கரூர்: மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
டெல்டா பாசன பகுதிகளுக்கும், குறுவை சாகுபடிக்காக காவிரி ஆற்றில் இருந்து ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 925 கன அடி தண்ணீரும், நான்கு பாசன கிளை வாய்க்காலில் 1020 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
மாயனூர் கதவனைக்கு 1.24 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் அதிக அளவில் மழை பெய்து கொண்டிருப்பதால் சேலம் மேட்டூர் அணை நிரம்பி வழிகிறது. இந்நிலையில் மேட்டூர் கதவணையில் இருந்து காவிரி ஆற்று பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டம் , மாயனூர் கதவனைக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் தற்பொழுது வந்து கொண்டிருக்கிறது.
மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து 1.24 லட்சம் கன அடியை தாண்டியது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணை நேற்று நிலவரப்படி ஒரு லட்சத்து 896 கன அடி தண்ணீர் வந்தது. இந்நிலையில் இன்று மாயனூர் கதவனைக்கு ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 945 கனடியாக அதிகரித்து உள்ளது. டெல்டா பாசன பகுதிகளுக்கும், குறுவை சாகுபடிக்காக காவிரி ஆற்றில் இருந்து ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 925 கன அடி தண்ணீரும், நான்கு பாசன கிளை வாய்க்காலில் 1020 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதே நிலையில் கரூர் மாவட்டத்தில் பாயும் அமராவதி அணை நிலவரத்தை காணலாம். திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு வினாடிக்கு 1,872 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு 1,367 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில் 418 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் தற்போது 88.46 கன அடியாக இருக்கிறது.
அதேபோல் நங்காஞ்சி அணையில் நிலவரத்தை தற்போது காணலாம். திண்டுக்கல் மாவட்டம், வடகாடு பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது 34 அடியாக உள்ளது். நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ஆத்துப்பாளையம் அணை நிலவரம்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு 140 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், தற்போது 5.57 அடியாக இருந்ததால் நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கரூர் மாவட்டத்தில் சில இடங்களில் சாரல் மழை பெய்துள்ளது. எனினும், மாவட்டம் முழுவதும் குறிப்பிட்ட அளவில் மழை பெய்யாததால் நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு இல்லாமல் போனது.
இந்நிலையில் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் கனமழை காரணமாக மேட்டூர் மற்றும் அமராவதி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வந்தால், மீண்டும் மாயனூர் கதவனைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்