மேலும் அறிய

Budhan Peyarchi 2024: யோகத்தை தரும் புதன் பெயர்ச்சி! 12 ராசிகளில் பணம் கொட்டப்போகும் ராசிகள் எது?

Budhan Peyarchi 2024 Palangal: புதன் பெயர்ச்சியை முன்னிட்டு 12 ராசிகளுக்கும் என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

மேஷ ராசி :

அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு மூன்றாம் அதிபதியும் ஆறாம் அதிபதியுமான புதன்  ஐந்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்வது திடீர் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்.  எதிர்பார்த்த நபரிடமிருந்து பணம் கைக்கு வரும்.  புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

ரிஷப ராசி :

ரிஷப ராசிக்கு இரண்டாம் அதிபதியும் ஐந்தாம் அதிபதியுமான புதன் நான்காம் வீட்டில் இருப்பது உங்களின் அறிவுத்திறனால் சிக்கலான காரியங்களை கூட சுலபமாக செய்து முடிப்பீர்கள்.  புதன் கணக்கன் என்பதால்  டிஜிட்டல் உலகில்  சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்போர், ஐடி கம்பெனியில் இருப்போர்,  ஆசிரியர்கள், கணக்காளர்கள் போன்றோருக்கு  சிறப்பான காலகட்டமாக இருக்கப் போகிறது.  பிள்ளைகள் வழியில் பெருமை வந்து சேரும்.

மிதுன ராசி :

அன்பார்ந்த வாசகர்களே ராசியின் அதிபதி மூன்றில் அமர்வது மிகமிகச் சிறப்பான ஒரு  கிரக சூழ்நிலை.  உங்களின் ராசிக்கு நான்காம் இடத்தில் கேது அமர்ந்திருக்கிறார் ஆனால் கேதுவுக்கு 12ஆம் இடத்தில் புதன் அமர்வது கேதுவின் வீரியத்தை குறைக்கும்.  இதுவரை தடைபட்டு வந்த காரியங்கள் நிறைவேறும்.  புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி அடைவீர்கள்.  உங்கள் பேச்சுக்கு சமுதாயத்தில் மரியாதை கிடைக்கும்.  தன வருவாய் தாராளமாக இருக்கும்.

கடக ராசி :

அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  இரண்டாம் இடத்தில் புதன் பிரவேசிப்பது  சாதுரியத்தால் ஜெயிக்கும் தன்மையை உருவாக்கும்.  எப்படிப்பட்ட சவால்களையும் நீங்கள் பேசியே சமாளித்து விடுவீர்கள்.  மற்றவர்களின் பிரச்சனையில் தலையிட்டு அதை சமாதானம் செய்து வைக்கும் ஆற்றல் பிறக்கும்.  அடுத்து என்ன பண்ணலாம் என்ற  ஆலோசனை மற்றவர்கள் உங்களிடத்தில் கேட்பார்கள்.  பிரிந்து சென்றவர்கள் ஒன்று கூடும் காலகட்டம்.  பணரீதியான சிக்கல்கள் விலகும்.

சிம்ம ராசி :

அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  ராசியிலேயே புதன் அமர்வது மிகப்பெரிய யோகத்தை கொண்டு வரும்.  சிம்ம ராசிக்கு 11 ஆம் அதிபதி  ராசிக்கு வரும்போது லாபத்தை கொண்டு வருவார்.  பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கப் போகிறது.  நீண்ட தூரப் பிரயாணங்களை மேற்கொள்வீர்கள்.  அரசியல்வாதிக்கு ஆதாயம் உண்டு.  கோர்ட்டு கேஸ் வம்பு வழக்கு என்று இருக்கிறவர்களுக்கு அதில் இருந்து விடுதலை கிடைக்கும்.

கன்னி ராசி :

அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு 12 ஆம் வீட்டில் புதன் அமர்கிறார்.  ராசி அதிபதி பனிரெண்டாம் வீட்டில் அமர்வது  நீண்ட தூரப் பிரயாணங்களை மேற்கொள்ள வைக்கும்.  பணம் எப்படி செலவாகிறது என்ற கணக்கை தற்போது புரிந்து கொள்வீர்கள்.  புதிய பொருட்களை வீட்டிற்கு வாங்கி மகிழுங்கள்.  சுபச் செலவுகள் ஏற்படலாம்.  ஒரு சிறிய தொகையை கடனாக வாங்கி  அதன் மூலம் பொருட்கள் வாங்க வாய்ப்புண்டு.

துலாம் ராசி :

அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு 11 ஆம் வீட்டில் புதன் அமர்கிறார்.   நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை தற்போது பார்க்கலாம்.  பெயர்ச்சியாகும் புதன் உங்களுக்கு எல்லாவற்றிலும் சாதகமாக தான் இருக்கிறார்.  சொல்லப்போனால் மற்ற ராசியை காட்டிலும் துலாமிற்கு தற்போது மிகுந்த ஏற்றமான காலகட்டம்.  காரணம் குரு எட்டில் மறைந்து சற்று பலவிதமான  சூழ்நிலையை கொடுத்திருந்தாலும் தற்போது வரப்போகின்ற புதன் உங்களுக்கு பலமான சூழ்நிலையை ஏற்படுத்தித் தருவார்.

