சாகுபடி செய்யப்பட்டபோது 50 ஆயிரம் ஏக்கர், இப்போது ஒரே 50 ஆயிரம் ஏக்கர்- மழையால் பாழான சம்பா பயிர்கள்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா சாகுபடி 50 ஆயிரம் ஏக்கரும், 25 ஆயிரம் ஏக்கர் உளுந்து, பயிர்களும் முற்றிலும் சேதமடைந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நடவு செய்யப்பட்டு, தற்போது அறுவடை பணி முழு வீட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையால் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், வள்ளுவக்குடி, குத்தாலம், மங்கை நல்லூர், கொண்டல், தேனூர், அகணி, குன்னம், மாதானம், வடபாதி உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் சம்பா சாகுபடி செய்யப்பட்ட சுமார் எழுபதாயிரம் ஏக்கரில், அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா சாகுபடி நெற்பயிர்கள் மழையில் நனைந்து சாய்ந்து தண்ணீரில் மூழ்கி வீணாகியுள்ளது. மேலும், ஊடுபயிராக பயிரிட்ட உளுந்து, பயிர் செடிகளும் முற்றிலும் தண்ணீரில் மூழ்கி அழுகியுள்ளன.
மேலும், இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் கூறுகையில், கடந்த நவம்பர் 11-ம் தேதி பெய்த அதீத கனமழையால் பயிர்கள் பெருமளவு பாதித்த நிலையில், அதிலிருந்து தப்பித்து ஓரளவு காப்பாற்றிய நெற்பயிர் தற்போது முற்றிலும் அழிந்துள்ளது. நெல்லில் ஊடுபயிராக உளுந்து, பயிர் செடிகளும் சேர்ந்து அழிந்துள்ளதால், விவசாயிகளுக்கு அரசு முழமையாக நிவாரணம் வழங்கி தங்களது வாழ்வாதாரத்தை காக்க முழு மானியத்துடன் ஏக்கருக்கு 5 கிலோ உளுந்து, பயிர் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி சீர்காழி தாலுக்கா முழுவதும் நவம்பர் மாதம் பெய்த மழையால் அழிவை சந்தித்தும், பயிர் காப்பீடு தொகை 17 கிராமங்களுக்கு விடுபட்டுள்ளதாகவும், ஆகையால், தமிழ்நாடு அரசு தனி கவனம் செலுத்தி விடுப்பட்ட கிராமங்களுக்கு பயிர் காப்பீடு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். மேலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் கவலை அடைந்துள்ள விவசாயிகள், தற்போது பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கிடு செய்து விளைநிலங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Viral video: ரசிகருக்கு ப்ரபோஸ் செய்த ராஷ்மிகா..! அப்போ விஜய் தேவரகொண்டா கதி..? வைரலாகும் வீடியோ
இந்நிலையில் வில்லியநல்லூர் கிராமத்தில் மாவட்ட வேளாண் துறையினை இயக்குனர் சேகர் தலைமையில், மழையால் வயலில் சாய்ந்த பயிர்களை வேளாண்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். மழை முடிவடைந்தால் மட்டுமே சேத விபரம் முழுமையாக தெரியவரும் எனவும், பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கீடு செய்யப்பட்டு அரசுக்கு தெரிவிக்கப்படும் என வேளாண்துறை இணை இயக்குனர் சேகர் தெரிவித்துள்ளார்.