பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காத ஆண்கள் யார்? யார்? ஜோதிடம் சொல்வது இதுதான்!
அன்பார்ந்த ஏபிபி நாடு வாசகர்களே இந்த தலைப்பு சற்று விசித்திரமானது. நிச்சயமாக நீங்கள் யோசிக்கலாம் பெண்களுக்கு பிடிக்காத நபர் எப்படி இருப்பார்கள்?
இப்படியும் ஜாதகங்கள் இருக்க முடியும். ஒரு ஆணை எப்படியும் ஒரு பெண்ணுக்கு ஏதாவது ஒரு கட்டத்தில் பிடித்துதானே ஆக வேண்டும். அப்படியில்லை. பெண்களுக்கு பிடிக்காத ஆண் ஜாதகர்கள் இவர்கள்தான். சரி அதிகப்படியான முன்னுரையை கொடுக்காமல் நேராக விஷயத்துக்கு வருகிறேன்.
சுக்கிரனின் வலிமை:
ஒரு ஆணின் ஜாதகத்தில் பெண்ணை குறிக்கக்கூடிய கிரகம் சுக்கிரன். அந்த சுக்கிரனின் வலிமையை வைத்து தான் ஒரு பெண்ணுக்கு அந்த ஆணை எவ்வளவு பிடித்திருக்கிறது என்பதை நம்மால் கூற முடியும். சுக்கிரன் வலுவிழந்த எத்தனையோ ஜாதகங்கள், நல்ல மனைவியை திருமணம் செய்து கொண்டு சிறப்பாக வாழ்ந்திருப்பதை பார்த்திருக்கிறேன். அப்படி இருக்கும்போது பெண்களுக்கு எப்படி ஒரு ஆணை பிடிக்காமல் இருக்க முடியும்.
நான் கூற வருவது பிடிக்காமல் ஒதுக்குவது அல்ல, ஆனால் தன்னுடன் இருக்கும் பெண்களின் மனதை சரியாக புரிந்து கொள்ளாமல் நடப்பது. அப்படி பார்த்தால் பல வீட்டில் திருமணமான கணவன் மனைவிக்குள் சண்டை சண்டை வரும்போது, ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கணவனும் மனைவியும் நீ எனக்கு பொருத்தமானவர் இல்லை என்பது, ஏதாவது ஒரு கட்டத்தில் யதார்த்தமாக சொல்வது தானே சகஜம். இப்படி இருக்கும் பட்சத்தில் மேலே குறிப்பிட்ட விதி ஏதாவது ஒரு கட்டத்தில் கணவர்மார்களுக்கு பொருந்தி தானே ஆக வேண்டும்.
சுக்கிர தோஷம்:
ஆனால் பெண்களைப் பொறுத்தவரை சாதாரணமாக கணவர்கள் சண்டை போடுவதும், பின்பு சமாதானமாவதும் இயல்பு சகஜம். ஆனால் அதற்கென்று பெண்களுக்கு ஆண்களை பிடிக்காமல் இல்லை. மனைவிகள் அனைவரும் கணவர்களை வெறுத்துக் கொண்டே இருப்பார்கள் என்றும் இல்லை. மாறாக ஒரு ஆணின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து எண்ணி ஏழாம் பாவகம் கெட்டுப் போயிருந்தால், சுக்கிரனும் ஜாதகத்தில் கடுமையாக தோஷம் பெற்றிருந்தால், அந்த ஆணோடு அந்தப் பெண் நரக வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டிருப்பார்.
மேலோட்டமாக எல்லோருக்கும் தெரியும் வண்ணம் சேர்த்துக் கொண்டே குடும்பமாய் வாழ்ந்து கொண்டிருப்பார்களே தவிர, சுக்கிரன் வலுவிழந்த ஒரு ஆண் ஜாதகரோடு ஒரு பெண் நிரந்தரமாய் மனதார வாழ்வது என்பது மிக மிக கடினம். சுக்கிரன் ராகுவோடு சேர்ந்திருந்தால் சிலருக்கு பலதார யோகங்கள் உண்டாகும். சுக்கிரன் கேதுவோடு சேர்ந்து இருந்தால் விவாகரத்து ஏற்பட்டு பின் இரண்டாவது மனைவி அமையும் வாய்ப்புண்டு.
