மேலும் அறிய

வடகிழக்கு பருவமழை காலத்தில் நெற் பயிர்கள் மூழ்காமல் பாதுகாப்பது எப்படி?

பல்வேறு வழிமுறைகளை பின்பற்றினால் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்களை பாதுகாக்க முடியும். தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் வடிகால் வசதியை அதிகப்படுத்தி நெற் பயிரானது மூழ்காத அளவு தண்ணீரை வெளியேற்ற வேண்டும்.

வடகிழக்கு பருவமழை காலத்தில் நெல் பயிர்கள் மூழ்காமல் பாதுகாப்பது எப்படி? என்பது குறித்து கரூர் கலெக்டர் பிரபு சங்கர் விளக்கமளித்துள்ளார்.

 


வடகிழக்கு பருவமழை காலத்தில் நெற் பயிர்கள் மூழ்காமல் பாதுகாப்பது எப்படி?

கரூர், மழைக்காலங்களில் நெற்பயிரை காக்கும் வழிமுறைகள் குறித்து கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

வடகிழக்கு பருவமழை காலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பள்ளக்கால் பகுதிகள் அல்லது வடிகால் வசதி இல்லாத நிலங்களில் தண்ணீர் தேங்கி, சம்பா, தாளடி பருவங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பல்வேறு நிலையில் உள்ள நெற்பயர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பல்வேறு வழிமுறைகளை பின்பற்றினால் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்களை பாதுகாக்க முடியும். தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் வடிகால் வசதியை அதிகப்படுத்தி நெற் பயிரானது மூழ்காத அளவு தண்ணீரை வெளியேற்ற வேண்டும். அதனால், வேர்ப்பகுதிகளில் பகுதிகளில் நல்ல காற்றோட்டம் உண்டாகும்.

இளம் நெற்பயிர்களானது கரைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே, அவ்வாறான சமயங்களில் அதேரகம் மற்றும் வயதுடைய நாற்றுக்களை கரைந்து போன இடங்களில் மீண்டும் நடவு செய்து பயிர் எண்ணிக்கையை சரியாக பராமரிக்க வேண்டும். சற்று வயதான நெற்பயிராக இருந்தால், வயலில் அதிக துளிர்கள் இருக்கும் குத்திலிருந்து சில துளிர்களை பிடுங்கி கரைந்து போன இடங்களில் நட்டு பயிர் எண்ணிக்கையை சரியாக பராமரிக்க வேண்டும். தண்ணீர் தேங்கிய நிலையில், நெற்பயிருக்கு பிராண வாயு சரிவர கிடைக்காமல் வேர்களின் சுவாச இயக்கம் பாதிக்கப்படும். பிராண வாயு பயிருக்கு கிடைக்காமல் போவதால் அதனை சார்ந்த நுண்ணியர்களின் செயல்பாடுகள் குறைந்து விடும் அல்லது நின்று விடும்.


வடகிழக்கு பருவமழை காலத்தில் நெற் பயிர்கள் மூழ்காமல் பாதுகாப்பது எப்படி?

மண் அதிகம் குளிர்ந்து விடுவதால் இயற்கையாக மண்ணில் காணப்படும் வெப்பம் குறைந்து மண் மீண்டும் வெப்பமடைய கால அவகாசம் எடுத்துக் கொள்ளும். இந்த குளிர்ந்த நிலையில், மணிச்சத்து, சாம்பல் சத்து, தாமிரச்சத்துகளை பயிர் எடுத்துக் கொள்ளும் அளவு குறைந்து விடுவதால் உண்டாகும் பற்றாக்குறையினால் நெற்பயிரின் வளர்ச்சி தடைப்படும்.மழைநீர் வடியும் போது நீருடன் மண்ணில் உள்ள தலைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, போறான், சுண்ணாம்பு மற்றும் மாங்கனிசு சத்துக்களின் கறைதிறன் அதிகமாகி தண்ணீரோடு வெளியேறிவிடும். இதனால், நெற்பயிர்களுக்கு வேண்டிய ஊட்டச்சத்து சரிவர கிடைப்பதில் தடை ஏற்படும்.

குளிர்ச்சியான வெப்ப நிலையில், அங்க பொருட்கள் பதனம் மாற்றம் மாறி சத்துக்களாக உருமாற்றுவது பாதிக்கப்படுவதால் பயிருக்கு கந்தகசத்து பற்றாக்குறை ஏற்பட்டு, பயிரின் தோகைகள் மற்றும் மஞ்சள் நிறமாக மாறி காணப்படும்.மண்ணில் இரும்புச்சத்து அதிகமாகி மாங்கனிசு சத்து குறைந்து இலைகளின் விகிதாசாரம் பாதிக்கப்பட்டு இருப்பின் அதிக அதிகமாவதால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். மாங்கனிசு சத்தின் பற்றாக்குறையால் இளைப்புள்ள நோய்கள் உண்டாகும்.


வடகிழக்கு பருவமழை காலத்தில் நெற் பயிர்கள் மூழ்காமல் பாதுகாப்பது எப்படி?

வெள்ள நீர் வடிந்தவுடன் தழைச்சத்து உரத்தை அம்மோனியா வடிவில் இடவேண்டும். அதற்கு யூரியாவை நேரடியாக பயிருக்கு அளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 22 கிலோ யூரியா உடன் 18 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து 1 நாள் இரவு வைத்திருந்து. மறு நாள் இதனுடன் 17 குழு மூரியேட் பொட்டாசியம் கலந்து வயலில் சீராக இடவேண்டும்.
நுண்ணுட்ட உரகலவையையும் மேலூர் ஆக தெளிக்க வேண்டும். இலை வலி உரமாக அளிக்க வேண்டும். 

எனில், ஒரு ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன் 1 கிலோ ஜிக்சல் பேட்டை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை இருந்து மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும். அல்லது மணிச்சத்தை ஏடிபி உரத்தின் மூலமாக 2 சதவீத அளவில் தெளிக்க வேண்டும். அதாவது ஒரு ஏக்கருக்கு 4 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

கத்தரிக்காய் விவசாயிகள் கவனத்திற்கு! தண்டு, காய்த்துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?
கத்தரிக்காய் விவசாயிகள் கவனத்திற்கு! தண்டு, காய்த்துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?
கரும்பு அரவை பாதாளத்துக்கு சரிவு! தஞ்சாவூர் விவசாயிகள் சொல்வது என்ன?
கரும்பு அரவை பாதாளத்துக்கு சரிவு! தஞ்சாவூர் விவசாயிகள் சொல்வது என்ன?
சம்பா சாகுபடி செய்துள்ளீர்களா? நவம்பர் 15-க்குள் இந்த ஒரு வேலையை முடிக்காவிட்டால் இழப்பீடு கிடைக்காது!
சம்பா சாகுபடி செய்துள்ளீர்களா? நவம்பர் 15-க்குள் இந்த ஒரு வேலையை முடிக்காவிட்டால் இழப்பீடு கிடைக்காது!
திருவோணம் வட்டாரத்தில் மானியத்தில் எண்ணெய் பனை சாகுபடி: தோட்டக்கலை உதவி இயக்குநர் தகவல்
திருவோணம் வட்டாரத்தில் மானியத்தில் எண்ணெய் பனை சாகுபடி: தோட்டக்கலை உதவி இயக்குநர் தகவல்

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
Embed widget