மேலும் அறிய

Smriti Irani Praises Rahul |”WHITE டி ஷர்ட் ரகசியம்”இளைஞர்களை கவரும் ராகுல்!ஸ்மிருதி இராணி பாராட்டு!

ராகுல் காந்தியின் வைட் டிஷர்ட் இளைஞர்களை கவர்கிறது, உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ, ராகுல் காந்தி ஒரு வித்யாசமான அரசியலை முன்னெடுக்கிறார். அவரை குறைத்து மதிப்பிட கூடாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ள கருத்து பாஜகவினருக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிய எதிரிகள் வா என்னை எதிர்கவே, பழைய எதிரிகள் உன் ரசிகர் படையிலே என்று தீ தளபதி சாங்கில் வரும் வரிகளை ராகுல் காந்தியின் ஆதரவாளர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

2019ல் உத்திர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தியை ஸ்மிருதி இராணி தோற்கடித்து மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால் அண்மையில் நடந்து முடிந்த 2024 மக்களவை தேர்தலில், அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட அவரால் வெற்றி பெற முடியவில்லை. ஆனாலும் ஸ்மிருதி இராணி மற்றும் ராகுல் காந்தி இடையேயான் ரைவல்ரி என்பதி இந்திய அரசியலில் கவனிக்கதக்க ஒன்று. இந்நிலையில் வழக்கமாக கடுமையாக ராகுல் காந்தியை விமர்சிக்கும் வழக்கம் கொண்ட ஸ்மிருதி இராணி, முதல் முறையாக ராகுல் காந்தியின் அரசியலை அங்கீகரிக்கும் வகையில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

தி டாப் ஆங்கிள் என்ற பாட்கெஸ்டில் கலந்துகொண்டு பேசிய ஸ்மிருதி இரானியிடம், நெறியாளர் சுஷாந்த் சின்ஹா ராகுல் காந்தி அரவிந்த் கெஜ்ரிவால் இவர்கள் இருவரும் யாரை அரசியல் களத்தில் எதிர்கொள்வது மிகவும் சவாலானது என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. 

அதற்கு ஆம் ஆர்மி காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே ஒரே கொள்கைகளைக் கொண்டதுதான், ஒருவர் ஊழல் சிக்கி தற்போது சிறைக்கு சென்று விட்டார். 

ஆனால் எனக்கு தோணுறது என்னன்னா, ராகுல் காந்தியின் அரசியலில் ஒரு மாற்றம் வந்துள்ளது. ராகுல் காந்தி வெற்றியை சுவைத்து விட்டதாக நினைக்கிறார். நீங்கள் கவனித்து பார்த்தால் தெரியும், இத்தனை வருட காங்கிரஸ் அரசியலில், அவர்கள் ஜாதி போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து எங்கு சென்று பேசினாலும், முதல் முறையாக ஒரு இயந்திரம் போல் அனைவரும் ஒருங்கிணைந்து பேசுகிறார்கள் விமர்சிக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் டி-ஷர்ட் அணிந்துக்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி, அவருக்கு தெரிந்துள்ளது இந்த வைட் டி ஷர்ட் மூலம் இளைய தலைமுறைக்கு நாம் மெசெஜை கொண்டு சேர்க்க முடியும் என்று. அதனால் நாம் அவருடைய பாதையை தவறாக புரிந்துகொண்டு, இதெல்லாம் எடுபடாது என்று நினைக்க வேண்டாம். நமக்கு ராகுல் செய்வதில் விருப்பம் உண்டோ இல்லையோ, ஒரு வித்யாசமான அரசியலை முன்னெடுத்து வைக்கிறார் ராகுல்.

இரண்டு விதமான அரசியல் வாதிகள் உண்டு, சிலர் கொடுக்கும் ஸ்கிரிப்டை அப்டியே செய்வார்கள், சில அரசியல்வாதிகள் தனக்கென்று ஒரு வரலாற்றை ஸ்கிரிப்ட் செய்வார்கள். என்று ஸ்மிருதி இராணி பேசியுள்ளார்.

இந்நிலையில் ராகுல் காந்தியின் டி ஷர்ட் அரசியல் குறித்து அவர் பேசியுள்ளதை, சமூக வளைத்தளங்களில் பதிந்து, ராகுல் காந்தியின் புதிய ரசிகை என்று காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். இது வைரலாக பரவி வருகிறது.

அண்மையில் மக்களவை தேர்தலில் தோல்வியடைந்த ஸ்மிருதி இராணியை காங்கிரஸ் கட்சியினர் சிலர் சமூக வளைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சாதாரணம், அதனால் ஸ்மிருதி இராணிக்கு எதிரான தறைகுறைவான விமர்சனங்களை தவிருங்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் வீடியோக்கள்

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்
Vetrimaaran Vijay | விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget