Love Horoscope Today: உங்க லவ்வுல இன்னைக்கு என்ன? ஜாலியா இந்த லவ் ராசிபலனை படிச்சு தெரிஞ்சுக்கங்க...
Love Horoscope Today in Tamil, September 4th 2022: உங்க லவ்வருக்கும் உங்களுக்கும் இன்னைக்கு என்னனு தெரிஞ்சுக்க இன்றைய லவ் ராசிபலன ஜாலியா படிங்க.
காதல் என்றாலே கவிதை இல்லாமல் இருக்காது. கவிதை எழுதாத காதலர்கள் கூட தங்களது மனதுக்கு பிடித்த அல்லது பாதித்த அல்லது தங்களது காதலுக்கு ஒத்துப்போகக் கூடிய கவிதைகளை காதலரிடம் பகிர்ந்து காதலை வெளிப்படுத்திக் கொண்டு இருந்தார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள். காதலுக்கு அன்பு, மகிழ்ச்சி, ப்ரியம் என தன்னை சிலாகித்துக் கொள்ளக்கூடிய விஷயங்களை பகிர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவையெல்லாம் காதலில் அனிச்சையாக நடக்ககூடிய விஷயங்கள். அதேநேரத்தில் காதல் வயப்பட்டவர்கள் சில நேரங்களில் மகிழ்ச்சியை பகிர்வதைப்போல், கவலையை, ஏமாற்றத்தை இன்னும் ஆழமாகச் சொன்னால், அழுகையை பகிர்வது கிடையாது. ஆனால், ஒருதலை காதலுக்கு தனிப்பட்ட கண்ணீர் இருந்தாலும், காதல் ஏற்கப்பட்ட பின்னர் ஏற்படும் கண்ணீரை மறைப்பது என்பது, உங்களது பார்வையில் என் காதலருக்கு ஏன் வருத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என தோன்றலாம்.
ஆனால் ஒரு நாள் நீங்கள் வேண்டாம் என மறைத்த கண்ணீர் தெரியவரும்போது, ஒரு காதலராக நான் எதற்கு எனும் கேள்வி ஒரு வலியோடு உண்டாகிவிடும். சுகமோ, வலியோ காதலரிடம் பகிருங்கள் அவர்கள் உங்களுக்கு ஒரு ஆறுதலை ஏற்படுத்துவார்கள். கண்ணீரே காதலரால் தான் என நீங்கள் சொல்வதும் கேட்கிறது. உங்களுக்காகவே, உங்க ராசிக்கு ஏற்றவாறு இன்றைய ஜாலியான லவ் ராசி பலன்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். இத ரிலாக்ஷாவே படிங்க பாஸ்…
மேஷம்
பாக்கறதுக்கு நீங்க கோலி அனுஷ்கா மாதிரி செம ரொமாண்டிக் பேரா இருக்கீங்கனு எல்லாரும் சொல்லீட்டு இருபாங்க. ஆனா நீங்க வடிவேலு, கோவை சரளா பேர்னு உங்களுக்கு மட்டும் தான் தெரியும்.
ரிஷபம்
கண்ணாலயே பேசுவேன்னு சொல்லீட்டு, உங்க ஆள பயமுறுத்தீட்டு இருப்பீங்க. உங்கள இதுக்காகவே ப்ரேக் அப் செஞ்சுடலாமானு உங்க ஆள் யோசுச்சுட்டு இருப்பாங்க. கண்களால் காதலிக்க முடியாதபட்சத்துல, கைகளால் காதல் செய்யுங்க.
மிதுனம்
உங்களுக்கு இருக்கிற நியாபக மறதிக்கு உங்கள ஜெயில்ல போடனும்னு உங்க ஆள் சொல்லீட்டு இருப்பாங்க. இன்னைக்கு ரொம்ப முக்கியமான விசயங்கள மறந்துட்டு அடிகூட வாங்க வாய்ப்புகள் இருக்கு. நடுவுல கொஞ்சம் காதல காணோம் அப்படிங்கறது தான் உங்க நிலைமை.
கடகம்
நாட்டுல எவ்வளவோ நோய் வருது போகுது. உங்களுக்கு ஒரு நோய் வரமாட்டிங்குதுனு உங்க லவ்வரே ஃபீல் செய்யற அளவுக்கு அவங்கள கடுப்பேத்துவீங்க. உங்க லவ்வுல இன்னைக்கு போரிங்கான நாள்.
சிம்மம்
சீரியஸாவே உங்களுக்கு செம்ம டே. நீங்க சொல்றதுக்கு எல்லாம் உங்க ஆள் ஓகே சொல்லுவாங்க. உங்க ஆள பாக்க போறேன்னு வீட்டுல கூட சொல்லீட்டு போகலாம். அந்த அளவுக்கு நல்ல நாள்.
கன்னி
உங்க ஆள் கூப்ட்டாலோ அல்லது உங்களுக்கே போய் பாக்கனும் தோனுச்சுனா கூட தயசு செஞ்சு போயிடாதீங்க, பெட்சீட்ட இழுத்து போத்தி, கைப்புள்ள தூங்குனு சொல்லீட்டு தூங்குங்க. இது உங்க லவ்வுக்கும் நல்லது உடம்புக்கும் நல்லது.
துலாம்
கனவுலயே வாழ்ந்துட்டு இருக்க நீங்க இன்னைகாச்சும் உங்க லவ்வ வெளிப்படுத்துங்க. இல்லனா சிட்டு குருவிக்கு றெக்க மொளச்சுடுத்து பறந்து போயிடுத்துனு உங்க நிலைமை ஆகிடும். உங்க லவ் கெரியர்ல இம்பார்டண்ட் டே.
விருச்சிகம்
விதவிதமா யோசுச்சு உங்க லவ்வர்ட்ட பேசீட்டு இருப்பீங்க. ஆனா இதெல்லாம் விஜய் டிவி சீரியல்ல ஏற்கனவே வந்துடுச்சு வேற எதாவது ட்ரை பன்னுங்கனு உங்க ஆள் சொல்லுவாங்க. நீங்க மெட்டி ஒலிக்கு அப்பறம் சீரியலே பாக்கலனு உங்களுக்கு மட்டும் தான் தெரியும். பாவமா நாள்.
தனுசு
லவ்வர் முக்கியமா ப்ரெண்டு முக்கியமானு முடிவு எடுக்க வேண்டிய கட்டாய சூழல் இன்னைக்கு உங்களுக்கு ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கு. மனச கொஞ்சம் தயாரா வெச்சுக்காங்க.
கும்பம்
ஓவர் ஏகடிங் செஞ்சு மாட்டிப்பீங்க. உண்மையச் சொல்லி சரணடடுஞ்சுடுங்க அதுதான் நல்லது. நல்ல நாள்.
மீனம்
ப்ரண்ட்ஸ் புராணம் பாடாம, உங்க காதல் புராணத்த பாடுங்க. செம்ம ரொமாண்டிகான நாள். ஆல் த பெஸ்ட். வீட்டுல மாட்டிகாதீங்க.