மேலும் அறிய

Rahul gandhi On Modi And Adani | அதானி குறித்த கேள்வி”இது பர்சனல் மேட்டரா மோடி” கோபமான ராகுல் | BJP

அமெரிக்கா சென்றிருந்தபோது, பத்திரிகையாளரின் அதானி குறித்த கேள்விக்கு மோடி அளித்த பதில் குறித்து, ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ள இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி, இந்தியாவில் தனது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம், சில ஒப்பந்தங்களை கைப்பற்றுவதற்காக, இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொண்டதாகவும், அந்த ஒப்பந்தங்களுக்கான முதலீட்டை அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச முதலீட்டாளர்களிடம் பெற்றபோது, லஞ்ச விவகாரத்தை மறைத்ததாக அதானி மீது மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.அமெரிக்காவில் உள்ள ஊழலுக்கு எதிரான கொள்கைகள் மற்றும் வழக்கங்களை மீறி, லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொண்டதை மறைத்து, அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து கடனாகவும், பத்திரங்கள் மூலமாகவும் 3 பில்லியன் டாலர்களை அதானி குழுமம் பெற்றுள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அதானி குழுமம், அதற்கு ஆதாரங்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் அமெரிக்க பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அமெரிக்க அதிபருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,ட அதானி மீதான குற்றச்சாட்டு குறித்து, ட்ரம்ப்பிடம் பேசினாரா என மோடியை நோக்கி செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மோடி, இருநாடுகளின் முக்கிய பிரதிநிதிகள், இதுபோன்ற தனிப்பட்ட பிரச்னைகள் குறித்து ஒருபோதும் விவாதிப்பதில்லை என பதிலளித்தார்.

மோடியின் இந்த பதில் குறித்து விமர்சித்துள்ள ராகுல் காந்தி, அதானி விவகாரம் தனிப்பட்ட விஷயம் அல்ல என்றும், அது நாட்டைப் பற்றியது என்றும் கூறியுள்ளார். மேலும், அவர் உண்மையாக இந்தியாவின் பிரதமராக இருந்தால், அதானி விஷயம் குறித்து ட்ரம்ப்பிடம் பேசியிருப்பார் என்றும், அதை விசாரிக்கச் சொல்வதாகவும், தேவைப்பட்டால் அதானியை விசாரணைக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறியிருப்பார் என்றும், ஆனால் அது தனிப்பட்ட விஷயம் என்று மோடி கூறிவிட்டார் எனவும் கடுமையாக சாடியுள்ளார்.

நரேந்திர மோடியின் நண்பர் அதானி மீது அமெரிக்காவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இந்தியாவில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது நாடு தொடர்பான மிக முக்கியமான விஷயம்.

பிரதமர் மோடி அதானி பற்றிப் பேசியிருக்க வேண்டும்.

அதானி ஊழல் செய்ததாக அமெரிக்கா கூறுகிறது. 

ஆனால் இந்தியாவில் மோடி தனது நண்பர் அதானியிடம் எந்த கேள்வியும் கேட்காதது ஏன்?

இந்தியாவின் பிரதமராக இருந்தால், அதானி விஷயம் குறித்து ட்ரம்ப்பிடம் பேசியிருப்பார். 

தேவைப்பட்டால் அதானியை விசாரணைக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறியிருப்பார். 

ஆனால் அது தனிப்பட்ட விஷயம் என்று மோடி கூறிவிட்டார். 

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை... கடந்து வந்த பாதை ஓர் பார்வை!
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை... கடந்து வந்த பாதை ஓர் பார்வை!
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா! பெயர் மாற்றும் படலம் குறித்து திருமாவளவன் அதிரடி பேச்சு
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா! பெயர் மாற்றும் படலம் குறித்து திருமாவளவன் அதிரடி பேச்சு

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Embed widget