Sirkazhi Govt Hospital Rain : மருத்துவமனைக்குள் மழை..நோயாளிகள் அவதி.. மயிலாடுதுறை பரிதாபம்!
சீர்காழி அரசு தலைமை மருத்துவமனையில் சீலிங்கை பிரித்து கொண்டு மழைநீர் உள்ளே வருவதால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர். மேலும் மழைநீரால் நிரம்பி குளம்போல் காட்சியளிக்கும் மருத்துவமனையின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து சீர்காழி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை பெயரளவில் மட்டுமே தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வருகின்றது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் தொடர்ச்சியாக இங்கு மருத்துவர், செவிலியர்கள், டெக்னிஷியன்கள் பற்றாக்குறை, கட்டங்கள் பிரச்சனை என பல பிரச்சினைகள் நிலவி வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.
இந்த சூழலில் தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் அடிக்கடி மழை பெய்து வரும் நிலையில், கட்டட பழுது காரனமாக மருத்துவமனையில் உள்ளே மழைநீர் பெய்து வருகிறது..கனமழையால் மருத்துவனையின் உள்ளே குளம்போல தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முடியாத நிலைஏற்பட்டு நோயாளிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இதனை சிகிச்சைக்காக சென்ற நோயாளிகள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் கவனித்து, மருத்துவமனையை சீர்செய்ய விரைந்து நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.