Vijay TVK Maanadu |‘’யாரும் உள்ள போகமுடியாது’’மிரட்டும் பவுன்சர்கள்!தவெக மாநாடு ATROCITIES
தமிழக வெற்றிக்காக கட்சியினர் மாநாட்டு திடலுக்குள் செய்தியாளர்களை அனுமதிக்காமல் பவுன்சர்களை வைத்து மிரட்டும் தொணியில் பேசுவதும், பொதுமக்கள் கூட செல்ல அனுமதிக்காமல் சாலையில் குறுக்கிட்டு பேரிகார்ட் அமைத்து அராஜகத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகின்ற 27 ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே உள்ள வி சாலையில் நடைபெற உள்ளது. தவெக மாநாடு பேச்சு தொடங்கிய முதலே விமர்சினதிற்குள்ளாகி வருகிறது. மாநாடு பணிகள் அலச்சியமாக செயல்படுவதாமகவும் கூறப்பட்டது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் நகரத்திற்கு வந்துவிட்டு நிர்வாகிகளை அழைக்கிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஊடகத்தினரின் நிலைமை இதைவிட மோசம். மாநாட்டு பணிகளில் அப்படி என்ன ரகசியம் என்று தான் புரியவில்லை. மாநாட்டுக்கான எந்த வித முன் யோசனையும், முன் தயாரிப்பும் கட்சி தலைமையிடத்தில் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாநாடு திடலுக்கு ஒதுக்குப்புறமாக இருந்த மாநில மரமாக அறிவிக்கப்பட்ட ஐந்திற்கும் மேற்பட்ட பனைமரத்தை பந்தல் நிர்வாகம் அகற்றியது இது குறித்த செய்தி வெளிவந்த நிலையில், தற்போது செய்தியாளர்கள் செய்தி எடுக்க மாநாட்டு திடலுக்குச் சென்ற பொழுது மாநாட்டு திடலுக்கு செல்லும் சாலையில் பவுன்சர்களை வைத்து யாரையும் உள்ளே அனுமதிக்காமல் மிரட்டும் தொணியில் பேசி வருகின்றனர். மேலும் விவசாய நிலங்களுக்கு செல்பவர்களையும் மிரட்டும் விதமாக பேசி வருகின்றனர்.
பவுன்சர்கள் தலைமையில் யாரையும் உள்ளே அனுமதிக்க கூடாது என தெரிவித்ததாகவும் அதனால் நாங்கள் தடுத்து நிறுத்துகிறோம் என தெரிவிக்கிறார்கள். இருப்பினும் அரசு சார்பில் போடப்பட்ட தார் சாலையில் பொதுமக்கள் கூட செல்ல அனுமதிக்காமல் சாலையின் குறுக்கிட்டு பேரிகார்ட் அமைத்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...