மேலும் அறிய

விவசாயிகளுக்கு கௌரவ நிதி கட்..! நில விவரங்களை உடனே பதிய ஆட்சியர் உத்தரவு.. 

பி.எம். கிசான் கௌரவ நிதி தொடர்ந்து கிடைக்க நில உடைமை விவரங்களை உடனே பதிவு செய்ய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் விவசாயிகளை அறிவுறுத்தியுள்ளார். 

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் பிரதமரின் கிசான் கௌரவ நிதித் திட்டம் (PM-KISAN) மூலம் பயன்பெற்று வரும் விவசாயிகள், தங்களது நில உடைமை விவரங்களை உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறினால் அடுத்த தவணைத் தொகை வழங்கப்படமாட்டாது என்றும் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், விவசாயிகளுக்கு அறிவுத்தியுள்ளார். 

மத்திய அரசின் கௌரவ நிதித் திட்டம்

மத்திய அரசால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 'பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி' (PM-KISAN) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய், மூன்று சம தவணைகளாக தலா 2,000 ரூபாய் வீதம் அவர்களது வங்கித் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.

நில உடைமைப் பதிவு கட்டாயம்

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் தற்போது இத்திட்டத்தில் பயனடைந்து வரும் விவசாயிகளில் சிலர், தங்களது நில உடைமை (Land Records) தொடர்பான விவரங்களை இன்னும் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி, நிதி உதவி பெறும் அனைத்துப் பயனாளிகளும் தங்களது நிலப் பத்திர விவரங்கள் மற்றும் பட்டா தொடர்பான தகவல்களைத் திட்டத்தின் தரவுத்தளத்தில் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

"பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் நில உடைமைப் பதிவு செய்யாத விவசாயிகள், தங்கள் நில விவரங்களை உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யத் தவறும் விவசாயிகளுக்கு, அடுத்த தவணைக்கான நிதி உதவி வழங்கப்படமாட்டாது."

பதிவு செய்வது எப்படி?

விவசாயிகள் தங்கள் நில விவரங்களைப் பதிவு செய்ய அலைந்து திரிய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மாவட்ட நிர்வாகம் எளிய வழிமுறைகளை அறிவித்துள்ளது:

பொது சேவை மையங்கள் (e-Seva Centers): விவசாயிகள் தங்களுக்கு அருகிலுள்ள பொது சேவை மையங்களுக்குச் சென்று தங்களது நில ஆவணங்களைச் சமர்ப்பித்து ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யலாம்.

வேளாண் விரிவாக்க மையங்கள்: மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அந்தந்தப் பகுதி ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்களுக்குச் சென்றும் விவசாயிகள் உரிய ஆவணங்களை வழங்கிப் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

மானியத் திட்டங்களுக்கு அவசியம்

நில உடைமை விவரங்களைப் பதிவு செய்வதன் மூலம் கௌரவ நிதித் தொகை மட்டுமல்லாது, மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு வேளாண் மானியத் திட்டங்கள், இடுபொருள் உதவிகள் மற்றும் காப்பீட்டுத் திட்டங்களிலும் விவசாயிகள் தடையின்றிப் பயன்பெற முடியும். பதிவு செய்யப்பட்ட நில விவரங்கள் இருந்தால் மட்டுமே வருங்காலங்களில் அனைத்து அரசு நலத்திட்டங்களும் விவசாயிகளைச் சென்றடையும் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆட்சியரின் வேண்டுகோள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு விவசாயி கூட விடுபடக்கூடாது என்பதே மாவட்ட நிர்வாகத்தின் நோக்கம் எனத் தெரிவித்த ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அனைத்து விவசாயிகளும் உடனடியாகப் பதிவுகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மாவட்டத்தின் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியை முன்னிறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு விவசாயிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை நில விவரங்களைப் பதியாத விவசாயிகள், காலதாமதத்தைத் தவிர்த்து உடனடியாகச் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்பு கொள்ள வேண்டிய இடங்கள்

* வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்.

* கிராம நிர்வாக அலுவலர் (VAO) அலுவலகம்.

 * அருகிலுள்ள இ-சேவை மையங்கள்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஐந்தாயிரம் ரூபாய் தள்ளுபடி விவசாயிகளை கேலி செய்வதா?" - மயிலாடுதுறையில் தவெக அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்!
26 லட்சம் ஏக்கர் தரிசாகும் பேராபத்து: மேக்கேதாட்டு அணைக்கு எதிராக விழிக்குமா தமிழகம்?
26 லட்சம் ஏக்கர் தரிசாகும் பேராபத்து: மேக்கேதாட்டு அணைக்கு எதிராக விழிக்குமா தமிழகம்?
ரசாயன உரங்களுக்கு மாற்று என்ன? மயிலாடுதுறை விவசாயிகளுக்கு ஆட்சியர் சொல்லும் சீக்ரெட்!
ரசாயன உரங்களுக்கு மாற்று என்ன? மயிலாடுதுறை விவசாயிகளுக்கு ஆட்சியர் சொல்லும் சீக்ரெட்!
கண்ணீர் வடிக்கும் காவிரி டெல்டா: குறுவை சாகுபடி கைநழுவுகிறது; சம்பா சாகுபடியாவது தப்புமா?
கண்ணீர் வடிக்கும் காவிரி டெல்டா: குறுவை சாகுபடி கைநழுவுகிறது; சம்பா சாகுபடியாவது தப்புமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji Vs CBI: செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Embed widget