மேலும் அறிய

ஜோதிடம் பார்த்து கட்சி கொடியை வடிவமைத்தாரா விஜய்? கட்சி கொடியில் இருக்கும் ஜோதிட ரகசியம் என்ன?

ஜோதிடம் பார்த்து கட்சி கொடியை வடிவமைத்தாரா விஜய்...? விஜய் ஆரம்பித்த கட்சி கொடியில் இருக்கும் ஜோதிட ரகசியம் என்ன?

1. 2026 -ல் விஜய் ஆட்சியைப் பிடிப்பாரா...? மாட்டாரா...? 

2. எத்தனை சதவிகிதம் ஓட்டு வாங்குவார்?

3. மக்களிடம் அவருக்கு செல்வாக்கு எப்படி இருக்கிறது?  

4. மக்களுக்கு என்ன செய்யப்போகிறார்...?

5. அரசியலில் நீடிப்பாரா...? இல்லையா...?

6. இளைய தலைமுறை ஓட்டு வாங்கப் போகிறாரா...?

7. மக்களுக்கு செய்வதற்காக என்ன மாதிரியான திட்டங்களை கொண்டு வரப்போகிறார்...?

8. பெண்களுக்கான பாதுகாப்பு என்ன?

இப்படி எல்லாம்  விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் தற்போது தன்னுடைய கட்சியின் கொடியை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் நடிகர் விஜய்.

 ஒரு ஜோதிடராக  நான்  கொடியை பார்த்த போது நினைத்தது  விஜய்க்கு  சிகப்பு மற்றும் மஞ்சள்  அல்லது வெள்ளை  இந்த நிறம் தான் வெற்றியை கொடுக்கும் என்று...   அதேபோல தற்போது விஜயின் கொடி  வண்ணங்கள் அமைந்திருப்பதை பார்த்தால் நிச்சயமாக அவர் ஜோதிடம் பார்த்த பின்பாகத்தான்  தன் கட்சியின் கொடியை வடிவமைத்திருப்பார்  என்பதை நான் ஆணித்தரமாக நம்புகிறேன்...  அதற்கான காரணங்களை உங்கள் முன் வைக்கிறேன்.

ஒருவர் அரசு அதிகாரி அல்லது அரசியல்வாதி இப்படி உச்சபட்ச உயர் பதவிகளில் இருக்க வேண்டும் என்றால் அதற்கு  மூன்று கிரகங்கள் காரணம்..

1. சூரியன் 
2.செவ்வாய் 
3.குரு

 இந்த மூன்று கிரகங்களின் வலிமையை வைத்து தான் ஒருவருடைய ஜாதகத்தில் அரசு வேலை செய்வாரா? அல்லது அரசியலில் இருப்பாரா? என்பதை தீர்மானிக்க வேண்டும்.  

இதில்... 

1.சூரியன் - தலைமை பதவி என்று சொல்லக்கூடிய  உச்சபட்ச அதிகாரம் உள்ள சக்தியை கொடுப்பார் ஜாதகருக்கு. 

2. செவ்வாய் - மற்றவர்களை எதிர்க்க கூடிய வல்லமையை கொடுப்பார்.  செவ்வாய்க்கு தளபதி  என்ற பெயரும் உண்டு.   

3. குரு - ஒரு நாட்டை எப்படி ஆள வேண்டும்?  ஒரு அரசை எப்படி நடத்த வேண்டும்? என்று உச்சபட்ச அறிவை கொடுப்பார்.  இப்படி 3 கிரகங்களின் வலிமையை வைத்து மட்டும்தான் ஒருவருடைய அரசியல் வாழ்க்கையை தீர்மானம் செய்ய முடியும்.   

 நான் மேலே சொன்ன அத்தனையும் வைத்து தான் விஜய் அவரின் கட்சி கொடியை வடிவமைத்திருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?   ஆம்  

சூரியன் =  சிகப்பு  மற்றும் ஆரஞ்சு  நிறம்

செவ்வாய் =  அடர்ந்த சிவப்பு நிறம்

குரு =  மஞ்சள் நிறம் [ குருவின் வாகனம் யானை ]

 நீங்கள்  பார்க்கும்  அந்த கொடியின் மொத்த அம்சமும்  நான் மேலே குறிப்பிட்ட மூன்று கிரகங்களுக்குள் அடங்கும்.   இது மட்டுமல்ல  முக்கியமாக விஜயின் ஜாதகத்தை அலசுவோம். விஜய்க்கு  கடகத்தில் செவ்வாய்... அதற்கு நீச்ச பங்கம் கொடுப்பது சந்திரன்.  அரசியல் சக்தி கொடுக்கக்கூடிய செவ்வாயே ஒரு ஜாதகத்தில் நீச்சமாகிவிட்டால், நிச்சயமாக அந்த ஜாதகர் நீச்ச பங்கம் அடைந்தே தீர வேண்டும் அப்போதுதான் அவர் அரசியலில் வெற்றி பெறுவார். அப்படி நீஜ பங்கம் அடைய வேண்டும் என்றால் அதன் விதியை பற்றி நான் கீழே கொடுக்கிறேன்.