விருச்சக ராசி:

அன்பார்ந்த விருச்சக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டில் புதன் அமர்கிறார். ஏற்கனவே தொழிலில் இருந்த மந்த நிலை மாறி தற்போது சுறுசுறுப்புடன் செயல்பட போகிறீர்கள்.  வியாபாரத்தை விரிவு படுத்துவதற்கான காலகட்டம் குறிப்பாக ஒரு இடத்தில் உங்களுடைய வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றால் பல இடங்களில் கிளை வர அளவிற்கு வருமானம் உயரும்.  நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டும் என்று இருந்த நபரை சந்திப்பீர்கள்.  வாழ்க்கையில் ஒளி வீசக்கூடிய காலகட்டம்.

தனுசு ராசி :

அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு 9 ஆம் வீட்டில் புதன் வருகிறார்.  ஏழாம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் ஒன்பதாம் வீட்டில் வருவது வேலையில் மிகப்பெரிய மாற்றத்தையும்  வாழ்க்கைத் துணையோடு உங்களுக்கு இருந்த மனக்கசப்பு போகும்.  பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று கூடுவார்கள்.  தந்தையாருடன் இருந்த மனக்கசப்புகள் மாறும்.  குருமார்களின் ஆசிர்வாதத்தோடு புதிய  காரியங்கள் செய்து அதிலும் வெற்றி பெறுவீர்கள்.  புதன் பெயர்ச்சி உங்களுக்கு மிகப்பெரிய ஏற்றத்தை கொண்டு வரும்.

மகர ராசி :

அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு அஷ்டமத்தில் புதன் செல்கிறார்.  ஆறாம் அதிபதி எட்டாம் வீட்டில் செல்வது கெட்டவர் கேட்டில் கிட்டிடும் ராஜயோகம் என்ற விதியின் அடிப்படையில்  புதன் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தையும் தன வரவையும் கொண்டு வந்து சேர்க்கப் போகிறார்.  ஆறாம் அதிபதி எட்டில் மறைவது நீண்ட நாட்களாக இருந்து வந்த நோய் தீரக்கூடிய காலகட்டம்.  கடன் சுமைகள் பாதியாக குறையும் .  வாழ்க்கையில் பிடிப்பே இல்லாமல் இருந்த காலகட்டம் போய் தற்போது சுறுசுறுப்புடன் செயல்படக்கூடிய நிலைக்கு வருவீர்கள்.  தன வரவு நன்றாக இருக்கும்.

கும்ப ராசி :

அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் புதன் செல்கிறார் நீண்ட நாட்களாக திருமணமாகாமல் இருந்த கும்ப ராசி அன்பர்களுக்கு வரன் வாயில் தேடி வரும்.  பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியான புதன் எழில் வரும்போது பூர்வீகத்தில் இருக்கக்கூடிய வில்லங்கங்கள் அகன்று உங்களுக்கு சாதகமான சில விஷயங்கள் நடக்கும். மறைந்த குலதெய்வம் கண்ணுக்கு தென்படும்.  உங்களின் வளர்ச்சியை பார்த்து கண் போட்டவர்கள் எல்லாம் உங்களுடன்  கைகோர்த்துக்கொண்டு  வந்து பேசுவார்கள்.  வியாபாரத்தை விரிவு படுத்தி அதன் மூலம் பல லாபத்தை ஈட்டலாம்.

மீன ராசி :

அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு நான்காம் அதிபதியும் ஏழாம் அதிபதியுமான புதன் 6 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார்.  மீன ராசியை பொறுத்தவரை புதன் பாதகத்தை கொண்டு வருவதால் அவர் ஆடாம் வீட்டில் மறைவது உங்களுக்கு யோகத்தை கொடுக்கும்.  புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள் அதில் வெற்றியும் கிடைக்கும்.  எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.  வேலைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.   புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.  உங்கள் பேச்சுக்கு சமுதாயத்தில் மரியாதை கிடைக்கும்.  நாள்பட்ட வியாதிகள் குணமடையும்.  புதன் பெயர்ச்சி உங்களுக்கு ஏற்றமாக இருக்கிறது.

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (16-08-2026): இன்று லாபம் கொட்டும் ராசி எது? - மேஷம் முதல் மீனம் வரையிலான பலன்கள் இதோ!
Rasi Palan Today (16-08-2026): இன்று லாபம் கொட்டும் ராசி எது? - மேஷம் முதல் மீனம் வரையிலான பலன்கள் இதோ!
Rasi Palan Today (14-08-2026): வெள்ளிக்கிழமை தனுசு ராசிக்கும் கொட்டப்போகும் லாபம்.. அப்ப உங்க ராசிக்கு? .. பலன்கள் இதோ!
Rasi Palan Today (14-08-2026): வெள்ளிக்கிழமை தனுசு ராசிக்கும் கொட்டப்போகும் லாபம்.. அப்ப உங்க ராசிக்கு? .. பலன்கள் இதோ!
Rasi Palan Today (13-08-2026): இன்னைக்கு நல்ல நேரம் எப்போது?.. உங்க ராசிக்கு என்ன நடக்கும்.. பலன்கள் இதோ!
Rasi Palan Today (13-08-2026): இன்னைக்கு நல்ல நேரம் எப்போது?.. உங்க ராசிக்கு என்ன நடக்கும்.. பலன்கள் இதோ!
Rasi Palan Today (12-08-2026): இன்று ஆடி அமாவாசை.. துலாமுக்கு இன்னைக்கு லாபம்.. அப்ப உங்க ராசிக்கு?
Rasi Palan Today (12-08-2026): இன்று ஆடி அமாவாசை.. துலாமுக்கு இன்னைக்கு லாபம்.. அப்ப உங்க ராசிக்கு?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Online Property Registration : பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
Embed widget