மேலும் அறிய

Annamalai on Amit Shah | "எனக்கு பதவியே வேணாம்"ஆத்திரத்தில் அண்ணாமலை அமித்ஷாவிடன் போட்ட கண்டிஷன்

அதிமுகவோட கூட்டணியே வைக்கக் கூடாது, அப்படியே வச்சாலும் இபிஎஸ்-ஐ முதலமைச்சர் வேட்பாளர் ஆக்க கூடாது, இல்லனா நான் மாநில தலைவர் பதவியவே தூக்கி எறிய தயார் என பாஜக தலைமையிடம் அண்ணாமலை முரண்டு பிடித்து வருவதாக சொல்கின்றனர்.

அதிமுக- பாஜக மீண்டும் கூட்டணி அமைப்பதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா இடையே டெல்லியில் நடந்த சந்திப்பு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. அதுவும் முதல்வர் வேட்பாளர் நான் தான், ஓபிஎஸ், டிடிவியுடன் மீண்டும் சேர மாட்டேன் என ஸ்ட்ரிக்ட்டாக கண்டிஷன் போட்டு இபிஎஸ் கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் அண்ணாமலை எங்கள் கட்சியினரை பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும் என்றும் அமித்ஷாவிடம் கறாராக சொன்னார் இபிஎஸ்,

இபிஎஸ் டெல்லியில் இருந்து கிளம்பிய அடுத்த நாளே அண்ணாமலையை டெல்லிக்கு வரவழைத்தார் அமித்ஷா. அவரை நேரில் வைத்து இந்த கூட்டணி அமைந்தே ஆக வேண்டும், அதிமுகவினரை எதுவும் சொல்லக் கூடாது, இபிஎஸ் சொல்வதை கேட்க வேண்டும் என அண்ணாமலைக்கு ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்டுள்ளார் அமித்ஷா. அதேபோல் மீட்டிற்கு முன்னால் என்னிடம் எதுவுமே கேட்கவே இல்லையே தனது தரப்பையும் சொல்லி புலம்பியுள்ளார் அண்ணாமலை.

இந்தநிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதில் அண்ணாமலைக்கு விருப்பமே இல்லை என்றும், அதனை அமித்ஷாவிடமே நேரடியாக சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அப்படியே கூட்டணி வைத்தாலும் முதலமைச்சர் வேட்பாளராக இபிஎஸ்-ஐ நிறுத்தக் கூடாது, இல்லையென்றால் நான் தலைவர் பதவியையே ராஜினாமா செய்து கொள்கிறேன் என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டதாக தெரிகிறது. இருந்தாலும் அதிமுக கூட்டணி அமைந்தே ஆக வேண்டும் என அமித்ஷா விடாப்பிடியாக இருப்பதால் அண்ணாமலை அப்செட் ஆகியுள்ளதாக சொல்கின்றனர். 

சுமார் 1 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு வெளியே வந்த அண்ணாமலையும் கட்சி நலனை விட தமிழக மக்களின் நலனே முக்கியம், எனக்கென்று தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. கட்சிதான் முதன்மையானது என சொல்லி ஹிண்ட் கொடுத்தார்.

அதேபோல் கோவை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, எந்த ஒரு தலைவர் மீதோ, கட்சியின் மீதோ கோபம் கிடையாது. நான் யாருக்கும் எதிரானவனும் கிடையாது. நான் தொண்டனாக பணியாற்ற தயார் என்று டெல்லியில் சொல்லி இருக்கிறேன். அதன் பொருளையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு பதவியின் மீது ஆசை இல்லை” என தெரிவித்தார். இதன்மூலம் பதவியை ராஜினாமா செய்ய கூட நான் தயார் என்ற மறைமுக மெசேஜை டெல்லி தலைமைக்கு அண்ணாமலை மீண்டும் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. அமித்ஷாவுடன் நடந்த சந்திப்பு திருப்திகரமாக இல்லை என்பதையே அண்ணாமலையின் பேச்சுகள் காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.

அரசியல் வீடியோக்கள்

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
ABP Nadu Top 10, 15 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP Nadu Top 10, 15 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget