மேலும் அறிய

விவசாயிகளுக்கு நற்செய்தி ; காய்கறி வண்டிகள் மூலம் வருமானம்.. இந்த scheme பத்தி தெரியுமா?

விவசாயிகளுக்கு நற்செய்தி! நடமாடும் காய்கறி வண்டிகள் மூலம் வருமானம் பெருகும்... 40 பயனாளிகளுக்கு அமைச்சர் வழங்கினார்.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 40 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.12 இலட்சம் மதிப்பில் நடமாடும் காய்கனிகள் விற்பனை வண்டிகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்.
 
மானியத்துடன் கூடிய நடமாடும் காய்கனிகள் விற்பனை வண்டி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கம் 2025-26 கீழ், 40 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.12 இலட்சம் மதிப்பில் 50 சதவிகித மானியத்துடன் கூடிய நடமாடும் காய்கனிகள் விற்பனை வண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா,தலைமையில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்.
 
விவசாயிகளுக்கான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்

மேலும், தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், 8 பயனாளிகளுக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பிலான காய்கறி விதைகளையும், 5 பயனாளிகளுக்கு ரூ.225 மதிப்பிலான காய்கறி விதைதொகுப்புகளையும், 3 பயனாளிகளுக்கு ரூ.450 மதிப்பிலான பழக்கன்று தொகுப்புகளையும், 2 பயனாளிகளுக்கு ரூ.900 மதிப்பிலான மாடிதோட்டம் தளைகளையும் என மொத்தம்  18 பயனாளிகளுக்கு ரூ.61,575 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், வேளாண்மைத்துறை சார்பில், 13 பயனாளிகளுக்கு ரூ.25,135 மதிப்பிலான மண்புழு உரம் தயாரிப்பதற்கான படுக்கை விரிப்புகள், மிளகாய் வத்தல், நெல், சிறுதானியம், பருத்தி உள்ளிட்ட விவசாயிகளுக்கான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
 
விவசாயிகளுக்கு நேரடியாக வருமானம்

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் தேசிய தோட்டக்கலை இயக்கம் 2025-26 திட்டத்தின் கீழ், சில்லறை விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், ரூ.30,000- மதிப்பிலான நடமாடும் காய்கனிகள் விற்பனை வண்டிகள் ரூ.15,000 மானியத்துடன் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்ய முடியும். விவசாயிகளுக்கு தங்கள் விளைபொருட்களைச் சந்தைப்படுத்த புதிய வழிகளை உருவாக்குதல், சில்லறை விற்பனையை மேம்படுத்துதல், விவசாயிகளுக்கு நேரடியாக வருமானத்தை அதிகரிக்கும் வாய்ப்புகளை வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கம். அந்த வகையில், 40 பயனாளிகளுக்கு இந்த நடமாடும் காய்கனிகள் விற்பனை வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
 
நன்றி தெரிவித்த விவசாயிகள்

”இத்திட்டத்தின் மூலம் மானிய விலையில் நடமாடும் காய்கனிகள் வண்டிகள் பெற்றுள்ளதால், எங்களைப்போன்ற  சிறு விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளையும் காய்கள் மற்றும் கனிகளை நேரடியாக விற்பனை செய்ய முடியும் என்றும், ஒரே இடத்தில் அமர்ந்தும், கூடைகளில் சுமந்தும் விற்பனை செய்து வந்த எங்களுக்கு, இந்த நடமாடும் வண்டிகள் வழங்கப்பட்டுள்ளதால், காய்கனிகளை சிரமமின்றி வேறு இடத்திற்கு சுலபமாக எடுத்துச் சென்று விற்பனை செய்து எங்கள் வருமானத்தை பெருக்க முடியும் எனவும், இந்த நடமாடும் வண்டிகளை மானிய விலையில் வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் விவசாயிகள் நன்றிகளை” தெரிவித்தனர். இந்நிகழ்வில், துணை இயக்குநர்(தோட்டக்கலைத்துறை)  சுபாவாசுகி, விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) அம்சவேணி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர், அரசு அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

தலைப்பு செய்திகள்

கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
தட்டுப்பாடு இருக்காது... விவசாயிகள் நிம்மதி: தஞ்சைக்கு வந்த்து 1250 டன் உரம்
தட்டுப்பாடு இருக்காது... விவசாயிகள் நிம்மதி: தஞ்சைக்கு வந்த்து 1250 டன் உரம்
விவசாயிகள் காவலரா முதலமைச்சர் விஜய் ? இரட்டை நிலைப்பாடு அம்பலம் - டிடிவி தினகரன்
விவசாயிகள் காவலரா முதலமைச்சர் விஜய்? இரட்டை நிலைப்பாடு அம்பலம் - டிடிவி தினகரன்
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget