kanchipuram: ஜூலை மாதம் காஞ்சியில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் இல்லை - வெளியான அறிவிப்பு
வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் வல்லுநர்கள் மற்றும் அனைத்துதுறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.
விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
காஞ்சிபுரம் ( Kanchipuram News ): காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஜூலை 2023 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 03.08.2023 (வியாழக்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்விமோகன் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் வல்லுநர்கள் மற்றும் அனைத்துதுறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். ஆகவே, விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
13 வது தவணைத் தொகையினை பெறும் பொருட்டு
பி.எம். கிசான் திட்டத்தில் அடுத்துவிடுவிக்கப்பட உள்ள 13 வது தவணைத்தொகையினை பெறும் பொருட்டு அனைவரும் e-kyc மூலம் பி.எம். கிசான் கணக்கினை புதுப்பிக்க வேண்டும். பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை கீழ்க்காணும் முறைகளில் உறுதி செய்து கொள்ளலாம். ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை (one time password) பி.எம்.கிசான் இணையதளத்தில் பதிவு செய்து உறுதி செய்யலாம் அல்லது பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை பதிவு செய்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதிசெய்யலாம். உங்களது கைபேசியில் வைத்து உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி, http://pmkisan.gov.in எனும் இணையதளத்தில் சென்று ஆதார் e-KYC எனும் பக்கத்திற்கு சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். எனவே, பி.எம்.கிசான் தவணை தொகை பெறும் பயனாளிகள் இதுநாள் வரை ஆதார் எண்ணை உறுதிசெய்யாமல் இருந்தால் மேற்காணும் முறைகளில் பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்திடுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டார்.
வேளாண் சங்கமம் 2023
மேலும், மாவட்ட வேளாண் அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பெருமளவில் திருச்சி, கேர் பொறியியல் கல்லூரியில் 27.07.2023 முதல் 29.07.2023 வரை நடைபெற உள்ள வேளாண் சங்கமம் 2023 (வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு) - ல் கலந்துகொள்ள உள்ளதால் ஜூலை 2023 மாதத்திற்கான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 03.08.2023 (வியாழக்கிழமை) அன்று நடைபெறும் என மாவட்ட ஆட்சிதலைவர் கலைச்செல்விமோகன் தெரிவித்துள்ளார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்