Vazhukku maram : கொட்டும் மழையில் சாகசம்வழுக்கு மரம் ஏறும் போட்டிமெய்சிலிர்க்க வைத்த வீரர்கள்
சிங்கம்புணரி அருகே நடைபெற்ற வழுக்கு மரம் ஏறுதல் போட்டியில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வீரர்கள் சாகசம் செய்து அசத்திய சம்பவம் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே படமிஞ்சி கிராமத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக தமிழகத்தின் பாரம்பரியமான கலாச்சார வழுக்கு மரம் ஏறும் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்நிலையில் போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் கனமழை கொட்டியது.. ஒரு குழுவிற்கு 9 வீரர்கள் என்ற அடிப்படையில் மூன்று குழுக்களில் இருந்து 27 பேர் வழுக்கு மரம் ஏறும் வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். கொட்டும் மழையிலும் வீரர்கள் எண்ணை பூசப்பட்ட 50 அடி உயரம் உடைய வழுக்கு மரத்தில் ஏறினர்.. இளைஞர்களின் இந்த சாகச முயற்சி காண்போர் அனைவரையும் மகிழ்ச்சி அடைய செய்தது. இதனையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கொட்டும் மழையில் வீரர்கள் சறுக்கு மரம் ஏறும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிங்கம்புணரி அருகே நடைபெற்ற வழுக்கு மரம் ஏறுதல் போட்டியில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வீரர்கள் சாகசம் செய்து அசத்திய சம்பவம் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.





















