Karur Stampede Supreme Court | கரூர் பெரும் துயரம் நீதிமன்றம் சொன்னது என்ன? வெளியான அதிரடி உத்தரவு
கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்
தவெக தலைவர் விஜயின் கரூர் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். காவல்துறையினர் முறையான பாதுகாப்பு கொடுக்காததே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று எதிர்க்கட்சிகளும், காவல்துறை சார்பில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை TVK தலைவர் பின் பற்றாமல் இருந்ததே இவ்வளவு பெரிய உயிரிழப்புகளுக்கு காரணம் என்று ஆளும் கட்சி தரப்பினரும் கூறி வருகின்றனர்.
இச்சூழலில் தான் இந்த விவகாரத்தை விசாரணை செய்து வந்த கரூர் போலீசாரின் விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே நேரம் வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் தான் சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை ஏற்காத தவெக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது தவறு. நடந்த சம்பவத்தை சி.பி.ஐ விசாரணைக்கு விட வேண்டும் என்றும் முறையிடப்பட்டது.
இச்சூழலில் தான் இந்த வழக்கில் உச்ச நீதி மன்றம் இன்று அதிரடியான தீர்ப்பை அளித்துள்ளது. அதாவது கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐக்கு ஒதுக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைத்தல் - நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை குடிமக்களின் உரிமை என்பதில் சந்தேகம் இருக்க முடியாது . விசாரணையை கண்காணிக்க எஸ்ஐடி குழு - ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் விசாரணை - சிபிஐ மேற்கொள்ளும் விசாரணையை இது கண்காணிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்த முதன்மை நீதிபதி பெஞ்ச் முன் உள்ள வழக்கு, குற்றவியல் ரிட் மனுவாக எவ்வாறு பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலிடம் அறிக்கைகளைக் கேட்டுள்ளோம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.






















