(Source: Poll of Polls)
கரூர் துயரம்- யார் காரணம்?NDA குழு பகீர் REPORT ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக | NDA Team On Karur Stampade
அரசின் அலட்சியத்தால் தான் கரூரில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக பாஜக தலைமையிடம் உண்மை கண்டறியும் குழு REPORT கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அதிகாரிகளுக்கு எதிராக இன்னும் சில விவரங்களையும் கொடுத்துள்ளதாக சொல்கின்றனர்.
கரூரில் தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் குறித்து விரிவான விசாரணை அறிக்கை சமர்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். தேபோல் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் எம்.பி ஹேமமாலினி தலைமையில் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு கரூருக்கு நேரடியாக வந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையும், பிரச்சாரத்தில் கலந்து கொண்டவர்களையும் நேரில் சந்தித்து விசாரணை நடத்தியது. இதனை தொடர்ந்து இந்த குழுவில் இடம்பெற்ற எம்.பி அனுராக் தாக்கூர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், ‘இந்த சம்பவத்திற்கு அரசு முழு பொறுப்பேற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பின்வரும் அம்சங்களை உள்ளடக்கிய ஓர் அறிக்கையை விரைவில் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட வழிவகுத்த முதன்மைக் காரணிகள் மற்றும் நிகழ்வுகளின் வரிசை என்ன? நிகழ்வுக்கு முன்னும் பின்னும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், நிர்வகிக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தடுப்பு நடவடிக்கைகள் இருந்தபோதும் இந்த சோகம் ஏற்பட காரணமான குறைபாடுகள் என்ன? எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க மாநில அரசு திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்று விளக்கம் கேட்கப்பட்டது.
இந்தநிலையில் எம்.பி ஹேமமாலினி தலைமையிலான குழு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் கரூர் துயர சம்பவம் நடந்ததாக ரிப்போர்ட் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3000 பேரை மட்டுமே இருக்கக்கூடிய இடத்தில் அனுமதி கொடுத்ததாகவும் ஆனால் 30,000க்கும் அதிகமானவர்கள் கூடியதால் தான் விபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக சொல்கின்றனர்.
விஜய் தாமதமாக வந்ததால் அதிக கூட்டம் கூடி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அந்த இடத்தில் இருந்த கழிவுநீர் கால்வாயில் விழுந்து உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.பிக்கள் குழு பரிந்துரைத்துள்ளதாக சொல்கின்றனர். ஆய்வுக்கு சென்றபோது தங்களை சந்திக்க கரூர் ஆட்சியர் மறுத்ததால் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லையென்றும் உண்மை கண்டறியும் குழு ரிப்போர்ட்டில் சந்தேகத்தை கிளப்பியிருப்பதாக சொல்கின்றனர்.





















