மேலும் அறிய

கரூர் அருகே விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை.. இயந்திரம் மூலம் நெல் நடவு பணி தொடக்கம்..

கடந்த மாதம் அவுரி செடி பயிரிடப்பட்ட நிலங்களில் அதை தழை சத்தாக மாற்றி, மாடுகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் உளவு செய்து நெல் பயிரிடும் பணிகள் கரூர் அருகே தற்போது நடந்து வருகிறது.

விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை இயந்திரம் மூலம் நெல் நடவு பணி.

விவசாய பணிகளுக்கு கூலி ஆட்கள் கிடைக்காத நிலையில் கரூர் அருகே இயந்திரங்கள் மூலம் நெல் நடவு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் குருவை சாகுபடி விட, சம்பா சாகுபடியில் நெல் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. நடப்பு ஆண்டு சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை மற்றும் அமராவதி அணைகளின் நீர்மட்டம் திருப்திகரமாக உள்ளதால், கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.கடந்த மாதம் அவுரி செடி பயிரிடப்பட்ட நிலங்களில் அதை தழை சத்தாக மாற்றி, மாடுகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் உளவு செய்து நெல் பயிரிடும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

கரூர் அருகே விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை.. இயந்திரம் மூலம் நெல் நடவு பணி தொடக்கம்..

நெல் அறுவடை செய்ய ஆள் இல்லாததால், இப்போது மழை பெய்து கொண்டிருக்கும் காரணத்தால், நெல் மற்றும் மற்ற பயிர்கள் வீணாகி கொண்டிருக்கின்றன. ஆகையால், அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால், விவசாய பணிகளுக்கு போதிய கூலி ஆட்கள் கிடைக்காத நிலை உள்ளது. இதனால்,100 நாள் வேலை திட்டத்தை கிராம பஞ்சாயத்துகளில் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என கடந்த மாதம் கரூரில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், கூலி ஆட்கள் பற்றாக்குறை உள்ளதால் நவீன இயந்திரங்கள் மூலம் நேரடியாக நெல் நடவு பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

கரூர் அருகே விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை.. இயந்திரம் மூலம் நெல் நடவு பணி தொடக்கம்..

கரூர் அருகே, செல்லாண்டிபாளையம் பகுதியில் இயந்திரம் மூலம் நெல் நடவு பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது வழக்கமாக நெல் நாற்று விட்டு 20 முதல் 30 நாட்கள் கழித்து நெல் நாற்று நடுவது வழக்கம். தற்போது விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறைவாக உள்ளதால், நெல் நடவு இயந்திரத்தை பயன்படுத்தி வருகிறோம். நெல் நாற்றம் வரிசையாக இயந்திரம் மூலம் நடும்போது சூரிய ஒளி படுவதால் எலி தொல்லை இருக்காது. களை எடுப்பதிலும் சிரமம் இல்லை என்று  அவர்கள் தெரிவித்தனர்.

கரூர் அருகே விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை.. இயந்திரம் மூலம் நெல் நடவு பணி தொடக்கம்..

பண்டிகை சீசன் முடிந்ததால் விலை குறையும், வாழைத்தார்.

ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை சீசன் முடிவடைந்துள்ளதால், கரூர் மாவட்டத்தில் வாழைத்தார் விலை குறைந்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் குளித்தலை, தோகை மலை, வேலாயுதம்பாளையம், லாலாபேட்டை, வாங்கல், கடவூர், நெருர், மணவாசி உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஆயுத பூஜை பண்டிகைகள், திருமண சீசன் உள்ளிட்ட காரணங்களால் வாழைத்தாருக்கு அதிக விலை கிடைத்தது. ஆனால், பருவநிலை காலம் மாதம் தற்போது வாழைத்தாருக்கு தேவை குறைந்து வருகிறது. ஆயுத பூஜை பண்டிகையின் போது 600 ரூபாய் வரை விற்ற பூவன் வாழைத்தாரின் விலை, இன்று  400 ரூபாயாக விலை குறைந்தது. அதேபோல் ரஸ்தாளி, கற்பூரவள்ளி ,மொந்தன் உள்ளிட்ட வாழைத்தார்களும் சராசரியாக 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

தலைப்பு செய்திகள்

Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்! 90% மானியத்தில் மின் இணைப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்! 90% மானியத்தில் மின் இணைப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
பயிர் இழப்பைத் தடுக்க சூப்பர் வழிமுறைகள்! விழுப்புரத்தில் அட்மா திட்ட விவசாயிகள் - விஞ்ஞானிகள் சந்திப்பு!
பயிர் இழப்பைத் தடுக்க சூப்பர் வழிமுறைகள்! விழுப்புரத்தில் அட்மா திட்ட விவசாயிகள் - விஞ்ஞானிகள் சந்திப்பு!
அறுவடைக்கு ஏதாவது எஞ்சுமா? கடன்கள் மட்டும்தான் மிஞ்சுமா?: தஞ்சை பகுதி விவசாயிகளுக்கு புதிய வேதனை
அறுவடைக்கு ஏதாவது எஞ்சுமா? கடன்கள் மட்டும்தான் மிஞ்சுமா?: தஞ்சை பகுதி விவசாயிகளுக்கு புதிய வேதனை

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
Embed widget