விவசாயத்தில் நடக்கும் பல்வேறு தவறுகளுக்கு இலவசம்தான் காரணம் - எழும் குற்றச்சாட்டு
விவசாயத்தில் நடைபெறும் பல்வேறு தவறுகளுக்கு அரசு தரும் இலவசம் தான் காரணம் என மயிலாடுதுறையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயி ஒருவர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் மற்றும் வேளாண் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம், சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த விவசாயிகளின் குறைகளை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.
Vikram OTT Release: நாயகன் 'ஓடிடி'யில் வரார்... ஹாட் ஸ்டாரில் களமிறங்கும் விக்ரம்! ஓடிடி ரிலீஸ் விவரம்!
மேலும், மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இரண்டு மாத காலமாக தேக்கி வைக்கப்பட்டுள்ள உளுந்து, பயிருக்கு தற்போது வரை தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டை முன் வைத்தனர். அதுமட்டுமின்றி, வியாபாரிகள் போராட்டத்தினால் பஞ்சு ஏலம் பாதிக்கப்படுவதாகவும், இதற்கு தக்க நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் எடுக்க வேண்டும் என அப்போது விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
US Women: கருக்கலைப்பு இல்லையா? இனி பாலுறவும் இல்லை - போராட்டத்தை கையில் எடுத்த பெண்கள்!
இதனிடையே மயிலாடுதுறை வட்டாரத்தை சேர்ந்த விவசாயி இராமலிங்கம் கூறுகையில், தற்போது விவசாயத்தில் உற்பத்தி விலை கூடி வருவதாகவும், அரசு விவசாயிகளுக்கு இலவசங்கள் தருவதை தவிர்க்க வேண்டும் என்றும், பல்வேறு தவறுகளுக்கு இலவசம் தான் காரணம் என்றும் குற்றம் சாட்டினார். லாபகரமான விலையில் விவசாய பொருட்களை அரசு விவசாயிகளுக்கு கொடுத்தால் மட்டும் போதுமானது என தெரிவித்தார்.
மேலும், தொடர்ந்து பேசிய விவசாயிகள், தற்போது மாவட்டத்தில் பெருமளவு பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு தண்ணீர் செல்கிறது. ஆனால், இன்னும் சில மாதங்களில் மழை காலம் தொடங்க உள்ள நிலையில் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் புதர்கள் மண்டி கிடக்கிறது. இதன் காரணமாக மழைக்காலங்களில் வயல்வெளிகளில் மழைநீர் தேங்கி பயிர்கள் நீரில் மூழ்கி பாழாகும் சூழல் உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் கருத்தில்கொண்டு மழை காலங்களில் வயல்வெளிகளில் தேங்கும் மழைநீர் வடிவதற்கு ஏதுவாக வடிகால் வாய்க்கால்களை விரைந்து தூர்வார நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவ்வாறு வடிகால் வாய்க்கால்கள் தூர்வார படாவிட்டால், கடந்த ஆண்டு போல பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகி விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்தனர். குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வேளாண்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்