  செவ்வாய் -   சிகப்பு நிறம் 

   குரு  - மஞ்சள் வண்ணம் ( நீச்ச பங்கம் கொடுப்பவர் )

   குரு -   வாகனம் யானை  ( நீச்ச பங்கம் கொடுப்பவர் )

 இப்படியாக  வெற்றி கழகத்தின் கொடியில் ( மஞ்சள்,  சிவப்பு, யானை ) இது மூன்றும் அமைந்தது எதேச்சையாகவா? அல்லது  விஜய்யின் ஜாதகத்தில் அவருக்கு கிடைக்க கூடிய நீச்சபங்க ராஜயோகத்தின் அடிப்படையில்  அவர் ஜோதிடம் பார்த்து வைத்தார் என்பது கேள்வி குறிதான்... எப்படி இருந்தாலும் விஜயின் கொடி அமைந்தது அவருக்கு வெற்றியை கொடுக்கும் என்பதை காட்டுகிறது.

(இந்த கட்டுரையில் சொல்லப்பட்ட கருத்துகளுக்கு ஏபிபி நாடு பொறுபேற்காது. இது, ஜோதிடரின் தனிப்பட்ட கருத்து)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறாரா மம்தா பானர்ஜி? கொல்கத்தா மருத்துவர் வழக்கில் ட்விஸ்ட்!
முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறாரா மம்தா பானர்ஜி? கொல்கத்தா மருத்துவர் வழக்கில் ட்விஸ்ட்!
Breaking News LIVE: வட்டு எறிதலில் இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்
Breaking News LIVE: வட்டு எறிதலில் இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்
மத்திய அரசுக்கு ஒகே.. தமிழக அரசுக்கு ஜிஎஸ்டியால் எவ்வளவு வருவாய் வருகிறது என தெரியுமா?
மத்திய அரசுக்கு ஒகே.. தமிழக அரசுக்கு ஜிஎஸ்டியால் எவ்வளவு வருவாய் வருகிறது என தெரியுமா?
" மக்களை குடிகாரர்களாக சித்தரிக்க வேண்டாம்" - அன்புமணி ஏன் இப்படி கூறினார் ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Akash Chopra on Rohit Sharma | வெளியேறும் ரோஹித்? இப்படி பண்ணிட்டீங்களே மும்பை! சோகத்தில் ரசிகர்கள்Fire Accident | மகளிர் விடுதியில் தீ விபத்து!பரிதாபமாக பிரிந்த உயிர்கள்..FRIDGE வெடித்து பயங்கரம்Jayam Ravi Divorce | Jeeva Car Accident | விபத்தில் சிக்கிய கார்!  டென்ஷன் ஆன ஜீவா! ஷாக் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறாரா மம்தா பானர்ஜி? கொல்கத்தா மருத்துவர் வழக்கில் ட்விஸ்ட்!
முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறாரா மம்தா பானர்ஜி? கொல்கத்தா மருத்துவர் வழக்கில் ட்விஸ்ட்!
Breaking News LIVE: வட்டு எறிதலில் இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்
Breaking News LIVE: வட்டு எறிதலில் இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்
மத்திய அரசுக்கு ஒகே.. தமிழக அரசுக்கு ஜிஎஸ்டியால் எவ்வளவு வருவாய் வருகிறது என தெரியுமா?
மத்திய அரசுக்கு ஒகே.. தமிழக அரசுக்கு ஜிஎஸ்டியால் எவ்வளவு வருவாய் வருகிறது என தெரியுமா?
" மக்களை குடிகாரர்களாக சித்தரிக்க வேண்டாம்" - அன்புமணி ஏன் இப்படி கூறினார் ?
Thalapathy 69 Update: விஜய் நடிக்கப்போகும் கடைசிப் படம்! சம்பவத்திற்கு ரெடியா? வருகிறது தளபதி 69 அப்டேட்!
Thalapathy 69 Update: விஜய் நடிக்கப்போகும் கடைசிப் படம்! சம்பவத்திற்கு ரெடியா? வருகிறது தளபதி 69 அப்டேட்!
Madhya Pradesh Army : ராணுவ அதிகாரிகளை தாக்கிவிட்டு பெண் தோழிக்கு பாலியல் வன்கொடுமை: ம.பி.யில் பரபரப்பு.!
ராணுவ அதிகாரிகளை தாக்கிவிட்டு பெண் தோழிக்கு பாலியல் வன்கொடுமை: ம.பி.யில் பரபரப்பு.!
Vijay: சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்!
Vijay: சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்!
Sitaram Yechury: மறைந்த சீதாராம் யெச்சூரி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
Sitaram Yechury: மறைந்த சீதாராம் யெச்சூரி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
Embed widget