மேலும் அறிய

Young Nattamai : 427 மலை கிராமங்களுக்கு.. தீர்ப்பளிக்கும் 9 வயது சிறுவன்..! Tiruvannamalai | Tribe people |

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது.திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் இதில் ஜவ்வாது மலையில் 427 மலை கிராமங்கள் 36 கிராமங்களாக ஆக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மலை கிராமங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இதில் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு நாட்டாமை, ஒரு ஊர் கவுண்டர், மூப்பன் ஆகிய மூவர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள்தான் கிராமத்தில் ஏற்படும் சொத்து தகராறு குடும்பத்தகராறு மற்றும் திருமணங்கள் உள்ளிட்டவைகளை பேசி சுமூகமாக தீர்வு செய்யப்படுவார்கள்.

மலைவாழ் மக்களிடையே திருமணம் என்றால் மலையில் உள்ள 427 மலை கிராமங்களில் உள்ள மக்களும் திருமணம் என்பது தலைமை நாட்டாமை , முன்னாள் மணமகன் மணமகள் குறித்து இனம் மற்றும் வயது அவர்களது பூர்வீகம் குறித்து விசாரித்த பின்னரே தலைமை நாட்டாமை முன்னிலையில் அவர் கைகளால் தாலி எடுத்து கொடுத்து திருமணம் நடைபெறுவது வழக்கம். திருமணத்திற்கு முன்பு மனமகனை நிச்சயம் செய்த பெண் வீட்டிற்கு 10 நாட்கள் வரை சென்று வரவேண்டும் அதனைத்தொடர்ந்து ஊர் திருவிழா என்றால் தலைமை நாட்டாமை தான் முடிவு செய்ய வேண்டும். மலைவாழ் கிராமங்களில் நாட்டாமை உத்தரவுபடி தான் கிராம மக்கள் நடந்து கொள்வார்கள். இந்நிலையில் மலைவாழ் மக்களுக்கு இடையே ஏற்படும் குடும்ப தகராறு சொத்து தகராறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தலைமை நாட்டாமை முன்னிலையில் தான் ஊர் நாட்டாமைகள் பேசி சுமூகமாக தீர்த்து வைப்பார்கள். ஜவ்வாது மலை வாழ் மக்களின் வாழ்வியல் முறையில் நாட்டாமை மற்றும் தலைமை நாட்டாமை என்பது ஒரு முக்கிய பொறுப்பாகும். அவரின் உத்தரவுப்படியே மலைவாழ் மக்கள் அனைவரும் செயல்படுவார்கள். ஜவ்வாது மலையிலுள்ள மலை கிராமங்களில் தலைமை நாட்டாமையாக மல்லிமடு கிராமத்தை சேர்ந்த 87 வயதான சின்னாண்டி என்பவர் கடந்த 80 ஆண்டுகாலமாக இந்த பதவியை வகித்து வந்தார்.

கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பாக உடல் சரியில்லாமல் தலைமை நாட்டாமை இறந்துவிட்டார். அதனைத்தொடர்ந்து சென்ற 1 ஆண்டு காலமாக தலைமை நாட்டாமை பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த 36 ஊர் நாட்டாமைகள் 36 ஊர் கவுண்டர்கள் 36 மூப்பன்கள் ஆகியோர் ஒன்றிணைந்து மலைவாழ் மக்களின் தெய்வ நம்பிக்கையின் படி இறந்துபோன சின்னாண்டியிடம் சிறப்பு பூஜை செய்து வழிபட்டு செய்தும் அடுத்த தலைமை நாட்டாமை யாரென்று தேர்வு செய்யும் நிகழ்வு நடைபெற்றது. தலைமை நாட்டாமையான சின்னாண்டிக்கு முத்துசாமி, வெள்ளை கண்ணன், பெருமாள் மற்றும் 3 பெண்கள் உள்ளிட்ட வாரிசுகள் உள்ளனர் இதில் சக்திவேல் உள்ளிட்ட ஆண் பெண் என 21 பேரக்குழந்தைகளும் உள்ளனர். மலைவாழ் மக்களின் தெய்வ நம்பிக்கை படி தெய்வ வாக்கு படி சின்னாண்டி இரண்டாவது மகன் முத்துசாமியின் 9 வயதான பேரன் சக்திவேல் அடுத்த தலைமை நாட்டாமை ஆக நியமிக்க வேண்டும் என தெய்வ வாக்கு கூறியதால் அதனை ஏற்ற ஊர் கவுண்டர்கள், ஊர் நாட்டாமைகள் , ஊர் மக்கள் அனைவரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். இறந்துபோன நாட்டாமையின் வாக்குபடி ஊர் நாட்டாமைகள் ஊர் கவுண்டர்கள் மூப்பன்கள் இணைந்து சின்னாண்டியி‌ன் பேரக்குழந்தையான 9 வயது சக்திவேலை மலை கிராமங்களின் தலைமை நாட்டாமையாக தேர்வு செய்தனர்.