ஆனால் நான் மேலே சொன்ன விதிகளுக்கு விதிவிலக்குகளும் உண்டு. அதனால் அப்படியே இந்த விதிகளை அப்ளை செய்து விட்டு நடக்கவில்லை என்று கூற வேண்டாம். அவரவர் சொந்த ஜாதகத்தை சரியாக பரிசோதனை செய்த பிறகு ஒரு பெண்ணுக்கு எவ்வளவு தூரம் அந்த ஆணை பிடித்து இருக்கிறது என்பதை நம்மால் கூற முடியும்.
பெண்களுக்கும் பொருந்துமா?
இது ஆண்களுக்கு மட்டும் பொருந்துமா? என்றால் நிச்சயமாக இல்லை. ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரன் வலுவிழந்து காணப்பட்டால் மற்ற தோழிகளுக்கு அந்த பெண்ணை பிடிக்காமல் போய்விடும் என்பது தான் உண்மை. ஒரு ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சமாக இருந்தாலோ அல்லது கேதுடன் ராகு உடன் சேர்ந்து இருந்தாலும் அந்த ஆணுக்கு பெண்களால் ஏதாவது ஒரு வகையில் அவமானமோ பழிச்சொல்லோ ஏற்பட்டு தீரவே வேண்டும். அப்படியெல்லாம் எனக்கு ஒன்றும் நடக்கவில்லை நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்று யாராலும் கூற முடியாது அவரவர் வாழ்க்கையின் உள் சென்று பார்த்தால் மட்டுமே நடந்த உண்மைகள் தெரியவரும் எனவே நான் சொல்லுகின்ற கருத்துக்கள் அத்தனையும் அதே ஜாதகருடன் பொருந்தும் என்றும் சொல்லவில்லை சில நீட்ட சுக்கிரனுக்கு நீச்ச பங்கம் ஏற்பட்டு ராஜயோகமாக மாறி கணவனின் காலடியிலேயே சதா விருந்து கடந்த பெண்களையும் நான் பார்த்திருக்கிறேன். அப்படியானால் விதி விதை வழக்குகள் இருப்பது போலவே எல்லா ஜாதகத்திலும் சில அம்சங்களும் மாறுபட்ட யோகங்களும் உள்ளன அது அத்தனையும் ஆராய்ந்து பார்த்த பிறகு அந்த பின்னால் அந்த ஆணோடு வாழ முடியுமா முடியாதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
சில ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் வலிமையாக இருப்பார். அப்படி என்றால் நல்ல காதலி அமைவார். அவர்கள் இருவரும் நன்றாக காதலித்து விட்டு திருமணம் செய்த பிறகு, ஏதோ ஒரு தசா புத்தியின் காரணமாகவோ ஏழாம் பாவகத்தின் வலிமையின்மை காரணமாகவோ இருவரும் பிரிய கூடும். அப்படி கணவன் மனைவி ஆனதற்கு பின்பாக பிரிகிறார் என்றால் அது லக்னம் மற்றும் ஏழாம் பாவம் சம்பந்தப்பட்டது தவிர சுக்கிரன் சம்பந்தப்பட்டது அல்ல.
பெண்களால் அவமானம் ஏற்படாமல் இருக்க வணங்க வேண்டிய தெய்வம் !
உங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு பெண் தெய்வத்தை மனதில் வைத்துக் கொண்டு வணங்க ஆரம்பிப்பியங்கள். வாழ்க்கையில் தாய்க்குப்பின் தாரம் என்று கூறுவது போல பெண்கள் நம் வாழ்க்கையில் மிக முக்கியமானவர்கள். ஆகையால் அவர்களை கண்ணும் கருத்துமாய் பூ போல பார்த்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு ஆண்மகனின் கடமை ஒரு ஆண் தாயை எப்படி பார்க்கிறாரோ? அதேபோல தாரத்தையும் பார்க்க வேண்டும். அதேபோல தனக்கு பிறக்கின்ற பெண் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும். இப்படி பெண்கள் ஏதாவது ஒரு வகையில் நம் வாழ்க்கையோடு ஒன்றி போவதால், நீங்கள் அம்மன் சன்னதிக்கு சென்று விளக்கு ஏற்றுவது ஒன்பது முறை சுற்றி வலம் வருவது அம்மனுக்காக விரதம் இருப்பது என்று உங்களால் முடிந்த சிறு சிறு பக்தியை செலுத்தி வாருங்கள். பெண்களால் உங்களுக்கு ஏற்பட போகும் அவமானத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.