மேலும் அறிய

செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் உள்நோக்கம் உடையது - பி.ஆர்.பாண்டியன்

தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 21-ம் தேதி டெல்லி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் டெல்லியில் வருகிற மார்ச் 21-ம் தேதி நடைபெற இருக்கின்ற, உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பது குறித்து, மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் சிவப்பிரகாசம் தலைமையில்  சீர்காழியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் திரளானோர் பங்கேற்று தங்கள் ஆலோசனைகளை வழங்கினர். இந்த கூட்டத்தில் பின் செய்தியாளர்களிடம்  பேசிய தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில்,

செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் உள்நோக்கம் உடையது - பி.ஆர்.பாண்டியன்

"மயிலாடுதுறை மாவட்டம் கனமழையின் காரணமாக பேரிடர் பாதிப்பை சந்தித்தது, இப்பகுதி விவசாயிகளுக்கு அரசு கணக்கெடுப்பின் அடிப்படையில் அரசு அறிவித்த தொகை பாதிக்கப்பட்ட உரிய விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இது நாள் வரை வரவு வைக்கப்படாமல் பல கிராமங்களில் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பயனாளர்களின் பட்டியலை வெளிப்படையாக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் ஒட்டப்பட வேண்டும், செறிவூட்டப்பட்ட அரிசி என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசும், தமிழக அரசும் தமிழகத்தில் வேகமாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். டெல்டாவில் சம்பா அறுவடைப் பணி தீவிரமடைந்துள்ள நிலையில் பருவம் மாறி மழை பெய்து வருகிறது.

TN Rain Alert: உஷார்.. தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய நிலவரம் இதோ..

செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் உள்நோக்கம் உடையது - பி.ஆர்.பாண்டியன்

இதனை கருத்தில் கொண்டு 21 சதவீதம் ஈரப்பத உடைய நெல்லை தடையின்றி கொள்முதல் செய்திட வேண்டும். தமிழக அரசு மத்திய அரசோடு சேர்ந்து சாலைகளை போடுகிறோம் என்ற பெயரில் விளைநிலங்கள் சூறையாடப்படுவதும், நிலக்கரி எடுப்பது குறித்தும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மத்திய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் வேளாண் விரோத சட்டங்கள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும். வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கும் நடவடிக்கை குறித்து எடுத்துரைக்க வேண்டும்.

TN Budget 2023: அடுத்த மாதம் தாக்கல் ஆகிறது தமிழ்நாடு பட்ஜெட் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் உள்நோக்கம் உடையது - பி.ஆர்.பாண்டியன்

மறுக்கும் பட்சத்தில் வருகின்ற மார்ச் 1-ஆம் தேதி குமரி துவங்கி புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மேற்குவங்கம், ஒடிசா, ராஜஸ்தான், சட்டீஸ்கர், பஞ்சா வழியாக 12 மாநில முதல்வர்களை சந்தித்து ஆதரவு திரட்டு டெல்லி  நோக்கி நீதி கேட்கிற நெடும் பயணத்தை துவக்க உள்ளோம். மார்ச் 21 -ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகளும், மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து 150 விவசாயிகள் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPSTiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்”உள்துறை குடுங்க, இல்லனா...” பிடிவாதமாக இருக்கும் ஷிண்டே! விழிபிதுங்கி நிற்கும் பாஜகஉதயநிதி முன் தள்ளுமுள்ளு! போர்வையை இழுத்த பெண்கள்! கோபத்தில் கத்திய POLICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
"தப்பா நினைச்சுக்காதீங்க" நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்காதது ஏன்? விஜய் விளக்கம்! 
திமுகவா ? அம்பேத்கரா ? பாயிண்டை பிடித்து பேசிய அன்புமணி.. திருமாவுக்கு செக்..!
திமுகவா ? அம்பேத்கரா ? பாயிண்டை பிடித்து பேசிய அன்புமணி.. திருமாவுக்கு செக்..!
பொன்முடி மீது சேறு! வேலையை பார்த்தது பாஜக! போலீசில் சிக்கிய முக்கிய புள்ளி! 
பொன்முடி மீது சேறு! வேலையை பார்த்தது பாஜக! போலீசில் சிக்கிய முக்கிய புள்ளி! 
கண்ணுக்கெட்டும் தூரம் வெள்ளம்! தண்ணீரில் மூழ்கிய விழுப்புரம் சாலை! தத்தளிக்கும் மக்கள்! - வீடியோ
கண்ணுக்கெட்டும் தூரம் வெள்ளம்! தண்ணீரில் மூழ்கிய விழுப்புரம் சாலை! தத்தளிக்கும் மக்கள்! - வீடியோ
Embed widget