மேலும் அறிய

பொங்கல் தொகுப்பில் மஞ்சளுக்கு இடம் கிடைக்குமா..? - விவசாயிகள் கோரிக்கை

கொரோனா கட்டுப்பாடு காரணமாக பயிரிடப்பட்ட மஞ்சள் குலைகளை வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை-இந்த ஆண்டு எந்தவித கட்டுபாடுகளும் இல்லை. எனவே இந்த ஆண்டு மஞ்சள் குலைகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.

பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பு, மண்பானை, வண்ண கோலப்பொடிகள் இவைகள் மட்டுமின்றி முக்கிய பொருளாக மஞ்சள் குலைகளும் உள்ளது. தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் திருநாளன்று அதிகாலையில் எழுந்து இல்லங்கள் முன்பு பொங்கலிட்டு சூரியபகவானை வழிபடுவது தமிழ் பண்பாடாகவும், கலாச்சாரமாகவும் இருந்து வருகிறது. இவ்வாறு தைத்திருநாளன்று பொங்கலிட்டு வழிபடும்போது, குத்துவிளக்கேற்றி வைத்து, பொங்கலிடப்பட்ட பானைகள் அருகில் மஞ்சள் தாங்கிய குலைகளை தோரணமாக கட்டி  வைப்பது வழக்கம்.   மஞ்சள் குலைகளை வைத்து வழிபடுவதன் மூலம் வீட்டில்  மங்கலம் உண்டாகும் என பெரியோர்கள் கூறுகின்றனர். இதனால் பொங்கல் பண்டிகையின்போது வீட்டின் முன்பும், பொங்கலிடும் பானையை சுற்றியும் மஞ்சள் குலையை கட்டி பெண்கள் பொங்கலிடுவது வழக்கம்.

பொங்கல் தொகுப்பில் மஞ்சளுக்கு இடம் கிடைக்குமா..? - விவசாயிகள் கோரிக்கை

வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி அருகே உள்ள தங்கம்மாள்புரம், சிவஞானபுரம், சேர்வைகாரன்மடம், ஜக்கம்மாள்புரம், செவத்தையாபுரம் ஆகிய கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் பல ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் செடிகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.மஞ்சள் குலையாக வளர்ந்த பின்னர் பொங்கல் பண்டிகைக்கு முன்பு அறுவடை செய்து தமிழகம் மட்டுமின்றி டெல்லி, மும்பை உள்ளிட்ட இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்து வருகின்றனர். வழக்கமாக இந்த மஞ்சள் குலைகள் பயிரிடப்பட்டு 6 மாதத்தில் அறுவடைக்கு தயாராகி விடும்.பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இங்கு பயிரிடப்பட்டு உள்ள மஞ்சள் குலைகள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராகி உள்ளது.

பொங்கல் தொகுப்பில் மஞ்சளுக்கு இடம் கிடைக்குமா..? - விவசாயிகள் கோரிக்கை

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, "நாங்கள் ஆண்டு தோறும் மஞ்சள் குலைகள் சாகுபடி செய்து வருகிறோம். இந்த ஆண்டு மஞ்சள் குலைகள் நன்கு செழுமையாக வளர்ந்து உள்ளது. எனவே பொங்கல் பண்டிகைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு இந்த மஞ்சள் குலையை அறுவடை செய்து சந்தைகளுக்கு விற்பனை செய்ய கொண்டு செல்வோம். அதுபோல் வியாபாரிகளும் எங்களிடம் நேரடியாக மஞ்சள் குலைகளை மொத்தமாக வாங்கி சென்று விற்பனை செய்வார்கள். இங்கு விளையும் மஞ்சள் குலைகள் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக இங்கு பயிரிடப்பட்ட மஞ்சள் குலைகளை வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு எந்தவித கட்டுபாடுகளும் இல்லை. எனவே இந்த ஆண்டு மஞ்சள் குலைகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்கின்றனர்.

பொங்கல் தொகுப்பில் மஞ்சளுக்கு இடம் கிடைக்குமா..? - விவசாயிகள் கோரிக்கை

அதே நேரத்தில் தமிழர் திருநாளன்று அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் மஞ்சளை சேர்த்தால் விவசாயிகள் வாழ்வில் மங்கலம் பிறக்கும் என்கின்றனர் மஞ்சள் குலை விவசாயிகள்.

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்
கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget