Aavani Month Rasipalan: கும்ப ராசிக்காரர்களே, ஆவணி மாதம் என்ன பலன்களை தரப்போகுது தெரியுமா?
அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஏழில் சூரியன் அமர்ந்திருக்கிறார். ஆவணி மாதம் எப்படி இருக்க போகிறது பார்க்கலாம்
கும்ப ராசி - ஆவணி மாத ராசி பலன்:
அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஏழில் சூரியன் அமர்ந்திருக்கிறார். ஆவணி மாதம் எப்படி இருக்க போகிறது பார்க்கலாம்..
பொதுவாகவே கும்பத்தில் பிறந்தவர்களுக்கு தலைமை பண்பு என்பது இயற்கையாகவே இருக்கும். அவர்களின் வாழ்க்கை துணை மிகுந்த தலைமை பண்போடு தான் செயல்படுவார்கள். கும்ப ராசிக்கு ஏழாம் இடம் சிம்மம் சூரியன் ராஜா இவர்கள் மகிழ்ச்சியானவர்களாக இருப்பார்கள். குடும்பம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். நல்ல குடும்ப பின்னணியில் இருந்து நீங்கள் வந்தவராக இருப்பீர்கள். உங்கள் முன்னோர்கள் அதிகப்படியான சொத்துக்களை வைத்திருப்பவர்களாக இருந்திருப்பார்கள். கும்ப ராசிக்கு 11 ஆம் வீடு குரு இரண்டாம் வீடும் குரு இரண்டு 11க்கு அதிபதி எங்கே இருந்தாலும் நன்மையை செய்வார். அவர் ஆறாம் வீட்டில் இருந்தாலோ எட்டாம் வீட்டில் இருந்தால் கூட இரண்டு 11 ஆம் அதிபதிகள் தீமை செய்ய மாட்டார். எனவே கும்ப ராசிக்கு குரு துணையாக தான் இருப்பார்.
சிலர் வீடு மாற்றம் செய்திருக்கலாம் சிலரிடம் மாற்றம் செய்திருக்கலாம் சிலர் புதியதாக வாகனம் வாங்கி மகிழ்கிறோம் . வேறு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று சுற்றுலா கூட நீங்கள் சென்று வந்திருக்கலாம். இப்படியான காலகட்டத்தில் ஏழில் சூரியன் ஆட்சி பெறுவது வாழ்க்கை துணையின் மூலம் நல்ல ஒரு முன்னேற்றம் உங்களுக்கு ஏற்படும். விலகிச் சென்று நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். நீண்ட நாட்களாக பார்க்காமல் இருந்த பலர் உங்களை தேடி வரப் போகிறார்கள்.
அளவாக பேச பழகிக் கொள்ளுங்கள்:
காரணமே இல்லாமல் சண்டை போட்ட நண்பன் தற்போது சமாதானம் ஆகி வந்து உங்களிடத்தில் ஒப்பரவ் ஆவார். நீங்கள் பேச நினைக்கும் நபர்கள் உங்களிடத்தில் பேச நினைப்பார்கள். இப்படியாக பல மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் இந்த ஆவணி மாதத்தில் நடைபெறப்போகிறது. இரண்டாம் வீட்டில் ராகு இருப்பதால் பேசும்போது அளவாக பேச பழகிக் கொள்ளுங்கள். நீங்கள் ஏதோ ஒன்று சொல்லப் போகிறது அது மற்றவர்களுக்கு வேறு மாதிரி கேட்டால் அது தவறாகிவிடும் அல்லவா ஆகவே தெரிந்த சிந்தனை உடையவர்கள் நீங்கள் இருப்பதால் பேச்சில் மட்டும் சற்று கவனமாக இருந்தீர்கள் என்றால் உங்களை வெல்ல யாரால் முடியும். அதிர்ஷ்டத்தை நம்பியே வாழ்க்கை ஓட்ட முடியாது என்று புரிந்தவர் நீங்கள் ஆகையால் நல்ல பல காரியங்களை செய்து அதன் மூலம் உங்களுடைய பெயர் நிலைபெறும்படி சில அஸ்திவாரங்களை போடுவதற்கான காலகட்டம் தான் இந்த ஆவணி மாதம்.
மற்றவர் உங்களுக்கு என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் நீங்கள் மற்றவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று இருக்கிறீர்களோ அதை செய்யுங்கள். உயிர் போகும் விளிம்பில் இருப்பவர்கள் கூட தற்போது எழுந்து நடக்க ஆரம்பிப்பார்கள் சூரியன் கேதுவின் செஞ்சாரத்தில் செல்லும்போது அஷ்டமத்தில் இருக்கக்கூடிய கேது வேலை செய்து உங்களுக்கு மறைவாக பிரச்சனையாக இருக்கக்கூடிய காரியங்களை அவர்களை சரி செய்து கொள்வார்கள்.
காலம் பொன் போன்றது தான் வரப்போகுது நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் தாயார் மகாலட்சுமி உங்களுக்கு எந்த வித தீங்கும் செய்யாமல் சிறப்பாய் ஒன்பதற்கும் நாளுக்கும் அதிபதி எங்கே இருந்தாலும் கோபத்தை பாதுகாத்துக் கொண்டே இருப்பார். ஆகையால் உங்களுக்கு பதவி உயர்வு குடும்பத்தோடு மகிழ்ச்சியாக ஒற்றுமையாக இருக்கக்கூடிய செயல் எதிர்காலம் பற்றிய பயம் நீங்கி புத்துணர்ச்சி பெறுவது போன்ற நல்ல பல காரியங்கள் நடைபெறப் போகிறது ஆவலோடு காத்திருங்கள் வணக்கம்.