மேலும் அறிய

மதுரையில் நீர்வளத் துறையில் பாலம் அமைப்பதில் ஊழல் நடைபெறுவதாக கூறி.. முழங்கிய விவசாயிகள் !

பாலம் அமைக்கும் பணியில் பழைய ஷட்டர்களுக்கு பெயிண்ட் அடித்தும், சிமெண்ட் கூலை ஊற்றியும் முறைகேடு என  நீர்வளத் துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு.

மதுரையில் நீர்வளத் துறையில் பாலம் அமைப்பதில் ஊழல் நடைபெறுவதாக கூறி ஊழல் ஊழல் என முழங்கியபடி விவசாய குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த விவசாய சங்கத்தினரால் பரபரப்பு.

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணா தலைமையில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை, வேளாண்துறை, கூட்டுறவுத்துறை பொதுப்பணித்துறை, மின்சார துறை தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில் மதுரை மாவட்ட விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்கள் குறித்து விவாதித்தனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற அப்துல் கலாம் அறிவியல் விவசாய மக்கள் பாதுகாப்பு சங்கத்தினர் மதுரை மாவட்டத்தில் நீர்வளத்துறை சார்பில் பாலம் அமைப்பதில் பல்வேறு முறைகேடுகள்  நடைபெற்றுள்ளதாகவும் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என கூறி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

ஊழல் என்று முழக்கமிட்டபடி வெளிநடப்பு செய்தனர்.

மேலும் ஆவின் பால் பண்ணை முறைகேடு தொடர்பாக புகார் அளித்தால் புகார் அளிக்கும் பெண்ணுக்கு லாரி ஏற்றி கொன்று விடுவதாக மிரட்டல் வருவதாக கூறினர். இதனை தொடர்ந்து  நீர்வளத் துறையில் ஊழல் நடைபெறுவதை கண்டித்து தாங்கள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து  ஊழல் ஊழல் நீர்வளத் துறையில் ஊழல் என்று முழக்கமிட்டபடி வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாய மக்கள் பாதுகாப்பு சங்கம்

இது குறித்து பேசிய அப்துல் கலாம் அறிவியல் விவசாய மக்கள் பாதுகாப்பு சங்கம் மாநில தலைவர் ஆபேல்...," மதுரை  திருமங்கலம்  மற்றும் நிலையூர் பிரதான கால்வாய்களில் மேற்கொள்ளப்படும் நீர்வளத்துறை பாலம் அமைக்கும் பணிகளில் ஊழல் நடைபெறுவதாக புகார் அளித்த நிலையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதுரை மாவட்டம் ஏற்குடி - அச்சம்பத்து பகுதியில்  நீர் வழி வாய்க்காலின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பழைய ஷட்டர்களுக்கு பெயிண்ட் அடித்து சிமெண்ட் கூலை ஊற்றியும் பணிநடந்து முறைகேடுகள் நடந்துள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் துப்பாக்கி எடுத்து சுடவா முடியும் என விவசாயிகளிடம் கேள்வி எழுப்பியதாக குற்றம்சாட்டினர் எனவே அதிகாரிகள் மீது நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். எனவே மதுரை மாவட்டத்தில் நீர்வளத்துறை சார்பில் கண்மாய், ஓடை வரத்து கால்வாய்களில் குறுக்கே அமைக்கப்பட்ட பாலம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றார். மேலும் ஆவின்பால் முறைகேடு தொடர்பாக புகாரளித்தால் பால் பண்ணை உரிமையாளர்கள் மூலமாக கொலை மிரட்டல் வருகிறது" என பெண் விவசாயி தெரிவித்தார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

பழைய மின்மோட்டாரை மாற்றி 4-Star மின்மோட்டார் வாங்க அரசு மானியம்! உடனே விண்ணப்பியுங்கள்!
பழைய மின்மோட்டாரை மாற்றி 4-Star மின்மோட்டார் வாங்க அரசு மானியம்! உடனே விண்ணப்பியுங்கள்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!
தஞ்சாவூரின் வேளாண் பாரம்பரியம்... மண்ணையும், உணவையும், உடல்நலத்தையும் காக்கும் இயற்கை விவசாயம்!
தஞ்சாவூரின் வேளாண் பாரம்பரியம்... மண்ணையும், உணவையும், உடல்நலத்தையும் காக்கும் இயற்கை விவசாயம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Embed widget