கிங் டே. 

கன்னி

என்னோட ஆளோட இந்த பிரச்சனை, அந்த பிரச்சனைனு உங்க ப்ரெண்ட்ஸ் வந்து பொலம்புவாங்க. நீங்களும் எதையோ உளறி உடுவோம் உளறுவீங்க. அந்த பிரச்சனை தீந்ததுக்கு நீங்க தான் காரணம்னு சொல்லி,  உங்கள லவ் சாமியார்னு  கான்டாக்ட் லிஸ்ட்ல ப்ரோமோட் பண்ணுவாங்க. அதனால உங்க லவ்வுக்கு எந்த யூஸ்யும் இல்லயோ அதுமாதிரி தான் டு டேவும் உங்க லவ்வுக்கு யூஸ்புல்லான டே கிடையாது. 


துலாம்

நீங்களும் உங்க லவ்வர்ரோட போன்ல சாங்ஸ் கேட்டுட்டு இருக்கும் போது, உங்க லவ்வர் ஒரு மோசமான வாய்ஸ் பேசற யார்ட்டயோ ரொமான்டிக்கா பேசீட்டு இருக்கறமாதிரி கால் ரெக்கார்டு ப்ளே ஆகும். பதறிப்போய் செக் பண்ணி பாத்தா அது உங்க வாய்ஸ்னு உங்களுக்கு தெருஞ்சதும், " அந்த வானத்தபோல மனம் படச்ச" பாட்டு மாதிரி உங்க லவ்வர பரிதாபமா பாப்பீங்க. பரிதாபமான நாள் உங்களுக்கு. 


விருச்சிகம்

ஏதோ டீப்பா நம்ம லவ் பத்தி யோசுட்டு இருக்காங்கனு உங்க ஆள்ட்ட போய் கேட்டா, பாக்கியாவும் கோபியும் சேருவாங்களா மாட்டாங்களானு ஒரே கவலையா இருக்கு. அவங்க சேந்ததுக்கு அப்பறம் தான் நம்ம கல்யாணம்னு சொல்லுவாங்க. உங்கள யாராலயும் காப்பாத்த முடியாது. முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும். 

தனுசு

வீடு ஃபுல்லா கல்யாண பத்திரிக்கையா இருக்கு, நீ எப்பதான் கல்யாணம் செஞ்சுப்பனு வீட்டுல கேட்கமாட்டாங்களானு ஃபீல் பண்ணீட்டு இருப்பீங்க. ஆனால் உங்க வீட்டுலயும் இந்த பேச்ச எடுக்க மாட்டாங்க உங்க லவ்வரும் எடுக்க மாட்டாங்க. பாவம்ங்க நீங்க. சோகமான நாள். 

கும்பம்

பாய்ஸ் ஸ்கூல், கேர்ள்ஸ் ஸ்கூல படுச்ச உங்க ப்ரெண்ட்ஸ் எல்லாரும்  கமிட் ஆகி கல்யாணம் செஞ்சுட்டு இருக்கும்போது, நீங்க கோ எஜுகேசன்ல படுச்சும் சிங்கிளாவே சுத்தீட்டு இருக்கோம்னு ஃபீல பண்ணீட்டு இருப்பீங்க. ஒரு கவலைகள் நிறைந்த நாள். 

மகரம்

உங்களுக்கு இன்னைக்கு ஒரே அலைச்சலாதான் இருக்கும். உங்க ஆளுக்கும் உங்களுக்கும் வெட்டு குத்து நடக்க கூட வாய்ப்பு இருக்குனு கட்டம் சொல்லுது. ஜாலியா பேசி சந்தோஷமா இருக்க முயற்சி செய்யுங்க. 

மீனம் 

சக்ஸஸ் ஃபுல் டே உங்களுக்கு. ரொம்ப நாளா எதாவது பேசனும்னு இருந்தா கூட இன்னைக்கு பேசிடுங்க. லைட்டா ஃபீல் பண்ணுவீங்க. ஹேப்பியா இருங்க.

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (08-08-2026): கடகத்துக்கு செலவு.. விருச்சிகத்துக்கு வரவு.. ஆகஸ்ட் 8ம் தேதி ராசிபலன்கள்!
Rasi Palan Today (08-08-2026): கடகத்துக்கு செலவு.. விருச்சிகத்துக்கு வரவு.. ஆகஸ்ட் 8ம் தேதி ராசிபலன்கள்!
Rasi Palan Today (07-08-2026): மேஷத்துக்கு கவனம்.. துலாமுக்கு குழப்பம்.. உங்க ராசிக்கு இன்னைக்கு என்ன பலன்?
Rasi Palan Today (07-08-2026): மேஷத்துக்கு கவனம்.. துலாமுக்கு குழப்பம்.. உங்க ராசிக்கு இன்னைக்கு என்ன பலன்?
Rasi Palan Today (05-08-2026): விருச்சிகத்துக்கு சிக்கல்.. மகரத்துக்கு செலவு.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (05-08-2026): விருச்சிகத்துக்கு சிக்கல்.. மகரத்துக்கு செலவு.. இன்றைய ராசிபலன்கள் இதோ!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
Embed widget