அதனைத்தொடர்ந்து 3 மாவட்டங்களைச் சேர்ந்த மலை கிராம மக்களின் தலைமை நாட்டாமையாக தேர்வு செய்த சக்திவேலின் சொந்த ஊரான மல்லிமடு கிராமத்தில் கடந்த மாதம் 16ஆம் தேதி பட்டம் சூட்டும் விழா நடைபெற்றது. ஜவ்வாது மலை உட்பட்ட திருவண்ணாமலை, வேலூர் திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த நாட்டாமைகள், ஊர் கவுண்டர்கள், மூப்பன்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து மலைவாழ் மக்கள் வழக்கம்படி 9 வயது சக்திவேலுக்கு பட்டம் சூட்டி மலைவாழ் மக்களின் தலைமை நாட்டானாக தேர்வு செய்து செங்கோல் அளித்தனர். தலைமை நாட்டாமையாக தேர்வு செய்யப்பட்ட சக்திவேல் நாகலூர் கிராமத்திலுள்ள ஊராட்சி பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருவது வருகிறார் இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில் ஜவ்வாதுமலை கலாச்சாரத்தை பொறுத்தவரையில் நாட்டாமையின் சொல்படிதான் கிராமமக்கள் செயல்படுவார்கள் அதேபோல மலைவாழ் மக்கள் அனைவரும் கிராமங்கள்தோறும் ஊர் கவுண்டர் நாட்டாமை, மூப்பன் போன்ற மூன்று நபர்களின் கட்டுப்பட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடந்துகொள்வார்கள் என்றும் மலை கிராமங்களில் உள்ள ஊர் கவுண்டர், ஊர் நாட்டாமை ,மூப்பன் உள்ளிட்டவர்கள் தலைமை நாட்டாமையின் தீர்ப்புக்கு அடிபணிந்து செயல்படுவார்கள். ஆகவே ஒன்பது வயது சிறுவன் ஆனாலும் அவன் உத்தரவுக்கு கீழ்ப்படிந்து தான் மலை கிராம மக்கள் செயல்படுவோம் என்றும் உறுதி அளித்தனர். மேலும் சிறுவனுக்கு தகுந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சிறுவனுக்கு சரியான வயது இல்லை அதுவரை அவரது தந்தை பார்த்துக்கொள்வார்கள், தானாகவே பல்வேறு பிரச்சினைகளை தீர்வு செய்து முடிவு எடுக்கும் அளவிற்கு அவருக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகின்றது என தெரிவித்தனர்.

வேலூர் வீடியோக்கள்

Prajwal Revanna : ”என்னை மன்னிச்சிருங்க அப்பா! மன உளைச்சல் ஆகிட்டேன்” வீடியோ வெளியிட்ட பிரஜ்வல்
Prajwal Revanna : ”என்னை மன்னிச்சிருங்க அப்பா! மன உளைச்சல் ஆகிட்டேன்” வீடியோ வெளியிட்ட பிரஜ்வல்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITYMRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
Vikravandi Child Death: குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
Embed widget