மேலும் அறிய
Advertisement
Dharmapuri: சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 3.30 லட்சம் கரும்பு அரவை செய்ய இலக்கு
கரும்பு பயிர்கள் செய்து இதனால் வரை செய்யாமல் இருக்கும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட கோட்ட அலுவலகங்கள் அல்லது பிரிவு கரும்பு உதவியாளர்களுக்கு அணுகி இன்றைக்குள் 31-ஆம் தேதி பதிவு செய்து
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான கரும்பு அரவை வரும் நவம்பர் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளது .
3.30 லட்சம் டன் அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோபாலபுரத்தில் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 4.150 கரும்பு விவசாயிகள் பதிவு செய்து உறுப்பினர்களாக உள்ளனர். ஒவ்வொரு அரவை பருவத்திலும் 4.5 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக போதிய அளவிற்கு பருவ மழை பெய்யாததால் கரும்பு சாகுபடி பரப்பும் அதிகரித்தது. இதனால் சர்க்கரை ஆலைக்கு பதிவு கரும்பு வரத்து அதிகரித்தது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி கடந்த மே மாதம் வரை அரவைப்பணி நடைபெற்றது.
இதில் மொத்தம் 3.58 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது. கரும்பு அரவை பிரித்திறன் 10.91 சதவீதமாக இருந்தது. ஒரு டன் கரும்புக்கு 109 கிலோ சர்க்கரை எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு அரவையின் மூலம் சுமார் 3.90 லட்சம் குவின்டால் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது இதனை அடுத்து விவசாயிகளுக்கு ஈவுத்தொகை வழங்க ஆலை நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக 3.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பங்குதாரர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பாண்டிற்கான 2023-2024 கரும்பு அரவை வரும் நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்குகிறது. இதற்காக சுமார் 9.611 ஏக்கரில் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. 3.30 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
பாப்பிரெட்டிப்பட்டி கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான கரும்பு அரவை வரும் நவம்பர் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளது. 3.30 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 10.95 சதவீதமாக இருக்கும். இதன் மூலம் சர்க்கரை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆலைக்கு கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ள விவசாயிகள் கோட்ட வாரியான வயல் வாரி பட்டியல் மற்றும் கரும்பு வெட்டும் முன்னுரிமை பட்டியல் தயாரிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த ஆலைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள எல்லைப் பகுதி மற்றும் பொது எல்லை பகுதிகளில் கரும்பு பயிர்கள் செய்து இதனால் வரை செய்யாமல் இருக்கும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட கோட்ட அலுவலகங்கள் அல்லது பிரிவு கரும்பு உதவியாளர்களுக்கு அணுகி இன்றைக்குள் 31-ஆம் தேதி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion