மேலும் அறிய
நம்ம ஊர் எம்.எல்.ஏ.,வா இது..? நெல் அறுவடை இயந்திரத்தை சிறப்பாக இயக்கிய பெண் எம்.எல்.ஏ., நெகிழ்ச்சி !
நெல் அறுவடை வயல்வெளியில் இறங்கிய மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி – அறுவடை இயந்திரத்தை இயக்கி ஆச்சரியம்.

நெல் அறுவடை இந்திரத்தை இயக்கும் எம்.எல்.ஏ
Source : whatsapp
பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சம வாய்ப்புடன் முன்னேற வேண்டும் என பல்வேறு மேடைகளில் தொடர்ந்து வலியுறுத்தி வரும் எம்எல்ஏ தமிழரசி, அதனை செயலில் காட்டும் வகையில் விவசாயத் துறையிலும் நேரடியாக ஈடுபட்டது குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.
பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்ற எம்.எல்.ஏ.,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏ தமிழரசி, இன்று மானாமதுரையிலிருந்து இளையான்குடி அருகே நடைபெற்ற பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, திருவேங்கடம் கிராமப் பகுதியில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருவதை கவனித்த அவர், திடீரென தனது வாகனத்தில் இருந்து இறங்கி, அந்தச் சாலையோரம் அமைந்துள்ள வயல்வெளியில் நடைபெற்று வந்த அறுவடை பணிகளை நேரில் பார்வையிட்டார்.
நெல் அறுவடை பணிகளில் நேரடியாக ஈடுபட்டார்
இதனைத் தொடர்ந்து வயல்வெளிக்குள் இறங்கிய எம்எல்ஏ தமிழரசி, கதிரறுக்கும் அறுவடை இயந்திரத்தின் மீது ஏறி, அதனை இயக்கி நெல் அறுவடை பணிகளில் நேரடியாக ஈடுபட்டார். அவரது இந்த எதிர்பாராத செயல்பாடு அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சம வாய்ப்புடன் முன்னேற வேண்டும் என பல்வேறு மேடைகளில் தொடர்ந்து வலியுறுத்தி வரும் எம்எல்ஏ தமிழரசி, அதனை செயலில் காட்டும் வகையில் விவசாயத் துறையிலும் நேரடியாக ஈடுபட்டது குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















