Vinesh Phogat| ’’பெண்களுக்கு இது ஒரு பாடம்’’பாஜக MP சர்ச்சை கருத்து
மல்யுத்த வீரர் வினேஷ் போகத்தின் எடை குறித்த எம்பி ஹேமமாலினியின் கருத்துக்கு தற்போது கண்டனங்கள் வலுத்து வருகிறது..
பாரீஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தினார் வினேஷ் போகத். காலிறுயிதியில் நம்பர் 1 வீராங்கனையான ஜப்பானை சேர்ந்த யூயி சசாகியை வீழ்த்தி சாதித்து காட்டினார். இதனால ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு உறுதியாகியுள்ளதை பலரும் கொண்டாடினர்.
இந்தநிலையில் அவர் மல்யுத்தப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 50 கிலோ எடைப்பிரிவில் போட்டியிடும் அவர், 150 கிராம் எடை அதிகமாக உள்ளதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வினேஷ் போகத்தின் தகுதிநீக்கம் இந்தியர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது..
வினேஷ் போகட் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் யுனைடெட் வேர்ல்ட் மல்யுத்தத்திடம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்க்கை எடுக்குமாறு ஐஓஏ தலைவர் பி டி உஷாவிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வினேஷ் போகத்தின் தகுதிநீக்கம் குறித்து பாஜக எம்பி ஹேமமாலினி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,
100 கிராம் எடை அதிகமாக இருந்ததற்காக வினேஷ்
தகுதி நீக்கம் செய்யப்பட்டது விசித்திரமாக உள்ளது
எடையை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம்
இது நம் அனைவருக்கும் ஒரு பாடம்
அவர் அந்த 100 கிராம் விரைவில் இழக்க வேண்டும்
ஆனாலும் அவர்க்கு வாய்ப்பு மீண்டும் கிடைக்காது
வினேஷ் போகட் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டது வருத்தமளிக்கிறது
என ஹேமமாலினி பேசியுள்ளார்.
வினேஷ் போகத்தின் எடை குறித்து ஹேமமாலினி இவ்வாறு பேசியுள்ளது சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பிய நிலையில், நெட்டிசன்கள் ஹேமமாலினிக்கு பலத்த கணடனம் தெரிவித்து வருகின்றனர்.
![Vinesh phogat on PT Usha | ”பாஜகவின் அரசியல்” ஒலிம்பிக்கில் நடந்தது என்ன? வினேஷ் போகத் பகீர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/11/38c4cbe367e6c11fbf4f1f2535fb31aa1726075330504200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
![Vinesh Phogat | ஓய்வை திரும்பப் பெறுகிறாரா? விரக்தியில் வினேஷ் போகத்”கலைந்த ஒலிம்பிக் கனவு!”](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/17/a52276db0e3de54376985f976ad911561723878138646200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![India in olympics 2024 : ”6 பதக்கம்.. 470 கோடியா! செவ்வாய்கே போயிருக்கலாம்” ரசிகர்கள் கடும் கோபம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/16/ac1fb9f5b63c1f0f3d1438b2096015ed1723816081519200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![Aman Sehrawat | எப்புட்றா..! 10 மணி நேரத்தில் 4.6 கிலோ எடை குறைப்பு!அமன் ஷெராவத் புதிய வரலாறு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/10/366d856e81aa7044684b9731f943baf81723284098751200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![Arshad Nadeem Story | ஈட்டி வாங்க கூட காசு இல்ல!பாகிஸ்தானின் தங்க மகன் யார் இந்த அர்ஷத் நதீம்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/09/8fbc88f45f760c7ba99067dcc3c133f41723215775822200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)