மேலும் அறிய

விவசாயிகளே மானியத்தில் பவர்டில்லர், பவர்வீடர் பெறுவது எப்படி ? என்னென்ன தகுதிகள் வேண்டும் ?

தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் பவர்டில்லர் மற்றும் விசைக்களை எடுக்கும் கருவி (பவர்வீடர்) பெறுவது எப்படி?

தமிழ்நாடு அரசு, வேளாண் உற்பத்தியையும், விவசாயிகளின் நிகர வருமானத்தையும் அதிகரித்திட வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண்  இயந்திர மயமாக்குதலுக்கான துணை இயக்கத் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படுவதோடு, குறித்த காலத்தில் பயிர்சாகுபடி செய்திடவும் வழிவகுக்கப்படுகிறது.

 பவர்வீடர்

நடப்பு 2024-25 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் அறிவித்தவாறு தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர்டில்லர் 4000 எண்கள், விசைக்களையெடுக்கும் கருவி ( பவர்வீடர் ) 4000 எண்கள் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர்டில்லர் பெற அதிகபட்சமாக ரூ.1.20 இலட்சம், விசைக் களையெடுப்பான்களுக்கு அதிகபட்சமாக ரூ.63 ஆயிரம் அல்லது கருவியின் மொத்த விலையில் 50 சதவிகிதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை சிறு, குறு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதர விவசாயிகளுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச விலை அல்லது மொத்த விலையில் 40 சதவிகிதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

யார் யாருக்கு கூடுதல் மானியம் ?

மேலும், இத்திட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு அவர்களின் பங்களிப்புத் தொகையினை குறைத்து உதவிடும் வகையில் நடைமுறையில் உள்ள மானியத்துடன் 20 சதவீத கூடுதல் மானியம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

மானியம் கிடைப்பது எப்படி ?

ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு பவர்டில்லர்கள் வாங்கிட 20 சதவிகித கூடுதல் மானியமாக ரூ.48000/-ம், விசைக்களை எடுக்கும் கருவி வாங்கிட கூடுதல் மானியமாக ரூ.25,200/-ம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே பவர்டில்லர்கள் வாங்கிட அதிகபட்சமாக ரூ.1,68,000/-ம், விசைக்களை எடுக்கும் கருவி வாங்கிட அதிகப்பட்சமாக ரூ.88,200/-ம் வரை மானியம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

உதாரணமாக பவர்டில்லரின் மொத்த விலை தோராயமாக ரூ.2,40,000/- எனில் ரூ.1,68,000/- மானியம் போக மீதி விவசாயிகளின் பங்களிப்பாக ரூ.72,000/- மட்டும் செலுத்தினால் போதும், விசைக்களை எடுக்கும் கருவியின் மொத்த விலை தோராயமாகரூ.1,30,000/- எனில் ரூ.88,200/- மானியம் போக மீதி விவசாயிகளின் பங்களிப்பாக ரூ.41,800/- மட்டும் செலுத்தினால் போதும், மேலும் இம்மானியத் தொகையானது இயந்திரங்களின் மொத்த விலைக்கு தகுந்தவாறு மாறுபடும்.

பொதுப் பிரிவை சார்ந்தவர்கள் பயன் அடைவது எப்படி ?

பொதுபிரிவைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு நடைமுறையில் உள்ள மானியத்துடன் 10 சதவீத கூடுதல் மானியம் அதிகபட்சமாக ரூ.12,600/- விசைக்களை எடுக்கும் கருவி வழங்கப்படுகிறது. எனவே ஒட்டுமொத்தமாக விசைக்களை எடுக்கும் கருவி வாங்கிட அதிகபட்சமாக ரூ.75,600/- வரை மானியம் பொதுபிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. உதாரணமாக விசைக்களை எடுக்கும் கருவியின் மொத்த விலை தோரயமாக ரூ.80,000/- எனில்ரூ.48,000/- மானியம் போக மீதி விவசாயிகளின் பங்களிப்பாக ரூ.32,000/- மட்டும் செலுத்தினால் போதும். மேலும் இம்மானியத்தொகையானது இயந்திரங்களின் மொத்தவிலைக்கு தகுந்தவாறு மாறுபடும்.

எப்படி பங்களிக்க வேண்டும் ?

விவசாயிகள் தங்களின் பங்களிப்பு தொகையினை இணையவழி (RTGS/NEFT) அல்லது வங்கிவரைவோலை மூலமாகவோ சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கோ அல்லது விநியோகஸ்தருக்கோ அல்லது முகவருக்கோ செலுத்திபவர் டில்லர், விசைக் களைஎடுக்கும் கருவி போன்ற வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றுக் கொள்ளலாம். 

உதவிக்கு தொடர்பு கொள்ள :

செயற்பொறியாளர் (வே.பொ),வேளாண்மைப்பொறியியல்துறை,487 அண்ணாசாலை, நந்தனம், சென்னை -35.அலைபேசிஎண் 944073322

உதவி செயற்பொறியாளர்(வே.பொ)

வேளாண்மைப்பொறியியல்துறை,487 அண்ணாசாலை, நந்தனம், சென்னை -35. அலைபேசிஎண் 944318854

உதவிசெயற்பொறியாளர்(வே.பொ), வேளாண்மைப்பொறியியல்துறை,

மதுராந்தகம் இருப்பு (சிலாவட்டம்)

அலைபேசிஎண் 9003090440

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்
கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget