ADMK BJP Alliance | டெல்லி பறக்கும் EPSமாறும் காட்சிகள்?புதுதெம்பில் ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இந்த வருடம் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி நிலைப்பாட்டில் ஏற்பட உள்ள இந்த மாற்றம் எந்த கட்சிக்கு சாதகமாக அமைகிறது யாருக்கு பாதகம் என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
2026 தேர்தலுக்கும் அதிமுக எப்படியாவது தனது பலத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக மூத்த தலைவர்கள சிலர் கடும் நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது.
அதாவது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தலைகளை மீண்டும் கட்சிக்கு உள்ளே கொண்டு வருவதற்கான பணிகள் தொடங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறதாம். ஒருங்கிணைந்த அதிமுக உருவாக வேண்டும். சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் மீண்டும் இனைக்கப்பட வேண்டும் என்றெல்லாம் ப்ரசர் உள்ளதாம். மேலும் கட்சி தலைமையிலும் மாற்றம் கொண்டு வரவேண்டி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மிகப்பெரிய நெருக்கடியில் உள்ளாராம் ஈபிஎஸ்.
இதிலிருந்து விடுபட ஈபிஎஸ் வேறொரு ப்ளான் போட்டு காய்களை நகர்த்த தொடங்கிவிட்டாராம். அதாவது ஓபிஎஸ் சசிகலாவை இணைப்பதற்கு பதிலாக பாஜகவுடனே இணைந்து விடலாம் என்ற மனநிலைக்கு ஈபிஎஸ் வந்துவிட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக ஈபிஎஸ் விரைவில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க உள்ளாராம் அப்போது கூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழ்நாடு அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது.
இந்த மாற்றம் திமுகவுக்கு சாதகமாக உள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் இதன்மூலம் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுக பாஜகவுடன் இருப்பதால் அந்த பக்கம் போக வாய்ப்பே இல்லை என்ற புதுதெம்பு திமுகவுக்கு உருவாகியுள்ளது.