2 லட்சம் செலவில் Bench!மாணவர்களுக்கு farewell பரிசு-அசத்திய அரசு பள்ளி ஆசிரியை | Villupuram News
விழுப்புரம் அருகேயுள்ள மரகதபுரம் அரசு துவக்க பள்ளியில் ஓய்வு பெற உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியை தான் கற்பித்த அரசு பள்ளி மாணவர்கள் அமருவதற்கு இரண்டு லட்சம் ரூபாய் செலவில் பெண்ச் (இருக்கைகள்) வாங்கி கொடுத்துள்ளது நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
விழுப்புரம் அருகேயுள்ள மரகதபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக அரசி என்பவர் கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் வருகின்ற மே மாதத்துடன் பணி ஓய்வு பெற உள்ள நிலையில் பணி ஓய்வு பெறுவதற்கு முன்பாக பள்ளிக்கு தேவையானதை செய்ய வேண்டும் என என்னியுள்ளார். அதன் பேரில் தனது பேத்தி சஹானாவிடம் மாணவர்கள் மழை காலங்களில் கல்வி பயிலும் போது சிமெண்ட் தரை அதிக ஈரப்பதத்துடன் இருப்பதால் மாணவர்கள் அமரும் போது உடல் நலக்குறைபாடு ஏற்படுவதாக தெரிவித்து இருக்கைகள் வாங்கி தர வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து அவரது பேத்தி சஹானாவும்,அவர்களது நண்பர்களும் இணைந்து ஒரு லட்சமும், பள்ளி தலைமை ஆசிரியர் ஒரு லட்சம் என இரண்டு லட்சம் செலவு செய்து 60 மாணவர்கள் பள்ளி மாணவ மாணவிகள் அமருவதற்கு 30 (பெண்ச்)இருக்கைகள் வாங்கி கொடுத்துள்ளனர்.
தலைமை ஆசிரியரின் சீரிய முயற்சியால் பள்ளி மாணவ மாணவிகள் தனியார் பள்ளிக்கு நிகராக பெண்ச் இருக்கைகளில் அமர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். இதனால் மழை காலங்களில் விடுப்பு எடுக்காமல் மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிவதாகவும் மகிழ்சியாக இருக்கைகளில் அமர்ந்து கல்வி பயில்வதாக தெரிவிக்கின்றனர். அரசு துவக்க பள்ளிக்கு பெண் தலைமை ஆசிரியர் பெண்ச் (இருக்கைகள் )வாங்கி கொடுத்துள்ளது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





















