TNPSC Exam : தேர்வு நேரம் மாற்றம் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Exam : 2022ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் இன்று வெளியிட்டார். அதன்படி, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேதி வரும் மே 21 ம் தேதி தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்றும், மார்ச் 23 ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தொடர்பான அறிவிப்பாணை வருகிற பிப். 23 ம் தேதி டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்





















