மேலும் அறிய
Advertisement
வத்தல்மலையில் கடுகு சாகுபடி அமோகம் - ரம்மியமாக காட்சியளித்து பூத்துக் குலுங்கும் பூக்கள்
வத்தல்மலை கிராமத்தில் போக்குவரத்து வசதி குறைவாக இருப்பதால், நேரடியாக வியாபாரிகள், மலை மீதே வந்து கடுகை கொள்முதல் செய்து கொள்கின்றனர்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த வத்தல்மலை கிராமத்தில் வத்தல்மலை, பெரியூர், சின்னாங்காடு, கொட்லாங்காடு, பால் சிலம்பு உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த வத்தல்மலை கிராமம் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்று முற்றிலுமாக குளிர் பிரதேசமானது. இங்கு மழை பிரதேசங்களில் விளைகின்ற பயிர்கள் மட்டுமே அதிகமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் சில்வர் வோக் மரம், காப்பி, மிளகு மற்றும் ராகி, கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். மலைப் பிரதேசம் என்பதால் எப்பொழுதும் குளிர்ந்த சூழல் நிலவி வருவதால், விவசாயம் செய்வதற்கு ஏற்ற சூழல் ஆண்டு முழுவதும் நிலவி வருகிறது. இங்கு அதிகப்படியாக சிறுதானியங்கள் விளைவிக்கப்பட்டு, மதிப்புக்கூட்டி விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆண்டுதோறும் ஆனி மாதங்களில் கேழ்வரகு பயிர் செய்யும் பொழுது, கேழ்வரகுடன், கடுகு கலந்து ஊடுபயிராக சாகுபடி செய்து வருகின்றனர். தொடர்ந்து மூன்று மாத கால பயிராக உள்ள கடுகு, கேழ்வரகு அறுவடை வருவதற்கு முன்பாகவே அறுவடைக்கு வருகிறது. தற்பொழுது கேழ்வரகில் ஊடுபயிராக உள்ள கடுகு நல்ல விளைச்சல் அடைந்துள்ளது. இந்த ஆண்டு கடுகு நல்ல விளைச்சல் அடைந்து வரும் நிலையில், கடுகு பூக்கள் பூத்து மஞ்சள் நிறத்தில் பார்ப்பதற்கு ரம்மியமாக பூத்துக் குலுங்கி காட்சியளிக்கிறது. மேலும் இன்னும் 10 நாட்களில் கடுகு அறுவடைக்கு வர உள்ளது. இங்குள்ள விவசாயிகள் கடுகு அறுவடை செய்து கிலோ 150 ரூபாய் முதல் 200 வரை விற்பனை செய்கின்றனர். வத்தல்மலை கிராமத்தில் போக்குவரத்து வசதி குறைவாக இருப்பதால், நேரடியாக வியாபாரிகள், மலை மீதே வந்து கடுகை கொள்முதல் செய்து கொள்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு வருமானம் இரட்டிப்பாக கிடைப்பதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் மலை மீதுள்ள விவசாயிகள் விளைகின்ற விளைபொருட்களை கீழே விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்தால், அதைவிட அதிக வருவாய் கிடைக்கும். ஆனால் போக்குவரத்து வசதி இல்லாததால், மலை மீது வரும் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். தற்பொழுது தொடர் மழை பெய்து வருவதால் கடுகு விளைச்சல் அமோகமாக இருந்து வருகிறது. மேலும் மஞ்சள் நிறத்தில் கண்களை கவரும் வகையில் உள்ள கடுகு பூக்களில், தேனீக்கள் சூழ்ந்து, மது எடுத்து வருகிறது. மேலும் மலை முழுவதும் கடுகு பூக்கள் பூத்து குலுங்குவது வத்தல் மலைக்கு வரும் மக்கள் கடுகு பூக்களின் நடுவே நின்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion