மேலும் அறிய

டம்மியான செங்கோட்டையன்? ப்ளானை தவிடுபொடியாக்கிய EPS! கொங்கு நிலவரம் என்ன?

காலக்கெடு விதித்து அதிரடி காட்டலாம் என கணக்கு போட்ட செங்கோட்டையனை இபிஎஸ் கண்டு கொள்ளததால் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று, இதற்கு சும்மாவே இருந்திருக்கலாம் என செங்கோட்டையன் நொந்து போய் இருப்பதாக சொல்கின்றனர். PRESSMEET-க்கு பிறகு கொங்கு வட்டாரத்திலேயே செங்கோட்டையனுக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை என கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. 

தில் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, தினகரன், ஒபிஎஸ்-ஐ  மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். பிரிந்தவர்களை ஒருங்கிணைக்க 10 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அந்த மனநிலையில் உள்ளவர்கள் ஒன்றாக சேர்ந்து ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுவோம் என கடந்த செப்டம்பர் 5ம் தேதி PRESSMEET வைத்து காலக்கெடு விதித்தார். 

அவர் சொன்ன 10 நாட்கள் இன்றுடன் நிறைவடைகிறது. இந்தநிலையில் உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு வந்த செங்கோட்டையனிடம் காலக்கெடு பற்றி கேள்வி கேட்ட போது, என்னைப் பொறுத்தவரை இந்த இயக்கம் நன்றாக இருக்க வேண்டும். எல்லோரும் இணைய வேண்டும். வெற்றி என்ற இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான். இதுதான் எனது ஆசை. இன்னும் ஒரு மாதத்தில் அனைவரும் ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” சாஃப்ட்டாக சொல்லிவிட்டு நகர்ந்தார்.

காலக்கெடு விதித்த பிறகு இபிஎஸ் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்த்த செங்கோட்டையனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் அதற்கு அடுத்த நாளே செங்கோட்டையனின் பதவியை பறித்தார் இபிஎஸ். கழக அமைப்பு செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி உத்தரவிட்டார். அதேபோல் செங்கோட்டையனுக்கு நினைத்த அளவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. கட்சியின் முக்கிய புள்ளிகளே இபிஎஸ் பக்கம் நின்றதால் செங்கோட்டையன் தனித்து விடப்பட்டார். 

கொங்கு மண்டலத்திலேயே செங்கோட்டையனுக்கு செல்வாக்கு இல்லாமல் போனது. கோபிசெட்டிபாளையத்தை தவிர மற்ற பகுதிகளை சேர்ந்தவர்கள்  யாரும் செங்கோட்டையனை சந்திக்க கூட வரவில்லை என சொல்கின்றனர். சசிகலா, ஓபிஎஸ், டிடிவி ஆதரவாளர்கள் தான் செங்கோட்டையனுக்கு பக்கபலமாக நின்றனர். அதனால் அவர்கள்தான் அடுத்தடுத்து செங்கோட்டையனை சந்திக்க வந்ததாகவும், வேறு யாரும் அந்த பக்கமே வரவில்லை என்றும் பேச்சு அடிபடுகிறது. 

செங்கோட்டையன் வகித்த ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவியை எம் எல் ஏ ஏ.கே.செல்வராஜிடம் ஒப்படைத்தார் இபிஎஸ். அதன்பிறகு செங்கோட்டையன் ஆதரவாளர்கள் அவரது பக்கம் திடீர் பல்டி அடிக்க ஆரம்பித்தனர். கோபிச்செட்டிப்பாளையம், பவானிசாகர் சட்டசபை தொகுதிகளைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் செல்வராஜை நேரில் சந்தித்து பேசினர். செங்கோட்டையனின் ஆதரவாளர் என கூறப்படும் பவானிசாகர் தொகுதி எம்.எல்.எ. பண்ணாரியும் செல்வராஜை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். நாங்கள் எப்போதும் இபிஎஸ் பக்கம் தான் என்பதை தெளிவாக சொல்லிவிட்டார்.

இப்படு ஈரோடு அதிமுக வட்டாரத்திலேயே நிலைமை செங்கோட்டையனின் கைகளை மீறி சென்றுள்ளது. செங்கோட்டையனுக்கு ஆதரவாக இருந்தவர்கள் கூட இன்னும் சில நாட்களில் இபிஎஸ்-ஐ சந்தித்து அந்தப் பக்கம் சாய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. காலக்கெடு விதித்து பலத்தை காட்டலாம், இபிஎஸ்-ஐ வழிக்கு கொண்டு வரலாம் என நினைத்த செங்கோட்டையனின் ப்ளான் தலைகீழாக மாறி அவருக்கே நெருக்கடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

அரசியல் வீடியோக்கள்

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விவசாயிகளின் இந்த நிலைக்கு தவெக அரசின் முதிர்ச்சியற்ற செயல்பாடே காரணம் - கொந்தளித்த தினகரன்
விவசாயிகளின் இந்த நிலைக்கு தவெக அரசின் முதிர்ச்சியற்ற செயல்பாடே காரணம் - கொந்தளித்த தினகரன்
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை
உள்ளாட்சித் தேர்தலில் பலத்தைக் காட்டுமா தவெக? கட்டம் கட்டத் தயாரான திமுக, அதிமுக! களத்தில் கால்பதிப்பது யார்?
உள்ளாட்சித் தேர்தலில் பலத்தைக் காட்டுமா தவெக? கட்டம் கட்டத் தயாரான திமுக, அதிமுக! களத்தில் கால்பதிப்பது யார்?
ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு ஜெயிலர் 2 டிக்கெட் இலவசம்...தஞ்சையில் புதிய முயற்சி
ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு ஜெயிலர் 2 டிக்கெட் இலவசம்...தஞ்சையில் புதிய முயற்சி

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget