(Source: ECI/ABP News/ABP Majha)
ABP - C Voter Exit Poll Results | மம்தாவை பின்னுக்கு தள்ளிய மோடி மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி
ABP c voters exit poll முடிவில் மேற்கு வங்கத்தில் மம்தாவை பின்னுக்கு தள்ளிவிட்டு பாஜக முன்னுக்கு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
வடமேற்கு மாநிலங்களில் பாஜகவிற்கு கடுமையான சவாலை கொடுக்கும் மாநிலமாக திகழ்ந்து வருகிறது மேற்கு வங்கமும் அதன் முதல்வர் மம்தா பானர்ஜி. இந்நிலையில் இறுதி கட்ட தேர்தலும் நிறைவடைந்ததை அடுத்து, ஏ பி பி மற்றும் சி ஓட்டர்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
அதில் இம்முறை மம்தா பானர்ஜியின் திருநாமுல் காங்கிரஸை பின்னுக்கு தள்ளிவிட்டு, பாஜக அதிகப்படியான இடங்களை கைப்பற்றும் என்று முடிவுகள் வெளிவந்துள்ளது.
குறிப்பாக மொத்தம் உள்ள 42 தொகுதிகளில், பாஜக கூட்டணி 23 முதல் 27 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், திரிணாமுல் காங்கிரஸ் 13 முதல் 17 தொகுதிகளிலும், I.N.D.I.A கூட்டணி ஒன்று முதல் மூன்று தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வந்துள்ளது.
வாக்கு சதவீதத்தை பொறுத்த அளவில் பாஜக கூட்டணிக்கு 42.5% வாக்குகளும், திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணிக்கு 41.5% வாக்குகளும், I.N.D.I.A கூட்டணிக்கு 13.2% வாக்குகளும் கிடைக்கும் என்று ஏ பி பி சி ஓட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அப்படி பார்க்கையில் 2019 தேர்தலில் மேற்கு வங்கத்தில் 18 தொகுதிகளை மட்டுமே வென்றிருந்த பாஜக இந்த முறை கூடுதலாக ஐந்து முதல் ஒன்பது தொகுதிகள் பெரும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அப்படி நடந்தால் கடந்த முறை 22 தொகுதிகளை கைப்பற்றி இருந்த திரிணாமுல் காங்கிரஸ் இம்முறை சில முக்கிய தொகுதிகளை பாஜகவுடன் இலக்கும் என்று தெரிகிறது.
இன்னும் NDTV ஜன் கி பாத், இந்தியா நியூஸ் டி டைனமிக், ரிபப்ளிக், போன்ற பல்வேறு நிறுவனங்கள் இதேபோன்று மம்தாவுக்கு இம்முறை பின்னடைவு ஏற்படும் என்று கணித்துள்ளனர்.
ஐஎன்டிஐஏ கூட்டணிக்கு மம்தா ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் மேற்கு வங்கத்தில், காங்கிரசும் - திரிணாமுல் காங்கிரஸும் தனித்தனியே தேர்தல்களை சந்தித்தனர். இந்த சூழலில் பாஜகவின் கையே வரவிருக்கும் தேர்தல் முடிவுகளில் ஓங்கும் என்று வெளியாகி இருக்கும் செய்தி அரசியல் களத்தில் புயலை கிளப்பியிருக்கிறது.