மேலும் அறிய

தேனியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதியாகும் கரும்பு... கட்டு ரூ.300 வரையில் விற்பனை

முல்லைப்பெரியாற்றில் நீர்வரத்து மற்றும் நல்ல மழை பெய்ததால் கரும்பு நன்றாக விளைச்சல் அடைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்கின்றனர் என்கின்றனர்.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ளன. பொங்கல் என்றாலே நம் நினைவுக்கு வருவது தித்திக்கும் கரும்பு தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கரும்பை விரும்பி சாப்பிடுவார்கள்.


தேனியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதியாகும் கரும்பு... கட்டு ரூ.300 வரையில் விற்பனை

சூரியபகவானுக்கு விவசாயிகள் நன்றி தெரிவிக்கும் பாரம்பரியமிக்க பொங்கல் பண்டிகைக்கு முக்கியமான ஒன்றான செங்கரும்புகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. தமிழர்களின் முக்கிய பண்டிகைகளுள் பொங்கல் பண்டிகையும் ஒன்று. தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படும் அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை அன்று வீடுகளில் கோலமிட்டு, புதுப்பானைகளில் புதுஅரிசியை பொங்கலிட்டு கதிரவனுக்கு படையலிட்டு புத்தாடை அணிந்து மக்கள் கொண்டாடுவார்கள்.

HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?

தமிழர்கள் பாரம்பரியமாக திருவிழாவாக கொண்டாடப்படும் தை முதல் நாள் பொங்கல் விழாவானது தமிழர்களின் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் விழா என்று கூறியவுடன் முதலில் நமக்கு நினைவு வருவது இனிக்கும் பொங்கல், அதுபோக இனிக்கும் கரும்பு. இந்த கரும்பு என்பது பொங்கல் பண்டிகையில் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. பொங்கல் திருவிழாவை பொருத்தவரை விவசாயத்தை ஒப்பிட்டு இந்த விழாவானது கொண்டாடப்படுகிறது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களையும் ஒப்பிடுகின்றனர் தமிழர்கள்.

தேனியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதியாகும் கரும்பு... கட்டு ரூ.300 வரையில் விற்பனை

பொங்கல் கரும்புகள் வழக்கமாக ஏப்ரல் கடைசி வாரம் மற்றும் மே மாதங்களில் நடவு செய்யப்படும். காரணம் இந்த காலக்கட்டத்தில் நடவு செய்தால் தான் ஜனவரி மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதனால் தான் ஏப்ரல் கடைசி வாரத்தில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்வது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் கடந்த ஏப்ரல் மாதத்தில் பொங்கல் கரும்புகள் நடவுப்பணிகள் நடந்தது.

ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான சின்னமனூர், கூழையனூர், கோட்டூர் ஆகிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. முல்லைப்பெரியாறு பாசனத்தின் மூலம் அவை நன்றாக விளைச்சல் அடைந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் தற்போது கரும்பு அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் விளையும் கரும்புகள் அதிக இனிப்பு சுவை கொண்டதாக இருக்கிறது. இதனால் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்கின்றனர். 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. கரும்புகள் லாரிகளில் ஏற்றப்பட்டு மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.


தேனியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதியாகும் கரும்பு... கட்டு ரூ.300 வரையில் விற்பனை

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், அரசு கரும்புகளை கொள்முதல் செய்யும் போது சில நிபந்தனைகள் விதிக்கிறது. உயரமான கரும்புகளை மட்டும் எடுத்துக் கொள்கிறது. ஆனால் உயரம் குறைவாக உள்ள கரும்புகளை எடுப்பதில்லை. வியாபாரிகள் அனைத்தையும் கலந்து எடுத்துக் கொள்கின்றனர். அதனால் நேரடியாக வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகிறோம். எனவே வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகிறோம் என்றனர். மேலும் கரும்புகள் நன்கு விளைச்சல் அடைந்துள்ளதால், ஓரளவு லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முல்லைப்பெரியாற்றில் நீர்வரத்து மற்றும் நல்ல மழை பெய்ததால் கரும்பு நன்றாக விளைச்சல் அடைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்கின்றனர் என்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்
கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
தட்டுப்பாடு இருக்காது... விவசாயிகள் நிம்மதி: தஞ்சைக்கு வந்த்து 1250 டன் உரம்
தட்டுப்பாடு இருக்காது... விவசாயிகள் நிம்மதி: தஞ்சைக்கு வந்த்து 1250 டன் உரம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget